11 மே 2011

கருணாநிதியா ஜெயலலிதாவா ?ஆளப்போவது யார் ?இறுதி கருத்து கணிப்பு முடிவுகள்.....

ஒரே குழப்பமா இருக்கு.....யாரு ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை விட இந்த கருத்து கணிப்புகளில் எது உண்மையாக போகிறது என்பதை நினைத்துதான்...முதலில் திமுக வின் இன்னொரு முரசொலியான நக்கீரன்....கருத்துகணிப்பு...ஆனால் ஒன்று நம்ம டி ஆர் தேர்தலை புறக்கணித்த ஒரே காரணத்தினால்தான் மேற்குறிய இருவருக்குமே வாய்ப்பு என்பதில் கடுகளுவும் சந்தேகம் இல்லை!!

திமுக கூட்டணிக்கு 137

நக்கீரன் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பின்படி திமுக கூட்டணிக்கு 137 இடங்கள் கிடைக்கலாம்.

அதிமுக கூட்டணிக்கு 89

அதிமுக கூட்டணிக்கு 89 இடங்கள் கிடைக்கலாம்.

திமுகவுக்கு மட்டும் இத்தேர்தலில் 84 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 24, பாமக 19, விடுதலைச் சிறுத்தைகள் 6, முஸ்லீம் லீக் 3, மூவேந்தர் முன்னேற்றக் ழகம் 1 என மொத்தம் 137 இடங்களை திமுக பிடிக்கிறது.

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு மட்டும் 73 இடங்கள் கிடைக்கும். தேமுதிகவுக்கு 7, கொங்கு இளைஞர் பேரவைக்கு 1, சிபிஎம்முக்கு 5, சிபிஐக்கு 2, மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு சீட் என மொத்தம் 89 இடங்கள் கிடைக்கும்.

சிஎன்என் - ஐபிஎன்:

முதல் கட்டமாக சிஎன்என் -ஐபிஎன் - தி வீக் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளது. இரவு 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 132 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 114 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் சொல்கிறது...

கருணாநிதிக்கு ஆதரவு:

யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு சாதகமாக 48 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 38 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

யார் மோசமான முதல்வர் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். கருணாநிதி என 33 சதவீதத்தினர் கூறியிருந்தனர்.( அப்பாடா .....ஒரு சதவீதம்தான் வித்தியாசம்)

அதேசமயம், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் யார் என்பதில் கருணாநிதியை விட ஜெயலலிதாவுக்கு 5 சதவீத ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது.

யார் ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் அதிகம் என்ற கேள்விக்கு கருணாநிதி ஆட்சியில் என 47 சதவீதத்தினரும், ஜெயலலிதா ஆட்சியில் என 18 சதவீதத்தினரும் கூறியிருந்தனர்.(குடும்பமே இல்லாமல் இவ்ளோ சதவீதமா?)

ஹெட்லைன்ஸ் டுடே:

திமுக 130 இடங்கள் வரை பெறும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே - ஓஆர்ஜி கணிப்பு. இதுவரை இவர்கள் மூன்று கருத்துக் கணிப்புகளை நடத்திவிட்டனர். அவற்றில் இரண்டில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

இவர்கள் கணிப்புப் படி, திமுக கூட்டணி - 115 முதல் 130 வரை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 105 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆட்சியைப் பிடிப்பதில் திமுக - அதிமுக கூட்டணிகள் இடையே கடும்போட்டி நிலவும் என்றும் ஆனால், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ்:

நியூஸ் எக்ஸ் சேனல் முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 176 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 64 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த கணிப்பு முடிவு வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது இந்த சேனல். 2 ஜிதான் திமுகவுக்கு பெரும் வீழ்ச்சி என்று கூறியது இந்த சேனல்.

ஸ்டார் நியூஸ் - நீல்சன் கணிப்பு:

ஸ்டார் நியூஸ் மற்றும் நீல்சன் மேற்கொண்ட கணிப்பின்படி திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 110 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்கிறது ஸ்டார் நியூஸ் கணிப்பு.


பார்ப்போம் இவற்றில் எது ஓரளவாவது உண்மையாக போகிறது என்பதை....

10 கருத்துகள்:

  1. மொத வெட்டு.தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடித்துவிடும் என உள் மனம் சொல்கிறது.அதுவும் இம்முறை கூட்டணி ஆட்சிதான் எற்ப்படும்.இம்முறை காங்கிரஸுக்கு அமைசரவையில் நிச்சயம் பங்கு உண்டு.இது என் கணிப்பு.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் இரண்டு நாள் கழித்து சொன்னாதான் நம்புவேன்...
    அப்ப தெரியும் யார் ஆளப்போவது...

    கருத்து கணிப்புகள் எவ்வளவு உண்மை என்று பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  3. சி.என்.என் கருத்துக்கணிப்பு கேணத்தனமா இருக்கு.கருணா நிதி முதல்வர் ஆவதை மக்கள் விரும்புகிறார்களாம்,ஆனால் ஜெயாவுக்குத்தான் ஆதரவு அதிகமாம். என்ன லாஜிக்...

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:51 PM, மே 11, 2011

    எந்த கணிப்பு சரி என்று இரண்டு நாட்களில் தெரிந்து விடும்

    பதிலளிநீக்கு
  5. யார் ஜெயிச்சாலும் நம்ம தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது, இப்பமே பெட்ரோலுக்கு நான்கு ரூவா கூடபோகுது...

    பதிலளிநீக்கு
  6. http://my-poonga.blogspot.com/2011/05/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  7. இன்னும் ரெண்டே நாள் இல்லாம முடிவுக்கு வந்துவிடும்..

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா5:09 PM, மே 11, 2011

    வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிக்கு கூட புரளியை கிளப்பி விடுவானுக..13 ஆம்தேதி கரெக்டா தெரிஞ்சிக்கலாம் பாஸ்

    பதிலளிநீக்கு
  9. கருத்துக்கணிப்புக்கள் மாறுப்பட்ட விதங்களில் முடிவுகளை தந்துள்ளன. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...

    பதிலளிநீக்கு
  10. அடுத்தது அம்மா தான் பாஸ்

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....