03 மே 2011

விஜய்யை வீழ்த்திய அஜித்....


முதலமைச்சர் கனவில் அலையும் பல நடிகர்களுக்கு மத்தியில் தான் ஒரு வித்தியாசமானவன் என்பதை நிருபித்து இருக்கிறார் அஜித்...

நாலு படம் ( இப்ப எல்லாம் ரெண்டு படம் போதும்) நடித்தாலே கூச்சம் இல்லாமல் பவர் ஸ்டார், விளக்குமாறு ஸ்டார் என பெயர்களை வைத்துகொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் தனது பெயருக்கு முன்னாள் எந்த அடைமொழி பெயரையும் போடாமல் இருப்பவர்....

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் மற்றவர்கள் மாதிரி ஜால்ரா போடாமல் மிரட்டி விழாவுக்கு அழைக்கிறார்கள் என்று உண்மையை போட்டு உடைத்தவர் அஜித்....

இப்போது இன்னொரு அதிரடியும் செய்து இருக்கிறார்....

தங்களின் சுயநலத்துக்காக ரசிகர்களை பயன்படுத்திவரும் நடிகர்களை சவுக்கால் அடிப்பதுபோல தனது ரசிகர் மன்றத்தை கலைத்துள்ளார்...

ரசிகர்கள் கொடுக்கும் பணத்தினால் சம்பாரிக்கும் நடிகர்கள் அதே ரசிகர்களை ஏதோ தங்களின் அடிமைகள்போல நடத்தி ,கூட்டங்கள் கூட்டி, அரசியலில் குதிப்பதற்கு பகடைகாய்களாக பயன்படுத்தி வரும் நேரத்தில் தனது ரசிகர் மன்றத்தை கலைத்து சக நடிகர்களின் வயிற்றில் ஆசிட்டை வார்த்துள்ளார்....

இந்த விசயத்தில் தனது ரசிகர்மன்றத்தை நடந்து முடிந்த தேர்தலில் பகடைக்காயாக பயன்படுத்திய விஜய்யை வீழ்த்தி நமது வேலை நடிப்பது மட்டுமே என பொட்டில் அடித்தாற்போல உணர்த்தி உள்ளார்....

இந்த அதிரடி செயலால் விஜய்யை மட்டும் அல்ல ரசிகர்களை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தும் எல்லா நடிகர்களையும் வீழ்த்தி ஒரு நல்ல மனிதனாக வென்று இருக்கிறார்....அஜித்...

11 கருத்துகள்:

 1. அஜீத் ஒரு சிறந்த மனிதர் என்பதில் சந்தேகமே இல்லை. தல போல வருமா?

  பதிலளிநீக்கு
 2. சினிமாவில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் நல்ல மனிதராக வாழ நிணைக்கும் நல்ல மனிதர்

  பதிலளிநீக்கு
 3. தலையுள்ள அனைவரும் தலை இல்லை
  தல போல வருமா

  பதிலளிநீக்கு
 4. ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 5. முன்னுதாரணமாக செயல் படும் அஜீத்துக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. தல தல தான்...
  இந்த தைரியம் யாருக்கும் வராது...

  பதிலளிநீக்கு
 7. உங்கள் வருகைக்கும் ,பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பர்களே...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....