09 மே 2011

டோனியால் இந்த நாடே குடிக்கிறதா?


மதுபான விளம்பரத்தில் நடித்ததற்காக தோனி தங்கியிருந்த ஹோட்டலின் முன்பு பசுமை தாயகம் மற்றும் பா ம க வினர் (இரண்டும் ஒன்றுதான்) ஆர்ப்பாட்டம் நடத்தி மதுவை ஒழித்தே விட்டனர்!! என்ன ஒரு போராட்டம்!!

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் எத்தனை பேர் குடிகாரர்கள் இல்லை என சொல்ல முடியுமா அவர்களால்?தமிழ்நாட்டில் அரசே மதுபானத்தை விற்று பொது சேவை செய்து வருகிறதே!!அதை தடுத்து நிறுத்த முடியுமா உங்களால்?அதை எதிர்த்து தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்த வேண்டியது தானே?.....அல்லது ஒவ்வொரு டாஸ்மாக் முன்னாடி நின்று மது விற்காதே என ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமா உங்களால்?

டாஸ்மாக்குக்கு வரும் குடிமகன்களிடம் மது குடிக்காதே என அறிவுரைதான் சொல்ல முடியுமா உங்களால்?உங்கள் கட்சியில் யாருமே குடிகாரர்கள் இல்லை என அறிக்கையாவது வெளியிட முடியுமா ?முடியாது...

சாக்கடையை ஒழிக்காமல் கொசுக்களை ஒழித்து என்ன பயன்? மதுபானத்தை ஒழிக்காமல் மதுபான விளம்பரத்தில் நடிப்பவரை திட்டி என்ன பயன்? டோனி நடிக்காட்டி வேறொருவர் நடிக்கத்தானே போகிறார்?இல்லை டோனி நடிக்காமல் இருந்தால் யாரும் குடிக்காமல் இருக்க போகிறார்களா?டோனி நடிப்பதால் இதுவரை மது அருந்தாமல் இருக்கும் நல்லவர்கள் புதிதாக மது அருந்த போகிறார்களா?யாரும் யாரையும் திருத்த முடியாது...அவர்களால் திருந்தினால்தான் உண்டு...

மது நாட்டையும், வீட்டையும் சீரழிக்கிறது ....அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை...மதுவிலக்கை நம் அரசு அமுல்படுத்துமா?

டோனி விளம்பரத்தில் நடிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை....அதில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

சும்மா விளம்பரத்துக்காகவும் ,பரபரப்புக்காகவும் இது போன்ற வீண் போராட்டங்களில் ஈடுபடுவதை பா ம க வினர் எப்போது விட போகிறார்கள்?

17 கருத்துகள்:

  1. இருந்தாலும், மிகவும் பிரபலமானவரகள் தான் நடிக்கும் விளம்பரங்களில் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொள்ள வேண்டும்...

    விளையாட்டில் அவர்கள் சம்மாதிக்கா பணமா..?

    பதிலளிநீக்கு
  2. "கிரிக்கெட் மூலமாக செய்யப்படும் விளம்பரங்கள் புதிய ஆட்களை பிடிக்கும் முயற்சி" என விஜய மல்லையா கூறியுள்ளார். இந்தியாவில் சட்ட பூர்வ குடிவயது 21. அந்த வயதை எட்டிப்பிடிக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் கிரிக்கெட் ரசிகர்கள்.

    இந்த சிக்கல் குறித்து தெளிவு பெற பின் வரும் வலைப்பூவில் உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்:

    http://alcoholfreecricket.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. நல்லாவே எழுதுறீங்க. இதெல்லாம் ஆகாத வேலை என்று அவர்களுக்கும் தெரியும்.டாஸ்மாக் ஏலம் எடுத்து நடத்துபவர்களில் பாதிக்குமேல் வன்னியர்கள். அங்கு கடை ஊழியர்கள் வன்னியர்கள். அவர்கள் இருப்பதை காண்பித்து நிலைநிருத்தவேன்டாமா?

    பதிலளிநீக்கு
  4. டோனியை எதிர்த்து போராட்டம்: மதுபான விளம்பரங்கள் அகற்றப்பட்டன

    http://arulgreen.blogspot.com/2011/05/blog-post_09.html

    பதிலளிநீக்கு
  5. திருடனாக பார்த்து திருந்தினால்தான் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. ஆனால் பிரபலங்களாக இருப்பவர்கள் செய்யும் காரியம் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படும்.
    http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா12:39 PM, மே 09, 2011

    Drinking, if it is an offensice habit, should not be endorsed by a celebrity like Toni. Young minds will not associate the habit with evil if their icon Toni endorses it.

    U r saying the ad wont stop people from drinking.

    Cool guy. The ad is not meant for all. But for future generations to tell them that drinking is not evil; so, they can take it up. Even their icon Toni drinks.

    It is therefore for potential future drinkers from the coming generations, like school, college students.

    varungaala santhathiyar kudikkaamal iruppatharkee

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா12:53 PM, மே 09, 2011

    இதெல்லாம் சுத்த ஹம்பக்.ரஜினி சிகரெட் குடிப்பதை நிறுத்தியதும்,எத்தனை இளைஞர்கள் சிகரெட் பிடிப்பதை விட்டார்கள்..? இதை சொல்பவர் யாரென பார்த்தால் மரம் வெட்டிகள்

    பதிலளிநீக்கு
  8. //ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் எத்தனை பேர் குடிகாரர்கள் இல்லை என சொல்ல முடியுமா அவர்களால்?தமிழ்நாட்டில் அரசே மதுபானத்தை விற்று பொது சேவை செய்து வருகிறதே!!அதை தடுத்து நிறுத்த முடியுமா உங்களால்?அதை எதிர்த்து தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்த வேண்டியது தானே?.....அல்லது ஒவ்வொரு டாஸ்மாக் முன்னாடி நின்று மது விற்காதே என ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமா உங்களால்?///

    நாக்கை புடுங்குற கேள்வி, சூப்பர்.....

