ஒசாமாவுக்காக நேற்று சென்னையில் ஜனாசா( இறுதி சடங்கு)தொழுகை நடந்துள்ளது...தமிழ்நாட்டில் மாற்று மதத்தினரும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நேரத்தில இந்த சம்பவம் முஸ்லிம்களிடையே ஒருவித தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது ......
ஒசாமா ஒரு தீவிரவாதி,உலகமே பயந்த பயங்கரவாதி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.....
நமது உறவினர்களில், நமது நண்பர்களில் யாரேனும் ஒசாமா நடத்திய குண்டு வெடிப்பு, இரட்டை கோபுர தாக்குதல்களில் உயிர் இழந்து இருந்தால் இழப்பின் வலி நமக்கு தெரிந்து இருக்கும்....
ஒசாமாவுக்கு எதிரி அமெரிக்கா என்றால் உயிர் இழந்த மக்கள் அமெரிக்காவில் பிறந்ததுதான் அவர்களின் தவறா?இஸ்லாம் ஒருபோதும் அடுத்த மதத்தினர் மீது தாக்குதல் நடத்த சொன்னதில்லை...அப்பாவி மக்களை கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் ஏற்று கொள்வதில்லை.....அப்படி இருக்கையில் ஆயிர கணக்கான உயிர்களை பலிகொண்ட ஒசாமா அமெரிக்காவை எதிர்த்ததால் மட்டும் நல்லவராகிவிட முடியுமா?
ஒசாமாவின் அமெரிக்க எதிர்ப்பை நானும் ஆதரிக்கிறேன்....ஆனால் அப்பாவி மக்களை கொன்ற ஒசாமாவை எதிர்க்கிறேன்....அவரின் உடலை இறுதி தொழுகை நடத்தாமல் கடலில் வீசிய அமெரிக்காவின் செயல் கண்டனத்துக்கு உரியதே ....ஆனால் அதற்காக எல்லா மதத்தினரும் சகிப்புத்தன்மையோடும், ஒற்றுமையோடும் வாழும் தமிழ்நாட்டில் ஒசாமாவுக்காக நடத்தப்பட்ட தொழுகை தேவையற்ற ஒன்றே .....தவிர்க்க பட வேண்டிய ஒன்றே.....கண்டனத்துக்கு உரிய ஒன்றே....
Tweet |
விட்டால் அவருக்கு சிலை வைத்து மசூதிகள் கட்டி வழிப்பட தொடங்கிவிடுவார்கள் போல...
பதிலளிநீக்குஇதை முளையிலே கிள்ளி எறிய வேண்டும்..
நானும் கண்டிக்கிறேன்
பதிலளிநீக்குஇன்னும் இதனை பற்றி நிறைய சொல்லணும் , ஆனால் க்கு மாணிக்கம் பதிவில் பயங்கரமாக அது பற்றி ஓடிகிட்டு இருக்கு!
பதிலளிநீக்குஅறியாமையில் செய்கிறார்கள் இதில் யாரை குறை சொல்ல நண்பா
பதிலளிநீக்குஉண்மையிலேயே இது கண்டனத்திற்கு உரிய செயல்தான்
பதிலளிநீக்குஇழப்பின் வலி நமக்கு தெரிந்து இருக்கும்....அருமையான வரிகள் வலி மிக கொடுமையானது தான் இது மிகவும் வேதனைக்குரிய விஷயm கூட.
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குசகோ.ஹாஜா,
அவசியமான நேரத்தில் சரியான பதிவு.
மே 3 அல்லது 4 என்று வேறு நாட்களில் கூப்பிர்று இருந்தால் ஒருத்தரும் வரமாட்டார்கள் என்று...
வெள்ளிகிழமை தொழ வந்தவர்களை நயவஞ்சகமாக இத்தொழுகையில் ஈடுபடுத்திவிட்ட அந்த பள்ளி வாசல் இமாம் கண்டனத்துக்கு உரியவர்.
நேற்று அங்கே ஜும்மா தொழுகைக்கு சென்றவர்கள், பாவம் இவரின் சந்தர்ப்பவாதத்தில் பலியான அப்ப்வி முஸ்லிம்கள்.
