22 நவம்பர் 2012

ரத்த வெறி பிடித்த இஸ்ரேலும்,நாதியற்ற பாலஸ்தீன மக்களும்...


நூற்றுகணக்கான குழந்தைகளையும் ,பெண்களையும்  ஈவு இரக்கமில்லாமல்   கொன்று குவித்த கேடு கேட்ட இஸ்ரேல் இப்போது போர் நிறுத்தம் என்று அறிவித்துள்ளது...இது போன்ற குழந்தைகளை கொள்வதற்கு பெயரா போர்?நாய்களா நீங்கள் செய்தது ஒரு இன அழிப்பு....இப்போது போர்நிறுத்தம் என்பது கண்துடைப்பு...

பாலஸ்தீன மக்கள் இனியாவது  சிறிது நாட்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று ஒரு சிறு நம்பிக்கை  ஏற்பட்டுள்ளது  ...நம்பிக்கை மட்டுமே...உத்திரவாதம் கிடையாது...ஏன் என்றால் ஈனம் கெட்ட  இஸ்ரேலை கேள்வி கேட்க  எந்த நாடும் தயாரில்லை...நாளையே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தலாம்...

போர் என்றால் இரண்டு நாடுகளுக்கு இடையே ,அல்லது இரு தரப்புக்கு இடையே நடப்பதுதான்..ஆனால் ஒரு வார காலமாக பாலஸ்தீனத்தின் மீது மட்டுமே தாக்குதல் ,உயிர்ப்பலிகள் எல்லாமே..!பின்பு எப்படி இது போராகும்..?அப்புறம் எங்கே இது போர் நிறுத்தம்?இது ஒரு அப்பட்டமான கொலைவெறி தாக்குதல்!

ஈழத்தில் என்ன நடந்ததோ அதைதான் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்து வருகிறது...ஆனால் நம் ஈழதமிழர்களுக்கு கிடைத்த ஆதரவோ,அனுதாபமோ பாலஸ்தீன மக்களுக்கு ஒரு மனிதாபமான அடிப்படையில் கூட உலக நாடுகளிடம் இருந்து கிடைக்கவில்லை...!

உலகத்தின் பெரியண்ணனாக காட்டி கொள்ளும் அமெரிக்கா முஸ்லிம்கள் எண்ணிக்கை குறைகிறதே என்று சந்தோசப்பட்டு கொண்டு இருக்கிறது!ஐநா சபை என்று ஒன்று இருக்கிறதாம்..அவர்களுக்கு எல்லாம் என்ன வேலை என்றே இதுவரை எனக்கு தெரியவில்லை...

ஒரு வாரமாக அப்பாவி குழந்தைகளையும்,பெண்களையும் கொன்று குவிக்கும் வரை வேடிக்கை பார்ப்பதுதான் அந்த அயோக்கிய  சபையின் வேலையா?

உலக முஸ்லிம் நாடுகள் எல்லாம் என்ன மயிரை  புடுங்கி கொண்டு இருந்தன?

இந்தியா சும்மாச்சுக்கும் கூட ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை....இஸ்ரேலை கண்டித்து "அகிம்சையை விரும்பிய காந்தி பிறந்த தேசம்"என்ற பெயருக்காவது ஒரு தீர்மானம் போடவில்லை!

அட ஐநாவுக்கே கடிதம் அனுப்பிய "கடித புகழ்"கருணாநிதி கூட இது சம்பந்தமாக ஒரு  அறிக்கை வெளியிடவில்லை....இப்ப ஜெயலலிதா இது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டால் உடனே இவர் 1980 களிலே இதை கண்டித்து இருக்கிறோம் என "நாங்கள் எல்லாம் அப்பவே அப்படி"என புராணம் பாட ஆரம்பித்து விடுவார்...இவர்கள் அறிக்கை அல்லது கண்டனம் தெரிவித்து என்ன ஆக போகிறது என கேட்குறீர்களா?ஒரு மனிதாபிமான ,மனித நேயத்தின் அடிப்படையில் தான் நான் கேட்கிறேன்...

