06 மே 2011

அடுத்தவாரம்.....இதே நாள்....பலதலைகள் உருளும்...


அடுத்த வாரம் இதே நாள் இதே நேரத்தில் பல தலைகள் அருவாள் ,கத்திபோன்ற ஆயுதங்கள் இல்லாமல் வெறும் விரல்களினால் விழ போகின்றன......

நாம் ஒட்டு போட்ட விரல்களினால்.......

ஓய்வில் இருந்த ஜெயலலிதா மக்களுக்காக உழைக்க !!! வரலாம்....

மக்களுக்காக உழைத்த கருணாநிதி !!!!ஓய்வெடுக்க போகலாம்!

பல கிரிமினல்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாக பரிணாம வளர்ச்சி பெறலாம்!

சில ஊழல்வாதிகள் கம்பி எண்ணுவதற்கு தயாராகலாம்....

உன்னால் நான் தோற்றேன்,என்னால் நீ வென்றாய் என கூட்டணி கட்சிகள் காலை வாருவதற்க்கு கடுப்பில் நிற்கலாம் .....

ரிசல்ட் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் ரபி பெர்னார்ட் எந்தவித சலனமும் இல்லாமல் அதிமுக முன்னணியில் இருப்பதாக ஜெயா டிவி யில் பேசிக்கொண்டு இருக்கலாம்.....

சன் டிவி ,கலைஞர் டிவி வகையறாக்கள் தங்கள் பட விளம்பரங்களை கொஞ்ச நேரம் ஒத்தி வைத்துவிட்டு நக்கீரன் கோபால்,வடிவேலு,வீரமணி போன்றவர்களுடன் தேர்தல் சிறப்பு நிகழ்சிகளை வழங்கலாம்....

வெற்றி பெற்ற கட்சியினரும், தோல்வியுற்ற கட்சியினரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக இருக்கலாம்....வேறு என்ன ...?தண்ணியில் மிதப்பதுதான்....

5 கருத்துகள்:

 1. ரபி பெர்னார்ட் எந்தவித சலனமும் இல்லாமல் அதிமுக முன்னணியில் இருப்பதாக ஜெயா டிவி யில் பேசிக்கொண்டு இருக்கலாம் //// டிவி நிறைய பார்பீங்களோ?

  பதிலளிநீக்கு
 2. கடைசி வரிகள் முற்றிலும் உண்மை. நன்றி நண்பரே,,,

  பதிலளிநீக்கு
 3. //ரிசல்ட் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் ரபி பெர்னார்ட் எந்தவித சலனமும் இல்லாமல் அதிமுக முன்னணியில் இருப்பதாக ஜெயா டிவி யில் பேசிக்கொண்டு இருக்கலாம்.....


  ஹி ஹி குறும்பி
  ================================
  நாமே ராஜா, நமக்கே விருது-6

  http://speedsays.blogspot.com/2011/05/6.html

  பதிலளிநீக்கு
 4. //வெற்றி பெற்ற கட்சியினரும், தோல்வியுற்ற கட்சியினரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக இருக்கலாம்....வேறு என்ன ...?தண்ணியில் மிதப்பதுதான்..///

  ஹே ஹே ஹே ஹே பன்ச் டயலாக் இது சூப்பர்....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....