17 மே 2011

முதல் நாளிலே ஆயிரம் கோடியை வீணாக்கிய ஜெ...


முதல்வராக பதவி ஏற்ற அன்றே 1000 கோடி ரூபாயை அலேக்காக தூக்கி வீசி இருக்கிறார் ஜெயலலிதா...

கருணாநிதியால் கட்டப்பட்ட(கருணாநிதி என்ன அவர் சொந்த பணத்தை போட்டா கட்டினார்?) தலைமை செயலகத்துக்கு செல்ல மாட்டேன் என்று கூறி பழைய தலைமை செயலகமான கோட்டையில் பதவி ஏற்றுள்ளார் ஜெயலலிதா...

நாளை அந்த தலைமை செயலகத்தை வேற எதற்காக அரசு பயன்படுத்தினாலும் அது கட்டப்பட்ட நோக்கம் வீண் தானே ?

இதற்க்கு பின்னால் இருக்கும் கண்ணாம்பூச்சி விளையாட்டை கொஞ்சம் பாப்போம்...

அரசுக்கு தேவையான முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு வரமுடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் முடிவு செய்தார்.

ஆனால் அப்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக அதற்கு முட்டுக்கட்டை போட்டது...

இந்த நிலையில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை 1000 கோடிக்கும் மேல் செலவு செய்து உருவாக்கினார்...அது எல்லாம் மக்களின் வரிப்பணம்...

இப்போது ஜெயலலிதா கருணாநிதியின் மீது உள்ள வீம்பு, ஈகோ ,நீ கட்டி நான் என்ன ஆளுவது என்ற போட்டி (ஜெயலலிதா பாணியில் சொன்னால் சபதம் ) போன்றவற்றால் 1000 கோடியை வீணாக்கி உள்ளார்...

அது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ? நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு விளையாட?எல்லாம் வியர்வை சிந்தி உழைக்கும் சாமான்ய மக்களின் வரிப்பணம்...

உங்களுக்குள் உள்ள ஈகோ மற்ற கருமாதிக்காக கருணாநிதி வீட்டுக்கு நான் போகமாட்டேன் என்று சபதம் போட்டால் அது நியாயம்...j

அதைவிட்டு விட்டுவிட்டு அவசர அவசரமாக கோட்டையில் இருந்த நூலகத்தை அகற்றிவிட்டு தலைமை செயலகத்தை மாற்றி அமைப்பது எந்த வகையில் நியாயம்..?

மக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்பார்ப்பது ஊழலற்ற ,சீரான சட்டம் ஒழுங்கு கொண்ட நல்லாட்சி மட்டுமே...

இது மாதிரி வீண் சபதங்கள் போட்டு மக்கள் வரிபணத்தை வீணடிப்பது அல்ல...

19 கருத்துகள்:

  1. இது உண்மையிலே சின்னபிள்ளைதனமாகத்தான் இருக்கிறது...

    கலைஞர் பணத்தில் கட்டியிருந்தால் தவிர்க்கலாம்..
    அரசு மணம்தானே...

    இன்னும் என்னன்ன செய்ய போகிறார்களோ..

    பதிலளிநீக்கு
  2. வலைச்சரத்தில் இன்று..

    மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா11:54 AM, மே 17, 2011

    கோட்டை இருக்கும்போது 1000 கோடியில் கருணாநிதி எதுக்கு தண்ணி தொட்டி கட்டினார்

    பதிலளிநீக்கு
  4. மக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்பார்ப்பது ஊழலற்ற ,சீரான சட்டம் ஒழுங்கு கொண்ட நல்லாட்சி மட்டுமே...//
    எதிர்பார்ப்பு நிறைவேறுமா??

    பதிலளிநீக்கு
  5. ஆரம்பமே இப்படியாக இருக்கிறதே!!

    பதிலளிநீக்கு
  6. அப்படி சொல்லாதீங்க. அம்மா அந்த கட்டடத்தை இடிக்கலையே? அப்புறம் எப்படி ஆயிரம் கோடி வீணாகும்?

    இப்படிக்கு அம்மா பேரவை

    ஹி ஹி....

    பதிலளிநீக்கு
  7. இந்த அம்மா எப்பவுமே இப்படித்தான் பாஸ், நீங்களாவது சரியா இருக்கலாமேன்னு சொன்னா, போன ஆட்சில இப்படித்தான் நடந்ததுன்னு சொல்லுவாங்க, என்னமோ போங்க, எல்லாம் நம்ம தலையெழுத்து இந்த கழிசடைகள்கிட்ட மாட்டி முழிக்கனும்னு

    பதிலளிநீக்கு
  8. தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ.ஹாஜா.

    தங்கள் பெயருக்கு ஏற்றார் போன்றே... "அதிரடி பதிவு" ..!

    அனைத்துமே சரியான கேள்விகளாய் கேட்டிருக்கிறீர்கள்..!

    "கருணாநிதி வகித்த முதல்வர் பணி எனக்கு இனி வேண்டாம்" என்றல்லவா மெய்யான வீம்பு காட்டி இருக்க வேண்டும், ஜெ...?!

    பதிலளிநீக்கு
  9. #ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    கோட்டை இருக்கும்போது 1000 கோடியில் கருணாநிதி எதுக்கு தண்ணி தொட்டி கட்டினார்#


    ஹி ஹி உங்கள் நக்கல் நல்லாத்தான் இருக்கு....ஏன் கட்டினார் என்பதைவிட கட்டியதை ஏன் வீணாக்கினார் என்பதே கேள்வி....

    பதிலளிநீக்கு
  10. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    இது உண்மையிலே சின்னபிள்ளைதனமாகத்தான் இருக்கிறது...

    கலைஞர் பணத்தில் கட்டியிருந்தால் தவிர்க்கலாம்..
    அரசு மணம்தானே...

    இன்னும் என்னன்ன செய்ய போகிறார்களோ#

    நான் விட்டதை நீங்கள் சொல்லி விட்டீர்கள்...நன்றி...

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' சொன்னது…

    தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ.ஹாஜா.

    தங்கள் பெயருக்கு ஏற்றார் போன்றே... "அதிரடி பதிவு" ..!

    அனைத்துமே சரியான கேள்விகளாய் கேட்டிருக்கிறீர்கள்..!

    "கருணாநிதி வகித்த முதல்வர் பணி எனக்கு இனி வேண்டாம்" என்றல்லவா மெய்யான வீம்பு காட்டி இருக்க வேண்டும், ஜெ...?!



    சபாஷ் சரியான வாதம் சகோ...நன்றி...

    பதிலளிநீக்கு
  13. சரியாகச் சொன்னீர்கள்!

    பதிலளிநீக்கு
  14. #ரஹீம் கஸாலி சொன்னது…

    நறுக்குன்னு கேட்டப்பா...#
    நன்றி தலைவரே...

    பதிலளிநீக்கு
  15. கருணாநிதி ஒரு சில கோடிகள் செலவழித்து கோட்டையைப் புதுப்பிக்காமல் 1200 கோடி செலவு செய்து புதிய கட்டிடம் கட்டப் படும் பொழுது என்ன தேவை என்று யாருமே வாயைத் திறக்கவில்லை.[அதில் எத்தனை கோடிகள் புதிய தலைமைச்செயலகத்தின் கட்டுமானப் பணிக்குப் பயன்பட்டதோ]

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....