இஸ்ரேலில் ஜனவரி மாதம் தேர்தலாம்..அதில் வெற்றிபெற  பாலஸ்தீன மக்களின் ரத்தம்தான் இஸ்ரேல் நாய்களுக்கு  துருப்புசீட்டு ....எனவே மீண்டும் ஈனம் கெட்ட ரத்த வெறி பிடித்த  இஸ்ரேலின் தாக்குதல் எப்போது வேண்டும் என்றாலும் நடக்கலாம்....நாம் மீண்டும் செய்திகளாக படிக்கலாம் அனுதாபபடலாம்.......வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?!






35 கருத்துகள்:

  1. சலாம் சகோ.ஹாஜா.

    அடால்ப் ஹிட்லர் Said.....

    "I Killed 90% of jews in the Earth. I am leaving 10% of them Alive: to know the Future Generation that Why I Killed JEWS?"

    Thanks......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஸ்ஸலாம் சகோ...

      அன்று ஹிட்லர் சொன்னது இன்று நிருபணமாகிறது....

      நீக்கு
  2. Padhivum nakoor meeraanin karuththum arumai. Nallavargal ellam makkalaagavum kayavargal ellam adhigaram kondavargalaagavum padaikkap pattu vittom.

    Idhu thodarbaana kavidhai enadhu thalaththilum.... Pls visit.

    http://newsigaram.blogspot.com/2012/11/marupadiyum-varuven-46-17-23_21.html

    this post is shared on my FB.

    பதிலளிநீக்கு
  3. //ஐநா சபை என்று ஒன்று இருக்கிறதாம்..அவர்களுக்கு எல்லாம் என்ன வேலை என்றே இதுவரை எனக்கு தெரியவில்லை...
    //

    அவர்களுக்கே அது தெரியாததால் தான் ஈழத்தில் படுகொலையை வேடிக்கை பார்த்தனர் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ..........ஆம் ..அவர்களுக்கு ஆணி புடுங்குவது தான் வேலை போல....

      நீக்கு
  4. //உலக முஸ்லிம் நாடுகள் எல்லாம் என்ன மயிரை புடுங்கி கொண்டு இருந்தன?//
    பெட்ரோல்.......... வித்த காசு குறைக்காது. வாலாட்டும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாலை மட்டுமல்ல தலையையும் சேர்த்தல்லவா ஆட்டுகின்றன ...!

      நீக்கு
  5. //நூற்றுகணக்கான குழந்தைகளையும் ,பெண்களையும் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த கேடு கேட்ட இஸ்ரேல் இப்போது போர் நிறுத்தம் என்று அறிவித்துள்ளது.... ....போர் என்றால் இரண்டு நாடுகளுக்கு இடையே ,அல்லது இரு தரப்புக்கு இடையே நடப்பதுதான்..//

    அதானே.....

    "பயங்கரவாத இடைநிறுத்தம்" ....
    "pause on terrorism" ....
    இப்படி ஏதாவது சொல்ல வேண்டியதுதானே...
    அந்த.... 'பயங்கரவாத திருட்டு நாடு'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. கொலைவெறி தாக்குதல் நிறுத்தம்..இப்படியும் சொல்லாம்....என்ன பண்ணுவது சகோ....இறைவன்தான் கேட்க வேண்டும்....

      நீக்கு
  6. இஸ்ரேல் மிக தெளிவாகவே வேகமாக மற்றும் அதிரடியாக மேலும் அதிக பட்ச ஆயுதங்களை கொண்டு அதிகபட்ச உயிர்களையும் உடமைகளயும் அழிக்கிறது நாம் என்ன நடக்கிறது என்று யோசிபதற்குள் இனபடுகொலையை நடத்தி விட்டு போர் நிறுத்தமும் செய்துவிடுகிறது இதனை அது பாலஸ்தீனர்களைமுந்திய தாக்குதல் லுக்கு பின் என்ன முன்னேற்றம் அடைந்தார்களோ அதனை முழுமையாக அழித்து விடுகிறது எந்த நிலையில் இருந்தார்களோ ஒரு அடி கூட முன்னேற விடாமல் செய்கிறது இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா என்று புலம்பத்தான் முடிகிறது

