14 மே 2011

அமோக வெற்றி அடைந்த அதிமுகவும், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்த திமுகவும்....


சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.....திமுக இருபத்தி மூன்று இடங்களை மட்டுமே வென்று படு தோல்வி அடைந்தது...

இதன்மூலம் அதிமுகவுக்கு அடுத்த படியாக அதிக இடங்களை வென்ற தே மு தி திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்துள்ளது...கருணாநிதியை மக்கள் எதிர்க்கட்சி தலைவராக கூட அங்கீகரிக்காமல் அந்த இடத்தை விஜயகாந்துக்கு அளித்துள்ளனர்.....

திமுகவின் குடும்ப ஆதிக்கம், ஸ்பெக்ட்ரம், பவர் கட் போன்றவற்றின் மூலம் தன்னை தானே தோற்கடித்து ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தி உள்ளார் கருணாநிதி.....

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவை காப்பாற்ற முயற்சிக்காமல் கட்சியை விட்டு தூக்கி இருந்தால் ,கடைசி மூன்று மாத காலத்தில் தனது பேரன்களை சினிமா துறையில் இருந்து விலகி இருக்க செய்து இருந்தால், தேர்தலுக்கு ஆறு மாத காலத்துக்கு முன்பாவது மின்சார பற்றாக்குறையை ஏதாவது செய்து சரி செய்ய முயன்று இருந்தால் ( முடியாத விசயம்தான்...),காங்கிரஸ் கட்சியையும், பாமகவையும் அடித்து விரட்டி இருந்தால் நிச்சயம் கருணாநிதி எதிர் கட்சி தலைவராவது ஆகி இருக்கலாம்....

கனிமொழிக்காக ,ராசாவுக்காக ,தனது குடும்பத்தினருக்காக தமிழக மக்களுக்கு செய்த சில நல்ல திட்டங்களின் மகசூலை அறுவடை செய்யாமல் கட்சியை கருகி போக செய்துள்ளார் கருணாநிதி.....

மக்கள் நல்ல முடிவையும்,தனக்கு ஓய்வையும் அளித்து இருப்பதாக சொல்லி இருக்கும் கருணாநிதி அதற்க்கான காரணங்களை என்று களை எடுக்க போகிறார்?

பல நல்ல திட்டங்களை செய்தும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் அதல பாதாளத்துக்கு போனதற்கான காரணங்களை என்று கருணாநிதி களை எடுக்க போகிறார்?

அவருக்கே வெளிச்சம்...

வெற்றி அடைந்த அதிமுக நல்லாட்சி தரவேண்டும்....ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் பல...
18 கருத்துகள்:

 1. பகிர்விற்கு நன்றி
  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

  கல்கத்தா


  http://speedsays.blogspot.com/2011/05/blog-post_1916.html

  பதிலளிநீக்கு
 2. // எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் திமுக சரிவை சந்தித்து உள்ளது.

  இதைவிட பெரிய அசிங்கம் எதுவும் இல்லை ...

  hats off to tamil peoples

  பதிலளிநீக்கு
 3. தங்களைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்..
  நேரம் இருப்பின் பார்க்கவும் ..
  அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா12:35 PM, மே 14, 2011

  விஜயகாந்த் சிவப்பு சுழல் விளக்கு காரில் மப்பும் மந்தாரமுமாக என்ன ஒரு காட்சி

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா12:37 PM, மே 14, 2011

  தி.மு.க இனி எப்போதும் எந்திரிக்க முடியாது

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லா12:38 PM, மே 14, 2011

  காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் காலை பரப்பிக்கொண்டு விழுந்தது கண்கொள்ளா காட்சி

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா12:39 PM, மே 14, 2011

  கலைஞரின் திருட்டு புத்தியை மக்கள் கண்டு பிடித்து விட்டார்களே

  பதிலளிநீக்கு
 8. நிறையா ஆடுனா இப்படித்தான் வழுக்கும்.