இவரின் தேவையற்ற அறிவுகெட்ட செயல், மொத்த முஸ்லிம்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
அத்தொழுகைக்கு என்னுடைய கண்டனங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் சகோ.ஹாஜா.
ரைட்டு....
பதிலளிநீக்குசரிதான்.
பதிலளிநீக்குஇதே கருத்தினைத்தான் நானும் எழுதினேன் சற்று கடுமையாக.
ஏக இறையின் அருளும் கருணையும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக
பதிலளிநீக்குசென்னை அண்ணாசாலையில் உள்ள மஸ்ஜிதில் சம்சுதீன் காசிமி என்ற விளம்பரப்பிரியர் நடத்திய இந்த தொழுகை தேவையற்றது. அவர் தனது சுய விளம்பரத்திற்கு இந்த நிகழ்வை பயன்படுத்தியிருக்கிறார் என்பதே என் ஐயம். ஏன் எனில் ஏற்கெனவே ஒசாமாவின் ஜனாஸாவுக்கு பாக்கிஸ்தானில் ஒரு இடத்தில் வைத்து தொழுகை நடத்தி விட்டதை ஊடகங்களின் வழியாக எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இறுதி சடங்கான ஜனாஸா தொழுகையை ஒரு தடவை நடத்தினாலே போதுமானது. மேலும் மேலும் நடத்த தேவையில்லை. பொதுவாக வெள்ளிக்கிழமை மஸ்ஜிதிற்கு அனைத்து முஸ்லிம்களும் தொழுகை நடத்த செல்வார்கள். எனவே வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்த கூட்டத்தை ஒசாமாவிற்கு வந்த கூட்டம் போல காட்டி விட்டார் சம்சுதீன் காசிமி. ஒசாமா கொல்லப்பட்டதாக அறிவித்த அன்றே அல்லது அடுத்த நாளோ இவர் இந்த தொழுகையை ஏற்பாடு செய்திருந்தால் இருபது நபர்களுக்கு மேல் வந்திருப்பார்களா என்பது சந்தேகமே.
ஆனால் இதைப்பற்றி கருத்து சொல்லும் பலரும் பிரபாகரன் படுகொலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்தவர்கள். பிரபாகரனுக்கு தமிழ்நாட்டில் இரங்கல் கூட்டம் நடந்தபோது அதைப்பற்றி வாயே திறக்காதவர்கள். இலங்கையை சேர்ந்த பிரபாகரன் என்னும் நபரால் எந்த அப்பாவியும் இறக்க வில்லை என்று இவர்களால் அடித்து கூற முடியுமா? அவரை இலங்கை இராணுவம் கொன்று கடலில் தூக்கி வீசி எறிந்த போது இங்கே தமிழகம் முழுக்க இரங்கல் கூட்டங்களும் கண்டனக்கூட்டங்களும் நடந்ததே. அப்போது இவர்கள் இந்தியாவையும் தமிழக அரசையும் குறை சொன்னவர்கள் பலர். பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவித்து இரங்கல் கூட்டம் போடுபவனெல்லாம் பயங்கரவாதிகள் என்று சொல்ல துனியாதவர்கள். பிரபாகரன் இந்தியால் தேடப்படும் ஒரு குற்றவாளி. இந்தியாவின் பிரதமரை தமிழக மண்ணில் வைத்து படுகொலை செய்தவர். பிரபாகரனால் ஒரு அப்பாவியும் இறக்கவில்லை என்று இவர்களால் சொல்ல முடியுமா? ஏனெனில் அவர் இயக்கத்தினரால் சிங்கள இராணுவத்தினர்கள் இறந்தாலும் பல அப்பாவிகளும் இறந்திருக்கிறார்கள். அதே போன்று தான் ஒசாமாவின் இயக்கத்தினர்களால் அமெரிக்க சிப்பாய்கள் இறந்தாலும் பல அப்பாவிகள் இறந்திருக்கிறார்கள். ஆனால் பிரபாகரனுக்கு ஒரு நீதி. ஒசாமாவுக்கு ஒரு நீதி என்ற இவர்களின் நேர்மையும் நாணயமும் என்னை புல்லரிக்க வைக்கின்றது.