    பதிலளிநீக்கு
  7. ஹமாஸ் தீவிரவாத இயக்கம் இஸ்ரேல் மேல குண்டு போட்டுட்டே இருப்பாங்க...அதை பார்த்துட்டு வேடிக்கைப் பார்க்க இஸ்ரேல் என்ன இந்தியாவா ? ஹமாஸ் குண்டு போடாம இருந்தால், இப்போதைக்கு இந்தப் போரே வந்திருக்காது. உடனே பாலஸ்தீன வரலாறு அது இதுன்னு டென்ஷன் ஆகாதீங்க....சாதாரண மனிதனாக இருந்து பாருங்கள்.....திடீரென் இஸ்ரேல் தாக்க என்ன காரணம்? ஆமா...இதுக்கு எதற்கு இந்தியா சப்போர்ட் பண்ணனும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுதலைப்புலிகள் குண்டு போட்டார்கள்,அதனால்தான் நாங்கள் அப்பாவி மக்களை கொன்று குவித்தோம் என்று இலங்கை ராணுவம் சொன்னால் நாம் ஏற்றுகொள்வோமா ?போர் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை கொளவதற்கு ஹமாஸ்தான் தாக்குதல் நடத்தியது என சொல்வது ஒரு காரணமே...ஹம்மாஸ் தாக்குதல் நடத்தினால் அதற்கு பொதுமக்கள் என்ன செய்வார்கள்..அப்பாவி குழந்தைகள் என்ன செய்வார்கள்?இதை ஆதரிப்பது உங்களின் குறுகிய மனப்பான்மையைத்தான் காட்டுகிறது....இந்தியா ஒரு கண்டனம் தெரிவித்தால் என்ன என்றுதான் கேட்டேன்...பயங்கரவாத்தை எதிர்க்கும் நாடு என்ற முறையில் அதை செய்தால்கூடவா தப்பு?இதற்கு ஒரு மைனஸ் ஒட்டு போற்ற உங்களை படுகொலைகளை ஆதரிப்பவர் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது....

      நீக்கு
    2. விடுதலைப் புலிகளையும் ஹமாசையும் ஒப்பிடாதீர்கள். விடுதலைப் புலிகள் குண்டு போடுவது இராணுவ இலக்குகளை மட்டும் தான். அப்பாவி மக்களுக்கு தொந்தரவு தருவதில்லை. அது ஒரு ஆயுதப் போராட்டம். ஹமாஸ் அப்படிப்பட்ட இயக்கம் அல்ல. அது ஒரு கோழைத்தனமான தீவிரவாத இயக்கம். அப்பாவி மக்களை ராக்கெட் குண்டுகள் போட்டு அழிக்கும் இயக்கம். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்துவதை இந்தியா எதற்காக கண்டனம் தெரிவிக்க வேண்டும். போர் நிறுத்தம் செய்ய வேண்டுமானால் கேட்கலாம். இந்த மாதிரி உலகில் ஆயிரம் இடங்களில் சண்டை நடக்குது, அதை எல்லாத்தையும் விட்டுவிட்டு இதை மட்டும் ஏன் பேசுறீங்கன்னு சொல்லுங்க...குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் பற்றி அப்புறம் பேசலாம் !

      நீக்கு
    3. இங்கு ஹமாஸ்,விடுதலைபுலிகளை பற்றிய விவாதம் தேவை அற்றது...போர் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை,குழந்தைகளை கொள்வது சரியா தவறா ?அது பற்றி மட்டும் பேசுங்கள்....நீங்கள் போட்ட மைனஸ் ஒட்டு அப்பாவி மக்கள் சாவதை பற்றி நீங்கள் சட்டை செய்யவில்லை என்பதை வெளிகாட்டிவிட்டது...

      நீக்கு
    4. ஹமாஸ்தான் முதலில் குண்டு போட்டது என்று கபிலன் விளக்கு பிடித்து பார்த்தராக்கும். கபிலன், மேற்கத்திய ஊடகங்கள் எடுக்கும் வாந்தியையே நீங்களும் எடுக்க வேண்டாம். தனது தரைப்படையை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்ட போதே புரியவில்லையா இது அமெரிக்க, இஸ்ரேலிய அரசுகளின் கூட்டுச் சதி என்று.

      நீக்கு
    5. விடுதலைப் புலிகளின் விவாதத்தை எடுத்தது நீங்கள். அதற்கு பதில் மட்டும் தான் கொடுத்தேன். ஹமாஸ் குண்டு போட்டதும் தவறு, அதற்காக இஸ்ரேல் இப்படி பதில் தாக்குதல் நடத்துவதும் தவறு என்று சொல்லி இருக்க வேண்டும். இது மிகவும் ஒருதலைப்பட்சமான கட்டுரை. இதற்கு இந்தியா வேறு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கீங்க.