    பதிலளிநீக்கு
  9. சரியாக உரைத்தீர்கள்...................மிகவும் தேவையான ஒரு பதிவு............................இதுல நீங்க ஒன்றை மறந்துட்டீங்க.....................அங்க போரடதுல போனவங்க எத்தினை பேர் குடிச்சுட்டு போயிருப்பனுங்க அதை யோசிச்சிங்களா?...........................அதே சமயம் நாம் இந்த விளையாட்டு வீரகளையும் கண்டிக்க தவகூடாது என்பதற்கு ஒரு உதாரணம் இதோ என்னுடைய பதிவில்................
    http://kingdomofportonovo.blogspot.com/2011/04/no-comments_04.html

    பதிலளிநீக்கு
  10. நன்றி நண்பர்களே.....நான் தோனி அதில் நடித்ததை அவரின் உரிமை என்றுதான் கூறி உள்ளேன்....மற்றபடி மதுவுக்கு நானும் எதிரிதான்...

    பதிலளிநீக்கு
  11. @NKS.ஹாஜா மைதீன்
    @வேடந்தாங்கல் - கருன்
    @Abu Sana
    @MANO நாஞ்சில் மனோ
    @ஆர்.கே.சதீஷ்குமார்
    @கக்கு - மாணிக்கம்

    டோனி மது விளம்பரங்களில் நடிப்பதும் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதும் எவ்வளவு பெரிய கேடாக முடியும் என்பது நான் சொன்னால் உங்களுக்கு விளங்காது. இந்தியாவின் மிகப்பெரிய மதுபான அதிபர் விஜய மல்லயா என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்:

    “F1 and Cricket are part and parcel of our business tools for promotion, and are sports in which, not only I am interested, but in which India is hugely interested.

    Why do you think I paid $112m for Royal Challengers cricket team?

    In India…cricket is almost like a religion. You then have the young demographic, new consumers coming into my industry, who are going to turn 21, coming of legal drinking age.

    The same people are going to watch cricket, are going to enter the consumer sector of India, and advertisers are going to look at that ever-increasing consumer sector.”

    - Vijay Mallya, chairman of the United Breweries Group (the king of India Liquor Industry)

    http://www.bbc.co.uk/news/business-12217018

    பதிலளிநீக்கு
  12. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    // //இதெல்லாம் சுத்த ஹம்பக்.ரஜினி சிகரெட் குடிப்பதை நிறுத்தியதும்,எத்தனை இளைஞர்கள் சிகரெட் பிடிப்பதை விட்டார்கள்..?// //

    தயவுசெய்து, கொஞ்சமாவது அறிவைப் பயன்படுத்தப் பாருங்கள். "இளைஞர்கள் சிகரெட் பிடிப்பதை விடவேண்டும்" என்பதற்காக ரஜினி சிகரெட் பிடிக்கக்கூடாது என்று யாரும் கூறவில்லை. புதிய இளைஞர்கள், சிறுவர்கள் புதிதாக அப்பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது என்பதற்காகத்தான் இக்கோரிக்கை.

    இதுகுறித்து உங்களுக்கு கேள்விகள் ஏதாவது இருக்குமானால் பின்வரும் தளங்களை பார்க்கவும்:

    http://www.who.int/tobacco/smoke_free_movies/en/

    http://www.smokefreemovies.ucsf.edu/

    பதிலளிநீக்கு
  13. @ அருள்

    சகோ.அருள்,

    "மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால்... திமுகவுடன் கூட்டணி கிடையாது"... என்றல்லவா பாமக கூறி இருந்திருக்க வேண்டும்... உண்மையில் மதுவிலக்கின் மீது ஆர்வம் இருந்திருந்தால்..!

    ம்ம்ம்...


    @ NKS.ஹாஜா மைதீன்

    மதுவிலக்கை அமல் படுத்தாத அரசும்...
    தம் வாழ்வில் மதுவிலக்கை அமல்படுத்திக்கொள்ளாத அனைத்து 'குடி'மக்களும்...
    அதற்கு விளம்பரம் மூலம் அதரவு தரும் தோணி உள்ளிட்ட அனைவரும்

    ...சமூகத்துக்கு தீமையே..!

    அப்படி தீமை செய்வது இந்திய சட்டப்படி அவர்களின் உரிமை என்றாலும் கூட...!

    பதிலளிநீக்கு
  14. நன்றி நண்பர்களே....என்னுடைய கருத்து சாக்கடைகள் ஆன மதுக்கடைகளை ஒழிக்காமல் வெறும் கொசுக்களை ஒழிப்பதால் சமுகத்துக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதே ஆகும்...

    பதிலளிநீக்கு
  15. நீங்க சொல்றதை நாங்க கேட்டூக்குவோம். ஆனா வி ஐ பிங்க கேட்பாங்களா? #டவுட்டு

    பதிலளிநீக்கு
  16. பதிவுலகின் மாமேதைகள்!

    அதிரடி ஹாஜா என்பவர் "டோனியால் இந்த நாடே குடிக்கிறதா?" என ஒரு பதிவு எழுதினார். அதில் "டோனி விளம்பரத்தில் நடிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை....அதில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று அவர் கூறியிருந்தார். இந்திய சட்டப்படி மதுபான விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டவை என்பது கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

    http://arulgreen.blogspot.com/2011/05/blog-post_11.html

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....