30 மே 2011

நாட்டைவிட நோட்டே பெரிது...!


மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் சச்சின்,டோனி போன்ற மூத்த வீரர்கள் விருப்ப ஒய்வு பெற்றுள்ளனர்....

இவர்களுக்கெல்லாம் நாட்டுக்காக விளையாடுவது மட்டும் கசக்கும்....உடல் ஒத்துழைக்காது...

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் இவர்களுக்கு ஒய்வு வேண்டுமாம்....உங்களை யார் தொடர்ந்து ஐ பி எல் போட்டிகளில் விளையாட சொன்னது? உலக கோப்பை முடிந்தவுடன் ஒரு வார ஒய்வு கூட எடுக்காமல் துள்ளி குதித்து கோடிகளில் கொழிக்கும் ஐ பி எல் போட்டிகளில் விளையாட ஓடிவந்த இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு நாட்டுக்காக விளையாடும்போது மட்டும் ஒய்வு அவசியமாம்...என்ன கொடுமை சார் இது?

ஒய்வு எடுப்பது வீரர்களின் சொந்த விருப்பம்தான்....ஆனால் நாட்டுக்காக விளையாடும் போட்டிகளை உதாசின படுத்திவிட்டு நோட்டுக்காக விளையாடுவதிலே ஆர்வமாக இருப்பது தப்பில்லையா?

அதற்கு பதிலாக ஐ பி எல் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து விட்டு தற்போது இந்திய அணிக்காக விளையாடி இருக்கலாமே?

இந்த வீரர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்த மட்டும் இந்திய அணியின் பெயர் வேண்டுமாம்....

இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக லட்சகணக்கான பேர் தவமிருக்கும் நிலையில் இவர்கள் அணியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளது எவ்வளவு பெரிய முரண்பாடு? இவர்கள் இல்லாத நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டு சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் திரும்ப மூத்த வீரர்கள் அணிக்கு திரும்பும்போது பலிகடாக்கள் ஆகி அணியை விட்டு வெளியேற்ற படுகின்றனர்....

எனது பார்வையில் இந்த வீரர்கள் ஐ பி எல் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு தற்போது நாட்டுக்காக விளையாடுவதை புறக்கணிப்பது இந்திய அணிக்கு செய்யும் துரோகம்...உங்கள் பார்வையில் என்ன நண்பர்களே?

6 கருத்துகள்:

 1. சர்வதேச போட்டிகள்
  பெரிய கப்பு சின்ன லாபம்..

  IPL போட்டிகள்
  சின்ன கப்பு பெத்த லாபம்...

  இப்ப புரியுதா..

  பதிலளிநீக்கு
 2. இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக லட்சகணக்கான பேர் தவமிருக்கும் நிலையில் இவர்கள் அணியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளது....//

  நல்ல தரமான புதிய தலைமுறை வீரர்கள் அறிமுகம் ஆக உதவுமே ...
  postive thinking boss
  //
  //
  தப்புதான் இன்னபன்றது

  பதிலளிநீக்கு
 3. இவர்களை பொறுத்தவரை காசு தான் கடவுள். நாட்டு பற்று என்றால் என்ன என்று கேட்பார்கள்.

  பதிலளிநீக்கு
 4. காசிலே தான் உலகம் சுழலுது பாஸ் ;-)

  பதிலளிநீக்கு
 5. அமைதி நிலவட்டும் சகோ.ஹாஜா...

  என்னது..??????
  நாட்டுக்காக ஆடுகிறார்களா..???? ஓசியிலா..????

  நாட்டுக்காக ஆடினாலும் அதுவும் நோட்டுக்காகத்தானே சகோ..?

  என்ன வித்தியாசம்..?
  ஜீரோ...
  கடைசியில் ஒரு ஜீரோ...
  அதாவது...
  இரண்டுக்கும் ஒரு இலக்கம் மாறுபடும்..!!!

  ஆக,
  BCCI's 'Team India' நோட்டைவிட... BCCI's 'IPL' நோட்டே பெரிது...!

  BCCI என்பது வெள்ளைக்காரன் கிளப். அப்போதும் அது தனியாருக்குத்தான் சொந்தம்; இப்போதும் அது தனியாருக்குத்தான் சொந்தம்..!

  நம் நாட்டிற்கென்று... இந்திய அரசால், ஒரு அதிகாரபூர்வமான ஒரு கிரிக்கெட் அணி இன்றுவரை ஏற்படுத்தப்படவில்லை..!!!

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....