பதிலளிநீக்குநான் ஒசாமா பின் லாடனை ஆதரிப்பவனல்ல. தீவிரவாதத்தினால் ஒரு பலனும் இல்லை என்று நம்புகிறவன். தான் சார்ந்த சமூகத்திற்கு அதிக கெடுதல்களையே இந்த தீவிரவாதிகள் பரிசாக தருகிறார்கள் என்ற கொள்கையையுடைய்வன். அது எந்த மதம் சார்ந்த தீவிரவாதியாக இருந்தாலும் சரியே. ஒசாமாவால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஒசாமாவின் இந்த மரணத்தால் ஓரளவிற்கேனும் நீதி வழங்கப்பட்டிருப்பதாக நம்புவன். ஆனால் ஒசாமாவை உருவாக்கிய பெரிய தீவிரவாதிகளான அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு இதுவரை ஒரு தண்டனையும் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தை கொண்டிருப்பவன்.
பதிலளிநீக்கு# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
பதிலளிநீக்குவிட்டால் அவருக்கு சிலை வைத்து மசூதிகள் கட்டி வழிப்பட தொடங்கிவிடுவார்கள் போல...
இதை முளையிலே கிள்ளி எறிய வேண்டும்..#
தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்...
#அசோக் குமார் சொன்னது…
பதிலளிநீக்குஅறியாமையில் செய்கிறார்கள் இதில் யாரை குறை சொல்ல நண்பா#
தொழுகை நடத்தியவரும்,கலந்துகொண்டவர்களும் தான்....
#கக்கு - மாணிக்கம் சொன்னது…
பதிலளிநீக்குசரிதான்.
இதே கருத்தினைத்தான் நானும் எழுதினேன் சற்று கடுமையாக.#
நன்றி நண்பரே....
உங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி நண்பர் இப்னு ஹலிமா அவர்களே.....
பதிலளிநீக்குஆனால் பிரபாகரனின் இறப்பை இங்குள்ள அரசியல்வாதிகள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள்....சமுகத்தின் பார்வையில் பிரபாகரன் போராளி....இதில் மாற்று கருத்தும் இருக்கலாம்.....ஆனால் ஒசாமா தீவிரவாதி என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்புகள் குறைவு....எதுவாக இருந்தாலும் யார் உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதே என் கருத்து....
//சமுகத்தின் பார்வையில் பிரபாகரன் போராளி.// தமிழகத்தில் சிலருடைய பார்வையில் அவர் போராளி. ஆனால் வட இந்தியாவில் ???? உலகின் மற்ற பாகங்களில்????
பதிலளிநீக்குஇதே போன்று ஒசாமா பின் லாடன் ஆப்கானிஸ்தானில் சிலராலும் பாகிஸ்தானில் சிலராலும் போராளி தான். ஆனால் உலகத்தின் பார்வையில்????
இரண்டு நபர்களுக்கிடையே இதற்கு இந்த வித்தியாசம் என்பது தான் என்னுடைய கேள்வியே. இரண்டு பேருமே பயங்கரவாதிகள் என்பது தான் என்னுடைய கருத்து. கண்டித்தல் இரண்டையும் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருந்து விட வேண்டும். ஆனால் ஒன்றை செய்து விட்டு மற்றதை எதிர்த்தால் அப்பட்டமான இனவெறியே. அது மதம் சார்ந்து இருந்தாலும் மொழி சார்ந்து இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியதே.
ரைட்டு மாப்ள!
பதிலளிநீக்குநீட்
பதிலளிநீக்கு//அவரின் உடலை இறுதி தொழுகை நடத்தாமல் கடலில் வீசிய அமெரிக்காவின் செயல் கண்டனத்துக்கு உரியதே //
பதிலளிநீக்குஒசாமாவால் கொல்லப்பட்டவர்களில் பலரின் உடலே இறுதிச் சடங்குக்கு கிடைக்கவில்லைங்க, அதில் ஒன்றிரண்டு இஸ்லாமியர்கள், குறிப்பாக விமானத்தை இயக்கிவர்கள் கூட உண்டு, அவர்களுக்கெல்லாம் கிடைக்காத இறுதி சடங்கு மரியாதை ஒசாமாவுக்கு கிடைக்கததால் இஸ்லாதிற்கு களங்கம் ஏற்பட்டுவிடுமா ?
