27 மே 2011

ஜெயலலிதாவின் அடுத்த சறுக்கல்......காரணம் கருணாநிதியின் பாடலா?


சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த கல்வி ஆண்டில் ரத்து செய்தும் .பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும் குழுவுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறி வெற்றிகரமாக தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது சறுக்கலை ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா....

தனியார் பள்ளிகளுக்கு வயிற்றில் நெருப்பை வார்த்த சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன?200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை நிறுத்திவிட்டு இப்போது புதிதாக புத்தகங்களை அச்சடிக்க போகிறார்களா? எல்லாம் யாருடைய பணம்?

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான பாடத்திட்டங்கள் மூலம் ஒரே விதமான கல்வி கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே சமச்சீர் கல்வித்திட்டம்...அதை நிறுத்தியதன் மூலம் சாதாரண மாணவர்களின் கல்வி திறன் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்விதிறனோடு சமமாக கூடாது என்ற உயரிய கோட்பாட்டை செயல்படுத்தி உள்ளார் ஜெயலலிதா....


கருணாநிதியின் செம்மொழி பாடலும்,கனிமொழியின் கவிதையும் அந்த புத்தகங்களில் இடம் பெற்று இருப்பதும் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு ஒரு காரணம்...இல்லை இல்லை அதுதான் ஒரே காரணமாகவும் இருக்கலாம்...

தனியார் பள்ளிகள் அடிக்கும் கல்வி கொள்ளைகளுக்கு ஒரு அளவே இல்லை..

சாதாரண L K G வகுப்புக்கே வருட கட்டணமாக 60000 ரூபாய்க்கு மேல்தான் வாங்குகிறார்கள்....

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளைகளை தடுப்பதற்கே திமுக அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது.....இப்போது அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என கூறுவது ஒரு நல்ல அரசுக்கு அழகா?

இனி அந்த குழுவால் எந்த நன்மையும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக ஆகிவிட்டது.....தனியார் பள்ளிகள் நிர்ணயிப்பதே கட்டணம் என்ற பகல் கொள்ளைகளுக்கு இனி விடிவு காலமே இல்லாமல் போக போகிறது...

பதவி ஏற்று பதினைத்து நாட்களிலே சில தவறான முடிவுகளால் தனக்கு ஒட்டு போட்ட மக்களை முகம் சுளிக்க வைத்துவிட்டார் ஜெயலலிதா....

இது நன்மைக்கு அல்ல......

9 கருத்துகள்:

 1. உண்மைதான் இதை அரசு முறைப்படுத்த வேண்டும்

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
  USB செல்லும் பாதை

  http://speedsays.blogspot.com/2011/05/usb.html

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா1:24 PM, மே 27, 2011

  கொடுமை கல்வியிலும் அரசியலா...

  பதிலளிநீக்கு
 3. ///சாதாரண L K G வகுப்புக்கே வருட கட்டணமாக 60000 ரூபாய்க்கு மேல்தான் வாங்குகிறார்கள்....///

  அடப்பாவமே எனக்கு நம்ம நாட்டுக்கு வருனும்குற ஆசையே போயிர்சு , சரி அங்கே உங்க மச்சானும் இதையே எழுதி இருக்காரு என்ன சேதி !!!

  பதிலளிநீக்கு
 4. என்ன கொடுமை. பள்ளிகள் கேட்டால் அரசு தலையிடுமாம். உங்களுக்கு ஓட்டுப் போட்ட பெற்றோர்கள் எந்த நம்பிக்கையில் ஓட்டுப் போட்டார்கள்?

  பதிலளிநீக்கு
 5. அரசியல் என்னவெல்லாம் பண்ணுது கொய்யால...

  பதிலளிநீக்கு
 6. இதை அரசியல் கொடுமைன்னு சொல்லுறதா இல்ல மக்களோட விதி அப்பிடீன்னு சொல்றதா??
  ஹிஹி

  பதிலளிநீக்கு
 7. நாம இரவில வந்தாலும் நம்மட பங்களிப்பு கட்டாயம் இருக்கும் பாஸ்!!!மவனுகளே நான் இல்லாத நேரத்தில ஏதாச்சும் மொக்கையல போடுங்கோ...அப்புறம் தெரியும்!!

  பதிலளிநீக்கு
 8. நடக்கும் என்பார் நடக்காது........
  நடக்காதென்பார் நடந்துவிடும்.........!

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பர்களே...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....