04 மே 2011

வெட்கமற்ற தலைவர்களும்,மானமற்ற கட்சிகளும்..


நடந்து முடிந்த தேர்தலில்தான் எத்தனை வகையான கூத்துக்கள்,வெட்கம்,மானம், சூடு,சொரணை( அது ஏன் இந்த நான்கு வார்த்தைகளும் எப்போதும் எல்லா இடத்திலும் ஒன்றாகவே வருகின்றன?)இல்லாமல் எதிரிகளாக இருந்தவர்கள் ஒன்றாக சேர்த்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த காட்சிகள்!!

தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு வரை தி மு க அரசுக்கு முட்டை மார்க் போட்ட ராமதாஸ் மக்களுக்கு பட்டை நாமத்தை போட்டு விட்டு அதே தி மு க வுடன் கூட்டணி அமைத்து கூச்சம் நாச்சம் இல்லாமல் கருணாநிதியுடன் போஸ் கொடுத்தார்.....சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பா ம க போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் அதை தோற்கடிப்பதே லட்சியம் என முழங்கிய ஸ்டாலின் ராமதாசை சந்தித்து ஆசி வாங்கினார்...

ஆளும்கட்சியும் சரி இல்லை ,எதிர்கட்சியும் சரி இல்லை அடுத்த முறை நான்தான் முதலமைச்சர் என கண்கள் சிவக்க வசனம் பேசிய விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து நானும் சராசரி அரசியல்வாதிதான் என நிருபித்தார்...

குடித்துவிட்டு சட்டசபைக்கு செல்கிறார் என்று நாகரிகம் இல்லாமல் விஜயகாந்தை விமர்சித்த ஜெயலலிதாவும் அதே விஜயகாந்துடன் கூட்டணி என்றார்..

நானும் அடுத்த முதல்வர்,நானும் அடுத்த முதல்வர் என வடிவேலு மாதிரி கூவிய ( நானும் ரவுடி,நானும் ரவுடி)சரத்குமார் கேவலம் இரண்டு சீட்டுக்காக அதிமுக விடம் கூட்டணி அமைத்து சீரியசாக சிரிக்க வைத்தார்...

ஸ்பெக்ட்ரம் பூதத்தை காட்டி மிரட்டிய காங்கிரஸ் கட்சியும், மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்கிறோம் என்று சின்னபிள்ளை தனமாக மிரட்டி பின்பு சோனியாவிடம் சரணடைந்த திமுகவும் உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டாத கதையாக மக்களை சந்தித்து ஒட்டு கேட்டனர்....

இவர்கள் எல்லாம் நிச்சயம் சோற்றில் உப்பு போட்டு சாப்பிட மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம,...( ஆமாம் .ரோசத்துக்கும் உப்புக்கும் என்ன சம்பந்தம்?)

நிச்சயம் நாமும் இந்த கட்சிகளில் ஏதாவது ஒன்றுக்குத்தான் ஓட்டும் போட்டு இருப்போம்....நாம்தான் இதை எல்லாம் பார்த்து பழகிவிட்டோமே.....

இந்த முரண்பட்ட இரண்டு கூட்டணிகளில் ஏதாவது ஒன்று ஜெயிக்க போகிறது...மக்கள்தான் தோற்க போகிறார்கள்....

10 கருத்துகள்:

 1. நிஜம்தான்... என்றுமே மக்களுக்கு தான் தோல்விகள்...

  பதிலளிநீக்கு
 2. நியாயம் தர்மம், மரியாதை இதெல்லம் 30 ஆண்டுகளுக்கு முன் அரசியலை விட்டே வெளியேற்றப்பட்டு விட்டது... இனி அவைகளைப்பற்றி பேசி என்னவாகப்போகிறது...

  பதிலளிநீக்கு
 3. >>>>இந்த முரண்பட்ட இரண்டு கூட்டணிகளில் ஏதாவது ஒன்று ஜெயிக்க போகிறது...மக்கள்தான் தோற்க போகிறார்கள்....

  பன்ச்சிங்க லைன்

  பதிலளிநீக்கு
 4. இந்த முரண்பட்ட இரண்டு கூட்டணிகளில் ஏதாவது ஒன்று ஜெயிக்க போகிறது...மக்கள்தான் தோற்க போகிறார்கள்.... //// அருமையான சிந்தனை..

  பதிலளிநீக்கு
 5. //இந்த முரண்பட்ட இரண்டு கூட்டணிகளில் ஏதாவது ஒன்று ஜெயிக்க போகிறது...மக்கள்தான் தோற்க போகிறார்கள்....


  சரியாக சொன்னீர்கள்

  ------------------------
  பாதுகாப்பா இருக்கறது எப்படி?
  http://speedsays.blogspot.com/2011/05/blog-post_04.html

  பதிலளிநீக்கு
 6. லேட்டா சொன்னாலும் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 7. //இந்த முரண்பட்ட இரண்டு கூட்டணிகளில் ஏதாவது ஒன்று ஜெயிக்க போகிறது...மக்கள்தான் தோற்க போகிறார்கள்..//
  Point!

  பதிலளிநீக்கு
 8. உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே....

  பதிலளிநீக்கு
 9. தோக்குறதுதான நம்ம தலை எழுத்தே , மக்கள் செல்வாக்கு மிக்க நல்லவர்கள் எது எதுக்கோ பயந்து கொண்டு உள்ளே இறங்காமல் இருக்கும் வரைக்கும் நம் தலைவிதி இதுதான் ...

  பதிலளிநீக்கு
 10. முரண்பட்ட இரண்டு கூட்டணிகளில் ஏதாவது ஒன்று ஜெயிக்க போகிறது...மக்கள்தான் தோற்க போகிறார்கள்....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....