16 மே 2011

ஜெ ..ஜே ..ஆவாரா ???


இன்று பதவி ஏற்கிறார் ஜெயலலிதா....அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்....அதில் 24 பேர் புதுமுகங்கள்....நல்ல முயற்சிதான்.....

பழையவர்களே மீண்டும் மந்திரி ஆனால் ஊழலை கட்டுபடுத்த முடியாது என ஜெயலலிதா நினைத்து இருக்கலாம்...

பதவி ஏற்றவுடன் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.....நல்ல விசயம்தான்....கொலை, கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில் இது மிகவும் அவசியமான ஒன்று....ஆனால் வழக்கம்போல தனக்கு வேண்டப்பட்டவர்களை காவல் துறை உயர் பதவிகளில் அமர்த்தாமல் நேர்மையான அதிகாரிகளை அமர்த்தினால் மட்டுமே ஜெ நினைத்ததை சாதிக்க முடியும்...

அடுத்ததாக மின்சார தட்டுபாடு சீர் செய்யப்படும் என்று சொல்லி இருக்கிறார்...இது மிக மிக முக்கியமான ஒரு விஷயம்...திமுக தோல்விக்கே காரணமான ஒரு விஷயம்....ஆனால் தற்போதைக்கு இது சாத்தியமாகுமா என்றால் இயலாத விசயம்தான்...பார்ப்போம் என்ன செய்ய போகிறார் என்று..

அடுத்ததாக தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறி இருக்கிறார்....வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடாமல் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொன்னதில் பாதியாவது நிறைவேற்றுவார் என்பதில் ஐயமில்லை....

சென்ற ஜெ ஆட்சியில் மந்திரிகள் நிம்மதியாக தூங்கவில்லை...அவர்கள் பதவியில் இருக்கிறார்களா இல்லையா என்பதை காலையில் செய்தித்தாள்களை படித்துதான் தெரிந்துகொண்டார்கள்....அதுமாதிரி வருடத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மந்திரிகளை மாற்றாமல் அவர்களை சுதந்திரமாக செயல்படவிட்டால் அவர்களும் தங்களுக்கு செய்தது போக மக்களுக்கும் நல்லது செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்...

ஆனால் ஒன்று...

இதே கருணாநிதி வென்று இருந்தால் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அன்றே அவரை சந்தித்து வாழ்த்து சொல்லி இருப்பார்கள்....அது இன்றி வரை ஜெயலிதாவின் கூட்டணி கட்சிகள் செய்யவில்லை....தலைவர்கள் யாரும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை....ஒருவேளை ஜெயலலிதா நம்மை மதிக்க மாட்டார் என அவர்கள் எண்ணி இருக்கலாம்...

இதுமாதிரி அடுத்தவர்களை ஜெயலலிதா மதிக்கமாட்டார் என்ற எண்ணம் முதலில் மாற வேண்டும்...அதற்கு அவர் இன்னும் கீழே இறங்கி வர வேண்டும்...

அடுத்ததாக சென்ற முறை செய்ததுபோல சில அதிரடி சட்டங்களை ( எஸ்மா,டெஸ்மா,மத மாற்ற தடை சட்டம், )செய்யாமல் இருந்தாலே ஜெக்கு ஜேதான்.....

செய்வாரா ஜெ ?

9 கருத்துகள்:

  1. பெயரில்லா10:59 AM, மே 16, 2011

    எல்லாமே ஜெயம்!!

    பதிலளிநீக்கு
  2. பார்ப்போம் என்ன செய்ய போகிறார் என்று

    பேக் ரவுண்ட் கருப்பு வேண்டாம் கண்கூசுது


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

    இதுக்கெல்லாம் சரிபட்டு வருமாட்டே

    http://speedsays.blogspot.com/2011/05/how-to-make-problems.html

    பதிலளிநீக்கு
  3. அதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்...

    தற்போது பணிவு தெரிவதாக எனக்குபடுகிறது..

    பதிலளிநீக்கு
  4. என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
    வலைச்சரம் வாங்க....

    பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  5. கண்டிப்பா மாறுவாங்கன்னு நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. இப்பவே கைது படலம் ஆரம்பிச்சாச்சு....

    பதிலளிநீக்கு
  7. பார்க்கலாம் இந்த முறை ஜெயலலிதா மாறுகிறாரா? அல்லது மக்களை ஏமாற்றுகிறாரா என்று

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....