22 மே 2011

மஞ்சள் துண்டின் மனசாட்சி பேசுகிறது.....


தியாகி( !!) கனிமொழியின் கைதை பற்றியும், தேர்தல் தோல்வி பற்றியும் மஞ்சள் துண்டு மகாராஜா தொண்டர்களுக்கு எழுதியுள்ள குப்பை ....


தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது. இதற்கு என்ன காரணம்?( அட கண்றாவியே...இன்னுமா உங்களுக்கு தெரியவில்லை )

இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா? தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்குள் போக விரும்பவில்லை.( கனிமொழியா, பேரன்களா, அல்லது நீங்கள் திரைக்கதை வசனம் எழுதியா படங்களா ? இதை யார் சேர்ப்பார் ?)

இந்தியாவில் அல்லது தமிழகத்தில் அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஏராளமாகப் பணம் சம்பாதித்துள்ளது கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரசாரத்தைத் தொடர்கிறார்கள்.( உண்மையை சொல்லாமல் இருந்தாதானே தப்பு !)

அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதைத் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.( மனசாட்சி இல்லாமல் பேசுவது என்றால் இதுதானோ?)

சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்தபோது கிடைத்த ரூ.100 கோடியில் வருமான வரி போக மீதி ரூ.77.5 கோடி கிடைத்தது. அதைப் பகிர்ந்து கொண்டபோது, கனிமொழிக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாகச் செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்...(இரண்டு கோடிக்கு இருபது சதவீதமா?)

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும், அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை.(அப்படினா யார்தான் பொறுப்பு ஆவார்கள் ? கலைஞர் தொலைகாட்சியை பார்ப்பவர்களா?)

தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜேட்மலானி, இதைத் தெளிவாக சுட்டிக்காட்டியும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.( அம்மாடி! ஊழல் செஞ்சா சிறைக்கு அனுப்பாம சிம்லாவுக்கா அனுப்புவாங்க !!?)

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.( இது எந்த படத்தில் வரும் அல்லது வரபோகும் வசனம்?)

அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை.(இந்த வாய் ( பேச்சு ) மட்டும் இல்லாவிடில் கருணாநிதி என்றோ கரைந்து போயிருப்பார் )

இறுதிப் போரில் வெல்வோம்:( என்ன மகாபாரத போரா.....அட பாவிகளா ! குற்றம் செஞ்சது நீங்க ....தண்டனை அனுபவிப்பது நீங்க ...போருன்னு ஏன் எல்லாரையும் கூப்பிட்டு அக்கப்போர் பண்றீங்க? )இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம்(பாவம் திமுக தொண்டர்கள்....இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாதிரி எழுத்துக்களை சகித்து கொள்ள போகிறார்களோ ?) என்று கருணாநிதி கூறியுள்ளார்...

8 கருத்துகள்:

 1. //என்ன மகாபாரத போரா.....அடபாவிகளா ! குற்றம் செஞ்சது நீங்க ....தண்டனை அனுபவிப்பதுநீங்க ...போருன்னு ஏன் எல்லாரையும் கூப்பிட்டு அக்கப்போர்பண்றீங்க?//
  ஹிஹி அது தானே!!

  பதிலளிநீக்கு
 2. ஓட்டளிக்க நேரம் ஆவதால்...பின்னே வருகிறேன்..

  பதிலளிநீக்கு
 3. #மைந்தன் சிவா சொன்னது…

  ஓட்டளிக்க நேரம் ஆவதால்...பின்னே வருகிறேன்..#

  வாங்கோ வாங்கோ....

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொன்னும் பொன் எழுத்தில் பொறிக்கப்படவேண்டிய அருமையான அட்டாக்....வாழ்த்துக்கள் தம்பி

  பதிலளிநீக்கு
 5. மஞ்சள் துண்டை வைச்சு, மரண மொக்கை...அவ்

  பதிலளிநீக்கு
 6. அவருக்கும் மனசாட்சின்னு ஒண்ணு இருந்து, இப்படிலாம் பேசி இருந்தா அவர் 70களிலேய அரசியலை விட்டு விலகி இருப்பார்.

  பதிலளிநீக்கு
 7. கலைஞர் கருணாநிதி செய்த கடைசி தவறு !
  Please visit
  http://seasonsnidur.wordpress.com

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....