நன்றி திரு கோவி கண்ணன்...நான் ஒசாமாவை ஆதரிக்கவில்லை....அவருக்காக நடந்த தொழுகையையும் ஆதரிக்கவில்லை...அதை புரிந்து கொள்ளுங்கள்...தனி ஒரு மனிதனுக்காக இஸ்லாத்தை இழுத்து பேசவேண்டாம் என்பது என் கருத்து...ஒருவேளை அமெரிக்கா ஒசாமா உடலை கடலில் வீசாமல் அடக்கம் செய்து இருக்கலாம் என்பது அவருக்கு ஆதரவு கொடுப்பதாக அர்த்தம் ஆகாது....
பதிலளிநீக்கு/சமுகத்தின் பார்வையில் பிரபாகரன் போராளி.// தமிழகத்தில் சிலருடைய பார்வையில் அவர் போராளி. ஆனால் வட இந்தியாவில் ???? உலகின் மற்ற பாகங்களில்????
பதிலளிநீக்குஇதே போன்று ஒசாமா பின் லாடன் ஆப்கானிஸ்தானில் சிலராலும் பாகிஸ்தானில் சிலராலும் போராளி தான். ஆனால் உலகத்தின் பார்வையில்????
இரண்டு நபர்களுக்கிடையே இதற்கு இந்த வித்தியாசம் என்பது தான் என்னுடைய கேள்வியே. இரண்டு பேருமே பயங்கரவாதிகள் என்பது தான் என்னுடைய கருத்து. கண்டித்தல் இரண்டையும் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருந்து விட வேண்டும். ஆனால் ஒன்றை செய்து விட்டு மற்றதை எதிர்த்தால் அப்பட்டமான இனவெறியே. அது மதம் சார்ந்து இருந்தாலும் மொழி சார்ந்து இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியதே.
//அவரின் உடலை இறுதி தொழுகை நடத்தாமல் கடலில் வீசிய அமெரிக்காவின் செயல் கண்டனத்துக்கு உரியதே //
பதிலளிநீக்குயார் சொன்னது அவ்வாறு நடக்கவில்லை என. இஸ்லாமிய முறைப்படி உடல் 24மணித்தியாலங்களுக்குள் குளிப்பாட்டப்பட்டு வெள்ளைத்துணியால் போர்த்தபட்டு இஸ்லாமிய மதகுரு ஒருவரின் மதபிரார்த்தனைகளின் பின்னர்(அப்பிரார்த்தனை அரபுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது) கடலில் போடப்பட்டது. வீசப்பட்டது என்பது தவறான சொற்பிரயோகம்! கடற்படையினர், கடலோடிகள் கடலில் தமது உடல் போடப்படுவதை கெளரவமாக நினைப்பார்கள்!
உலக வர்த்த மத்தியஸ்தாபனம் தாக்கப்பட்டதில் இறந்த எத்தனை இந்தியர்களுக்கு (அமெரிக்கர்கள் இல்லை தொழில் நிமித்தம் வந்தவர்கள் எச்-1 விசாவில்) எத்தனைபேருக்கு மதவழிபாடு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது? நான் அமெரிக்காவின் மத்தியகிழக்கு கொள்கையை ஆதரிப்பவன் அல்லன். ஆனால் அமெரிக்காவில் மதச் சுதந்த்ரம் உண்டு. விதிக்கு வீதி பாகிஸ்தானிய மசூதிகள் உண்டு! வெள்ளிக்கிழமைகளில் வாகன தரிப்பிட விதிகளை மீறி தொழுகைக்கு வரும் பக்தர்களையோ அவர்களின் சட்டவிரோத தரிப்புகளையோ சாலைஒழுங்கு பொலிசார் கண்டும் காணாததுபோல் செல்லுவார்கள்.
ஆகவே தயவு செய்து பின்லாடனைக் கொன்றது தப்பில்லை ஆனால் கடலில் வீசியது தப்பு மதத்தொழுகை நடத்த விடவில்லை போன்ற பம்மாத்துகளை நிறுத்துங்கள்.
@கோவி கண்ணன்,
பதிலளிநீக்கு&
@ரகுநாதன்,
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற உலக மகா பொய்... "ஜார்ஜ் புஷ்ஷுக்கும் உலக வர்த்தகமைய தகர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை" என்பது..!
