18 மே 2011

நாறிப்போன நாதாரி கட்சிகள்....


நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் திமுகவுக்கு மட்டும் பாடம் புகட்டவில்லை...ஜாதியின் பெயரால் அரசியல் செய்யும் சாக்கடை கட்சிகள், ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் சவுக்கடி கொடுத்துள்ளனர்...


45 சீட் தருபவர்களுடன் தான் கூட்டணி என்று அங்கும் ,இங்கும் மாறி மாறி பேரம் பேசி இன்ப அதிர்ச்சியாக கருணாநிதியிடம் 30 சீட் வாங்கி போட்டியிட்ட ராமதாஸ் அதில் ஒரு பூஜ்யத்தை அழித்துவிட்டு மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்....ஜாதியின் பெயரால் பச்சோந்தி அரசியல் நடத்தும் ராமதாசுக்கு இனி எழுந்து நிற்க முடியாத அளவுக்கு மரண அடி கொடுத்துள்ளனர் மக்கள்...

கொ மு க என்று ஒரு கட்சி.....

எந்த கொள்கை ,கோட்பாடுகளும் இல்லாமல் இரண்டு கட்சிகளிடமும் இறுதி வரை பேரம் பேசி திமுக 7 தொகுதிகளை தந்ததால் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது...போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் மக்கள் கொ மு க வுக்கு கும்மாங்குத்து கொடுத்து நாக் அவுட் செய்துள்ளனர்...

இன்னும் நீங்களெல்லாம் என்ன முடிக்கு ( மயிருக்கு ) கட்சி நடத்துகிறீர்கள்?

தெருவுக்கு தெரு நடக்கும் நாய்ச்சண்டைய போல அடித்துகொள்ளும் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட்ட63 தொகுதிகளில் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டும் வெற்றியை கொடுத்து மற்ற தொகுதிகளில் ஓட ஓட அடித்து விரட்டி உள்ளனர் மக்கள்..

ஈழத்தமிழர் பிரச்சினைகளில் இரட்டை வேடம் போட்ட திருமாவளவனுக்கு பத்துக்கு பத்து தோல்வியை கொடுத்து மொத்து மொத்துனு மொத்தி விட்டனர் வாக்காளர்கள்...

இந்த மாதிரி சில்லறை கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்த மக்களுக்கு நன்றி நன்றி....

16 கருத்துகள்:

 1. இந்த பாடம் இனிவரும் காலங்களிலும் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு புகட்ட வேண்டும்

  பதிலளிநீக்கு
 2. அதிரடி ரிப்போர்ட் ,விமர்சனம் ,கருத்துரை. இதில் உண்மையும் இருக்கு என்று சொல்ல பயமா இருக்கு . நான் யார் வம்புக்கும் போகாமல் இப்படி எழுத திணறுகின்றேன்.தொந்தரவுகளும். தொல்லைகளும் வந்து விடுமோ என எண்ணுவதால்

  பதிலளிநீக்கு
 3. இனி தமிழகத்தில் சாதி அரசியல் எடுபடாது என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் மக்கள்.

  பதிலளிநீக்கு
 4. இனி ஜாதி வெறியர்கள் ஒழிவர்

  பதிலளிநீக்கு
 5. //
  45 சீட் தருபவர்களுடன் தான் கூட்டணி என்று அங்கும் ,இங்கும் மாறி மாறி பேரம் பேசி இன்ப அதிர்ச்சியாக கருணாநிதியிடம் 30 சீட் வாங்கி போட்டியிட்ட ராமதாஸ் அதில் ஒரு பூஜ்யத்தை அழித்துவிட்டு மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்....ஜாதியின் பெயரால் பச்சோந்தி அரசியல் நடத்தும் ராமதாசுக்கு இனி எழுந்து நிற்க முடியாத அளவுக்கு மரண அடி கொடுத்துள்ளனர் மக்கள்...//

  ஹா ஹா ஹா ரைட்டு....

  பதிலளிநீக்கு
 6. //ஈழத்தமிழர் பிரச்சினைகளில் இரட்டை வேடம் போட்ட திருமாவளவனுக்கு பத்துக்கு பத்து தோல்வியை கொடுத்து மொத்து மொத்துனு மொத்தி விட்டனர் வாக்காளர்கள்...//

  ஹா ஹா ஹா எல்லாரும் ஒரு முறை கூட கைதட்டுங்கள் மக்களே....

  பதிலளிநீக்கு
 7. நறுக்குன்னு நாலு ஓட்டு குத்தியாச்சு..

  பதிலளிநீக்கு
 8. என்னக்கு திருமா ஒரு காமெடி யனாக தான் தெரிகிறார்......

  பதிலளிநீக்கு
 9. !* வேடந்தாங்கல் - கருன் *! அப்போ கள்ள ஒட்டா ????

  பதிலளிநீக்கு
 10. #nidurali சொன்னது…

  அதிரடி ரிப்போர்ட் ,விமர்சனம் ,கருத்துரை. இதில் உண்மையும் இருக்கு என்று சொல்ல பயமா இருக்கு . நான் யார் வம்புக்கும் போகாமல் இப்படி எழுத திணறுகின்றேன்.தொந்தரவுகளும். தொல்லைகளும் வந்து விடுமோ என எண்ணுவதால்#


  நன்றி அண்ணா....

  பதிலளிநீக்கு
 11. #பாலா சொன்னது…

  இனி தமிழகத்தில் சாதி அரசியல் எடுபடாது என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் மக்கள்.#

  மக்களின் நெத்தியடி தீர்ப்புதான் அது....

  பதிலளிநீக்கு
 12. #விக்கி உலகம் சொன்னது…

  நன்றி நன்றி!#

  மாம்ஸ் நான்தானே நன்றி சொல்லணும் ?

  பதிலளிநீக்கு
 13. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி நண்பர்களே...

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லா12:20 PM, மே 19, 2011

  சூப்பர் தலைப்பு!

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லா12:20 PM, மே 19, 2011

  தமிழின துரோகிகள் ஒழிந்தார்கள்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....