  பதிலளிநீக்கு
 9. போன அஞ்சி வருஷத்துல ஓவரா ஆக்டிங் குடுத்துட்டாங்க...

  பதிலளிநீக்கு
 10. #ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  விஜயகாந்த் சிவப்பு சுழல் விளக்கு காரில் மப்பும் மந்தாரமுமாக என்ன ஒரு காட்சி#

  ஹி ஹி கண்கொள்ளா காட்சி..........

  பதிலளிநீக்கு
 11. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

  காலத்தின் நியதி...#


  காலத்தின் நியதியை கொஞ்சம் திருத்தி காலத்தின் நீதி என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்..

  பதிலளிநீக்கு
 12. காலத்தின் கோலம், காட்சிகளுக் மாறும் ஹி ஹி

  பதிலளிநீக்கு
 13. இப்பொழுது எதிர் கட்சி என்ற அந்தஸ்து பெற முன்றில் ஒரு பங்காவது ஜெவித்து இருக்க வேண்டும்..... அப்படி இல்லை என்றால் எதிர் கட்சி தலைவர் என்ற அந்தஸ்து யாருக்கும் கிடைக்காது... இபொழுது கட்சி தலைவர்கள் என்று தான் நாடளுமன்றத்தில் இருக்க வேண்டும்... வேறு என்த பதவியும் இவர்களுக்கு கிடையாது

  பதிலளிநீக்கு
 14. #உங்களுள் ஒருவன் சொன்னது…

  இப்பொழுது எதிர் கட்சி என்ற அந்தஸ்து பெற முன்றில் ஒரு பங்காவது ஜெவித்து இருக்க வேண்டும்..... அப்படி இல்லை என்றால் எதிர் கட்சி தலைவர் என்ற அந்தஸ்து யாருக்கும் கிடைக்காது... இபொழுது கட்சி தலைவர்கள் என்று தான் நாடளுமன்றத்தில் இருக்க வேண்டும்... வேறு என்த பதவியும் இவர்களுக்கு கிடையாது#


  எந்த மூன்றில் ஒரு பங்கு? மொத்த தொகுதியிலா? அப்படியே வைத்துகொண்டாலும் அதிக இடங்களில் வென்ற இரண்டாவது பெரிய கட்சி விஜயகாந்த் கட்சிதானே...அந்த அடிப்படையில் அவர்தான் எதிர் கட்சி தலைவர்..

  பதிலளிநீக்கு
 15. வெற்றி அடைந்த அதிமுக நல்லாட்சி தரவேண்டும்....ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் பல..//.
  All are expect that.

  பதிலளிநீக்கு
 16. எதிர் கட்சி தலைவர் விஜயகாந்த் வாழ்க ! வாழ்க !

  பதிலளிநீக்கு
 17. தங்கள் மீது ஸலாம் நிலவுட்டுமாக சகோ.ஹாஜா,

  //திமுகவின் குடும்ப ஆதிக்கம், ஸ்பெக்ட்ரம், பவர் கட் போன்றவற்றின் மூலம் தன்னை தானே தோற்கடித்து ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தி உள்ளார் கருணாநிதி.....//--அஃதே.. அஃதே..! வெற்றியில் ஜெ.வுக்கு தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டது தவிர வேறு ஒரு பங்கும் இல்லை..! ஹி.. ஹி..

  // ..ந்தால்... ந்தால்... ந்தால்... நிச்சயம் கருணாநிதி எதிர் கட்சி தலைவராவது ஆகி இருக்கலாம்....///---உங்க குசும்புக்கு அளவே இல்லையா..?

  //வெற்றி அடைந்த அதிமுக நல்லாட்சி தரவேண்டும்....ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் பல...//--ஆம்.

  ம்ம்ம்... அப்புறம்....

  தமிழகம்... கத்திக்குத்துக்கு பயந்து தப்பித்து துப்பாக்கிச்சூட்டினுள் மாட்டிக்கொண்டதா..?

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....