இனியாவது ஜார்ஜ் புஷ் சொல்வதை நம்பாமல்... அமெரிக்க அறிவியலாளர்கள், அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள், அமெரிக்க கல்விமான்கள், நேரடி சாட்சியங்கள் ஆதாரபூர்வமாய் சொல்வதை நம்புங்கள்...
அதற்கு...
இந்த வீடியோவை பொறுமையாக செவிமடுத்து முழுமையாக பாருங்கள்.(200 MB file)
http://www.youtube.com/watch?v=7E3oIbO0AWE
9/11 அன்று ஜார்ஜ் புஷ் சொன்னதைப்போலவே.. இப்படித்தான் ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பின்னரும் சிமி, முஜாஹிதீன், லஷ்கர், அல்கைதா என்று குண்டு வெடித்த அன்றே இந்திய அரசு சொன்னதை எல்லாம் நம்பினோம். கடைசியில் என்னாச்சு..? இப்போது அனைத்திலும் ஆர் எஸ் எஸ் மாட்டவில்லையா..?
மோடி பற்றிய நம்மூர் தெஹல்கா அறிக்கையை அறிந்த அளவுகூட நம் மக்கள் இந்த 9 /11 தாக்குதல் பற்றிய உண்மைகளை அறியவில்லை.
ஒசாமாவுக்கு இதில் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆப்கனில் ரஷயாவிற்கு அதிராக அமெரிக்காவின் ஆயுதங்களை தூக்கியபோதே அல்லது அவர் அதிபர் நஜிபுல்லாவை கொன்று பிணத்தை தூக்கில் நாள்கணக்கில் நடு வீதியில் தொங்கவிட்டு செய்த அராஜகத்தின் போதே அவர் பயங்கரவாதிதான்.
இவ்விஷயத்தில் மட்டும்... முற்போக்கு பிற்போக்கு, முன்நவீனத்துவம் பின்நவீனத்துவம், வலது இடது எல்லாருமே அமெரிக்காவையும் ஜார்ஜ் புஷ் சொல்வதையுமே நம்புகிறார்கள்.
அப்போதும் இபோதும் எல்லாரும் அமெரிக்காவின் அடிமைகளாய் வாய்மூடி கிடந்தார்கள். இன்னும் கிடக்கிறார்கள்.
அன்பு நண்பரே தங்களின் இந்த பதிவுகண்டு மிக்க மகிழ்ச்சி , ஏனெனில் நம் தமிழ்நாட்டில் இந்து முஸ்லிம் சகோதரர்கள் போன்று வாழ்கிறோம், ஏன் வீணாக நமக்குள் ???
பதிலளிநீக்குநன்றி
வேல்தர்மா
ஜெர்மனி
அன்புள்ள முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World',
பதிலளிநீக்குஎனது கருத்துகளுக்கு பதில் அளியுங்கள். விவாதத்தை திசை திருப்ப முயல வேண்டாம். ஒசாமாவின் உடலை இஸ்லாமிய வழக்கத்துக்கு ‘எதிராக’ கடலில் ‘வீசிய’ சம்பவம் எங்கே கேள்விப்பட்டீர்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா (பரூக் ஹுசெய்ன் ஒபாமா ) நாட்டு மக்களுக்கு த்ரியப்படுத்திய செய்தியில் இசம்பவம் விளக்கப்பட்டுள்ளது. யோசித்துப்பாருங்கள் நண்பர்களே இஸ்லாமிய முறைப்படி உடலைக்கழுவி, வெள்ளைச்சீலையில் கிடத்தி , முறைப்படி மூடிக்கட்டி கடலில் விட்டிருக்கின்றனர். இதில் மத ஓதலும் நடந்திருக்கிறது. அமெரிக்க முஸ்லிம் மதகுரு ஆங்கிலத்தில் சொன்ன பிரார்த்தனையை அரபியிலும் மொழிபெயர்த்திருக்கின்றனர்.
