31 மே 2011

தாஜ்மகாலுக்கு போட்டியாக திஹார் சிறை....! (கதம்பம்)


இப்பெல்லாம் காதலுக்கு சின்னமாக யாரும் தாஜ்மகாலை சொல்வதில்லை......திஹார் சிறையைதான் சொல்கிறார்கள்......காரணம் நான் சொல்லியா உங்களுக்கு தெரியவேண்டும்..?ஊருக்கே தெரிந்ததுதானே.....இருந்தாலும் சொல்றேன்.....உண்மையான காதல் எங்கிருந்தாலும் ஒன்று சேர்ந்துவிடுமாம்......இந்த மாதிரி எஸ் எம் எஸ் தான் இப்ப ரொம்ப ஹாட்.....( குறிப்பு....இது எஸ் எம் எஸ் மட்டும்தான்...ஹி ஹி...)

ஸ்பெக்ட்ரம் ராசா சிறையிலிருந்து வெளியே வரும்போது நிச்சயம் ஒரு சிறந்த பேட்மிண்டன் வீரராக வர வாய்ப்பு இருக்கிறது....சிறையில் பேட்மிண்டன் நன்றாக விளையாடுகிறாராம்....இதுதான் தீமையிலும் நன்மை என்பதோ...?

அநேகமாக கூடிய சீக்கிரம் சபாநாயகர் ஜெயகுமார் மாற்றப்படலாம்....பின்னே ஸ்டாலினுடன் ஜெயகுமார் கைகுலுக்கும் காட்சி தினகரனில் பெரியபடமாக வெளியாகி உள்ளதை பார்த்தால் சும்மா இருப்பாரா அம்மா?

நடிகை வனிதாவின் அலப்பறை எப்ப முடிவுக்கு வரும் என தெரியவில்லை....படத்தில் நடித்ததைவிட சிறப்பாகவே கண்ணீர் விட்டு மீடியாக்கள் முன்பு நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.....அட அவரது மகனை அவரிடம் கொடுத்து தொலைத்தால் தான் என்ன? இதை ஒரு இன்டர்நேஷனல் அளவில் சிறப்பு செய்தியாக தினமும் வெளியிடும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகள் வாழ்க......வாழ்க..

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்....புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர்.ஆக இதனால் தெரிவிப்பது என்னவென்றால் புகை நமக்கு பகையாகும்....புகை பிடிக்கும் நண்பர்கள் அதை விட்டுவிட்டால் அவர்களுக்கும்,அவர்களின் குடும்பத்தினருக்கும் நல்லது......

13 கருத்துகள்:

 1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சி செய்திகளை கீழே பதியவும்.

  Share

  பதிலளிநீக்கு
 2. இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்...>>>

  நண்பர்களே! புகையிலையை தவிருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. புகை நமக்கு பகையாகும்....புகை பிடிக்கும் நண்பர்கள் அதை விட்டுவிட்டால் அவர்களுக்கும்,அவர்களின் குடும்பத்தினருக்கும் நல்லது...//
  புகையிலையை தவிருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. >>ஸ்பெக்ட்ரம் ராசா சிறையிலிருந்து வெளியே வரும்போது நிச்சயம் ஒரு சிறந்த பேட்மிண்டன் வீரராக வர வாய்ப்பு இருக்கிறது....சிறையில் பேட்மிண்டன் நன்றாக விளையாடுகிறாராம்..

  குசும்பு?

  பதிலளிநீக்கு
 5. தொடருங்கள் தொடருங்கள்.....

  பதிலளிநீக்கு
 6. செய்திகளின் தொகுப்பு கதம்பமாக...
  அசத்தல்..


  வனிதா செகன்டு இன்னிங்ஸ் துவங்கிவிட்டார்போல்...

  புகையிலை இல்லா தேசம் செய்வோம்...

  பதிலளிநீக்கு
 7. #சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  >>ஸ்பெக்ட்ரம் ராசா சிறையிலிருந்து வெளியே வரும்போது நிச்சயம் ஒரு சிறந்த பேட்மிண்டன் வீரராக வர வாய்ப்பு இருக்கிறது....சிறையில் பேட்மிண்டன் நன்றாக விளையாடுகிறாராம்..

  குசும்பு?#


  உங்களைவிடவா பாஸ்..?

  பதிலளிநீக்கு
 8. என்ன பாஸ் பிட்டு பிட்டா போடுறீங்க ??ஹிஹி
  வனிதா -ஆக்சுவலி என்ன தான் பாஸ் நடந்ததாம்?

  பதிலளிநீக்கு
 9. இனி அதிரடி சரவெடிதான்

  பதிலளிநீக்கு
 10. \\உண்மையான காதல் எங்கிருந்தாலும் ஒன்று சேர்ந்துவிடுமாம்......\\ உண்மையான கள்ளக் காதல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  \\ஸ்பெக்ட்ரம் ராசா சிறையிலிருந்து வெளியே வரும்போது நிச்சயம் ஒரு சிறந்த பேட்மிண்டன் வீரராக வர வாய்ப்பு இருக்கிறது.\\ அப்போ ராசாவுக்கு தண்டனை எதுவும் கிடைக்காது, நடப்பதெல்லாம் டிராமா என்பதில் தெளிவாக இருக்காங்க போலிருக்கு.

  \\ புகை நமக்கு பகையாகும்....புகை பிடிக்கும் நண்பர்கள் அதை விட்டுவிட்டால் அவர்களுக்கும்,அவர்களின் குடும்பத்தினருக்கும் நல்லது....\\ இதன் தீமைகள் எல்லாம் நன்றாகத் தெரிந்தும், இதை பெரும்பாலானோர் விட்டுத் தொலைப்பதாகத் தெரியவில்லையே?.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....