23 மே 2011

ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி கருணாநிதி டெல்லி பயணம்...


இலங்கையில் இனபடுகொலையை அரங்கேற்றிய அசுரன் ராஜபக்சேவை போற்குற்றத்தின் கீழ் கைது செய்து ஐநா சபை விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக கருணாநிதி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்....

இது சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங் ,சோனியா காந்தி ஆகியோரை சந்தித்த கருணாநிதி இலங்கைக்கு இந்தியா பொருளாதார அடிப்படையில் எந்த உதவியும் செய்யகூடாது என்றும், தமிழக மீனவர்களை சுட்டு கொள்ளும் இலங்கை கடற்படையினர் மீது பதிலுக்கு பதில் இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த மத்திய அரசு உத்தரவு இடவேண்டும் எனவும் வலியுறித்தினார் ......

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் டெல்லியிலே உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளார்...


அட போங்க சார்....இது உண்மையா இருக்குமோன்னு அதிர்ச்சி அடைந்து விட்டீர்களா?


இதெல்லாம் கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு.......நம்ம தாத்தா ஜென்டில்மேன்....அதெல்லாம் செய்யமாட்டார்... நம்ம கருணாநிதி தாத்தாவுக்கு ஒரு தவறும் செய்யாமல் சி பி ஐ பொழுதுபோக்குக்காக கைது செய்த தனது செல்ல மகள் கனிமொழியை சந்திக்கவும், அகில உலக அப்பாவி ஆண்டிமுத்து ராசாவை சந்திக்கவுமே நேரம் பத்தலையாம்....

பாவம் வயதான காலத்துல மகளுக்காக டெல்லி சென்ற கருணாநிதிக்கு பாவப்பட்டதமிழ் மக்களை நினைக்கவா நேரம் இருக்க போகிறது?

12 கருத்துகள்:

  1. விடுங்க பாஸ் இவர் என்ன மனுநீதி சோழனா..
    மண்ணுநீதி தான் இவர்

    பதிலளிநீக்கு
  2. ஒருவரை தூக்கில் போட்டால் மட்டும் அவர் குற்றம் செய்தவர் இல்லை

    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    ஒரு காதல் கதை
    http://speedsays.blogspot.com/2011/05/love-story.html

    பதிலளிநீக்கு
  3. அட போங்கய்யா, வேற விஷயம் ஏதாவது சொல்லுங்க பாஸ்....!!!

    பதிலளிநீக்கு
  4. பாவிப்பயலே...தொடங்கினவிதத்தை பார்த்து ஒருவேளை உண்மையோன்னு நெனைச்சிட்டேன்...
    தாத்தா ரொம்ப நல்லவர்..

    பதிலளிநீக்கு
  5. ஒரு நிமிஷம் ஷாக்காயிட்டேன்...என்னடா அப்படின்னு கிள்ளி பாத்த போது உண்மைஎன்னன்னு அடுத்த பத்தில போட்டு காப்பாத்திட்டய்யா மாப்ள ஹிஹி!

    பதிலளிநீக்கு
  6. சகோ.ஹாஜா...

    வினவில் ஒரு கட்டுரை... 'ராஜபக்சேயை தண்டிக்கக்கோரி...'

    இப்போது இங்கே நீங்களும்... 'ராஜபக்சேயை கைது செய்யக்கோரி...'

    ?!?!?!?

    எனக்கு ஒரு டவுட்டு...

    ராஜபக்சே நெசமாலுமே இந்திய பாஸ்போர்ட் வைத்து இருக்கிறாரா..? அவர் இந்தியரா..? இல்லை இலங்கையை சேர்ந்தவரா..?

    ஒருவேளை இந்திய சட்டங்கள் அடிப்படையில் பிறநாட்டு அதிபர்களை - பிறநாட்டு குடிமக்களை - தண்டிக்க வழிவகை உண்டா..? தண்டிக்க இயலுமா..?

    விபரமறிந்தோர்... சட்டம் தெரிந்தோர்... எனக்கு பதில் சொல்லுங்களேன் பிளீஸ்..!

    ஏனெனில், பிறநாட்டு இனப்படுகொலை குற்றவாளிக்கே... இந்திய சட்டத்தின் படி தண்டிக்கவேண்டி இந்திய அரசிடம் கோரும்போது... அதேபோன்ற இனப்படுகொலை குற்றம் செய்த ஒரு இந்தியனை- மோடியை- தண்டிக்க வேண்டும் என, என்னுடைய இந்திய அரசிடம் நான் கேட்பதையேகூட சிலர் கிண்டல் பண்ணுகிறார்களே.... அதான் கேட்டேன்..!

    நம் நாட்டு சட்டம் பிற நாட்டு மக்களுக்கு மட்டும்தானா? நமக்கு இல்லையா..?

    பதிலளிநீக்கு
  7. வாங்க மைந்தன் சிவா...நம்ம தாத்தா
    நல்லவர் மட்டும் இல்லை....ரொம்ப ரொம்ப நல்லவர்...

    பதிலளிநீக்கு
  8. #விக்கி உலகம் சொன்னது…
    ஒரு நிமிஷம் ஷாக்காயிட்டேன்...என்னடா அப்படின்னு கிள்ளி பாத்த போது உண்மைஎன்னன்னு அடுத்த பத்தில போட்டு காப்பாத்திட்டய்யா மாப்ள ஹிஹி!#

    ஹா ஹா....இன்னும் கிள்ளி வேற பார்த்திங்களா?நன்றி மாம்ஸ்..

    பதிலளிநீக்கு
  9. சகோ ஆசிக் ...
    நான் சொன்னது ஐநா சபையில் விசாரிப்பதற்கு....மோடி தண்டிக்கப்படவேண்டிய அப்பட்டமான கொலைகாரன்...இதை நடுநிலைமையான மாற்றுமத சகோதரர்களும் ஏற்றுகொள்வார்களே...

    பதிலளிநீக்கு
  10. #ரியாஸ் அஹமது சொன்னது…
    விடுங்க பாஸ் இவர் என்ன மனுநீதி சோழனா..
    மண்ணுநீதி தான் இவர்#

    super name...இந்த பெயரும் நல்லா இருக்கே...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....