இதுவே ஒரு சாதாரண யூதனின் உடலுக்கோ, கிறிஸ்தவனின் உடலுக்கோ, இந்துவின் உடலுக்கோ நடந்திருக்குமா? உடலைக்கழுவுவதை விடுங்கள் தொட்டாவது இருப்பார்களா? ஹர்ராம் என அல்லவா சொல்லி இருப்பார்கள். ஒரு பிறமத தீவிரவாதியாயிருந்தால் அவனின் உடலுக்கு என்ன நடந்திருக்கும் இஸ்லாமிய நாடொன்றில்? எல்லோரும் ஊகித்திருப்பீர்களே!
In srilanka its a freedom fight.congress(rajeev),dmk,admk all this parties politicised their struggle for freedom.i strongly condemn comparing LTTE witi Al-qaeda
பதிலளிநீக்கு@ ragunanthan
பதிலளிநீக்குஅன்புள்ள சகோ.ரகுநாதன்...
வேறொருவர் என்று என்னை தவறாக நினைத்து பதில் அளிக்கிறீர்கள். இட்ஸ் ஓகே.
இன்னுமா 'ஒசாமாவை அமெரிக்கா கொன்று... கடலில் வீ... ஸாரி... பைய பைய அழுங்காமல் குலுங்காமல் இறக்கி மெல்லமாக அமிழ்த்தியது' என்று நம்புகிறீர்கள்..?
இந்த ஆள் சில வருடங்களுக்கு முன்பே இறந்திருக்க வேண்டும்.
:)
ஆக்ச்சுவல்லி, ரஷ்யாவை தோற்கடித்து நஜிபுல்லாவை கொன்ற அன்னிக்கே ஒசாமாவின் தேவை அமெரிக்காவுக்கு முடிந்து விட்டது. அப்போது அமெரிக்காவிடம் use and throw பாலிசிதான். அப்புறம் தான் use and destroy பாலிசி. அந்த சமயம், சதாம்... பெனாசீர்... மற்றும் சிலருடன் ஒசாமாவும் முடிந்து போய் இருக்க வேண்டும்..!
இப்போது அதிகார பூர்வமாய் கோப்பு மட்டும் மூடப்படுகிறது.
காரணம்...
இன்னும் இது மூடப்படாமல் இருந்தால், ஒசாமாவின் அறிக்கைகள் தொடர்ந்து CNN செய்தியில் புஷ் மூலம் வரும்.
அப்புறம், ஒபாமா அடுத்த நான்கு வருஷம் ஆள முடியாது. எதிர்க்கட்சியான புஷ் கட்சி ஜெயித்து விடக்கூடும். அந்த பயம் தான் ஒசாமா ஃபைலை ஒபாமா குளோஸ் பண்ணிய விவகாரம். இனி புஷ் கட்சியை காப்பாற்ற ஒசாமா அறிக்கைகள் வெளிவராது..! தட்ஸ் ஆல்..!
ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு முரண்பாட்டு கருத்துக்களுடன் மாற்றி மாற்றி உளறிக்கொட்டும் அரைவேக்காட்டு அமெரிக்காவை நான் நம்பவில்லை.
இந்த சம்பவம் பற்றி அங்கே பல வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரடி சாட்சியங்களான அப்போதாபாத்காரர்கள் கூறுவதையே நான் நம்புகிறேன்.
அங்கே ஒசாமாவும் இல்லையாம்...
குசாமாவும் இல்லையாம்...
எல்லாம் வெத்து டிராமாவாம்..!
போங்க.. சகோ.,
போய் நான் குடுத்த அந்த விடியோவை பாருங்க முதல்லே. பார்த்தீங்கன்னா இப்படிலாம் கேட்கவே மாட்டீங்க..!
நன்றி நண்பர்களே....இது ஒரு ஆரோக்யமான விவாதமாக இருக்கட்டும்....மதசாயங்கள் பூசி யாரும் மனவருத்தங்கள் அடைய வேண்டாம்...உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி நண்பர்களே....
பதிலளிநீக்குஎந்த அடிப்படையில் பின்லேடனுக்கு தொழுகை நடத்தியதை தவறு என்று சொல்லாம வசதியா மறைச்சிட்டிங்களே தல.
பதிலளிநீக்கு'போய் நான் குடுத்த அந்த விடியோவை பாருங்க முதல்லே. பார்த்தீங்கன்னா இப்படிலாம் கேட்கவே மாட்டீங்க..!
பதிலளிநீக்கு'
அன்புள்ள நண்பா,
இப்படி ஆயிரம் கொன்ஸ்பிராசி தியரிகள் அமெரிகாவில் வலம் வரும். சொன்னால் நம்பமாட்டீர்கள் அமெரிக்காவில்தான் மிகப்பெரிய கொன்ஸ்பிராசி தியரிஸ்ற்றுகள் இருக்கிறார்கல். அவர்களில் மிகப்பலர் அமெரிகா வேற்றுக்கிரக மனிதர்களின் ஆதாரங்களை மறைக்கிறது, அமெரிக்கா சந்திரனில் காலடி வைக்கவில்லை ....இப்படி பல பல கொன்ஸ்பிராசி தியரிகளுக்கு வீடியோ தயாரித்து ரோட்டில் போவோர் வருவோரிடம் வினியோகிப்பார்கள். மக்கள் இவற்ரை பொழுது போக்கிற்காக பார்க்க வாங்கிச் செல்வார்கள். நீங்கள் சொன்ன வீடியோ எனக்கு இற்றைக்கு ஏறத்தாழ ஐந்து வருடங்களுக்கு முன்னர் கிடைத்தது. மக்கள் இவற்றை பார்க்கவேண்டும் எனும் ‘மிகை ஆர்வத்தால்’ டி.வி.டி கவருக்குள் போலி 100டாலர் நோடு ஒன்றைவேறு அடித்து வைத்திருப்பார்கள். என்ன FBI கள்ள நோட்டு கேசில் கைது செய்து விடுவார்கள் என முன்னெச்சரிக்கையாக நோட்டின் பின்புறத்தில் கள்ள நோட்டு என பெரிய எழுத்தில் அச்சடித்திருப்பார்கள். அமெரிக்காவில் பேச்சுச்சுதந்திரம் மிக மிக தாராளம். எனவெ இவ்வாறான விளையாட்டுகள் சாதாரணமானவை.
இதைவிட அன்றையதினம் (9/11) அன்று யூதர்கள் யரும் வேலைக்குப் போகவில்லை, எனவே இதனை இஸ்ரேலிய மொசாட் செய்தது என அமெரிக்க முஸ்லிம்கள் தெருமுனையில் அடித்துப் பிரச்சாரம் செய்வார்கள். அமெரிக்க அடிப்படைவாத கிறிஸ்தவர்களோ ஓரினச்சேர்க்கையையும் கருச்சிதைவையும் அனுமதிக்கும் அமெரிக்காவுக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது என்பார்கள், சொன்னால் நம்பமாட்டீர்கள் ஸ்பீக்கர், மைக் எல்லாம் வைத்து தெருமுனையில் நின்று கத்துவார்கள். வலிப்போக்கர்கள் மெலிய புன்னகையுடன் கேட்டுச் செல்வார்கள். அனேகமாக இவை பின்னேரம் 3மணியளவில் ஆரம்பிக்கும் அதிகமக்கள் வேலைமுடிந்து வீடுதிரும்பும் நேரம் வேலை அசதியை கலைக்க இவை நல்ல மருந்து என எனது நண்பர் சொல்லுவார்.
பாகிஸ்தானிய மக்கள் ‘ஒசாம்...குசாமா’ கதையை நம்பத்தான் வேண்டும் ஏனெனில் பாகிஸ்தானிய அரசு (ராணுவ முகாம்) பக்கத்திலேயே குசாமா இல்லை எனத்தானே சொல்லி இருக்கிறது. நம்பத்தான் வேண்டும்!
இதற்கு நான் என்னுடைய பதிவில் விளக்கம் கொடுத்துள்ளேன்..
பதிலளிநீக்குhttp://kulkusma.blogspot.com/2011/05/blog-post_10.html
புகாரி,
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் அந்த நியாயத்தச் சொல்லாமல்..விடுதலைப்புலி...பிரபாகரன் என ஏன் ஓதவேண்டும்? இது ஈழத்து மாற்றுக்கருத்தொ மாணிக்கங்களாயிருந்தாலென்ன இந்திய வகையாயிருந்தாலென்ன ஒன்றுதான். உலகமெல்லாம் நியாயங்கள் கொட்டிக்கிடக்க புலியை காட்டி பதிலிறுப்பது!