      அதுமட்டுமல்ல...
      "உலக முஸ்லிம் நாடுகள் எல்லாம் என்ன மயிரை புடுங்கி கொண்டு இருந்தன?"

      உலக நாடுகள் என்று சொல்லி இருந்தீர்கள் என்றால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். முஸ்லிம் நாடுகள் என சொல்லி மதச்சாயம் கலந்து, உணர்ச்சி வயப்பட்டு தவறான கருத்துக்களை சொல்லி இருக்கும் பதிவு இது. தப்பு செஞ்சிருந்தாலும், முஸ்லிமை அடிச்சுட்டான்...முஸ்லிம்கள் எல்லாம் வாங்க என தவறான வழியில் அறை கூவும் விதத்தில் அமைந்து இருக்கு இந்தக் கட்டுரை.

      அப்புறம்...நீங்களே ஒரு முறை, இந்தக் கட்டுரையில் உங்கள் எழுத்து நடையைப் படித்துப் பாருங்கள், உணர்ச்சி வயப்பட்டு கோபத்தில் உளறி இருப்பது தெளிவு.

      இது தான் உங்களுக்கு மைனஸ் போட்ட காரணம்.

      நீக்கு
    6. இஸ்ரேல் வைக்கும் வாதமான(வாந்தியான)ஹமாஸ்தான் தாக்குதல் நடத்தியது என்ற வாதத்தை சுட்டி காட்டுவதற்காக உதாரணத்துக்காக இலங்கையும் இப்படித்தானே அவர்கள் செய்தார்கள் நாங்கள் அழித்தோம் என சொல்கிறது என குறிப்பிட்டேன்...உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு தானே ஐ நா சபை...அப்புறம் ஏன் முஸ்லிம் நாடுகள் என சொன்னீர்கள் என மிகவும் அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டு உள்ளீர்கள்....இலங்கையில் தமிழன் பாதிக்கப்பட்டால் தமிழனாகிய நாம்தான் முதலில் குரல் குடுப்போம்...பிறகுதான் உலக நாடுகள்...பாலஸ்தீனம் முஸ்லிம் நாடு...முதலில் முஸ்லீம் நாடுகள்தானே குரல் கொடுக்க வேண்டும் என கேட்பது எப்படி தவறாகும்?

      ஆம் நான் கோபத்தில் எழுதி இருக்கிறேன்....உங்களைப்போல ஹமாஸ் செய்ததால்தான் இஸ்ரேல் குழந்தைகளையும்,பெண்களையும் அழிக்கிறது ,அது ஒன்றும் தவறல்ல என உளறவில்லை...அப்பாவி குழந்தைகள் நெஞ்சு பிளந்து இறந்து கிடக்கும் காட்சியை பார்த்து கோபம் வராமல் இருக்க நான் ஒன்றும் உங்களைப்போல இரக்கதன்மை ,மனிதாபிமானம் அற்றவன் அல்ல...

      முஸ்லீமகள் பாதிக்கப்பட்டால் அழிந்து போனால் நல்லது என நினைக்கும் உங்கள் குறுகிய மனப்பான்மை என்று மாறப்போகிறது?

      நீக்கு
    7. சக மனிதர்களாக பாலஸ்தீனிய மக்களை பாருங்கள் கபிலன்...அவர்கள் இறந்து கிடக்கும் கோர காட்சிகளை facebook போன்ற சமூக வலைதளங்களில் பாருங்கள்..ஈழத்தில் நடந்ததற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை....

      நீக்கு
    8. @ கபிலன்...
      பூனை கண்ணை மூடிக்கொண்டால்... உலகமே இருந்து விட்டது என்று பொருள் இல்லை. அதேபோல... கபிலன் அறிவை மூடிக்கொண்டால், உலகமே முட்டாள் அல்ல..!

      விடுதலைப்புலி அன்அபீசியலாக ஆண்ட இடத்தில் ஐநா வும் இலங்கை அரசும் அமெரிக்காவும் மேற்பார்வை இட்டுக்கொண்டு... உலக ஊடகவியலாளர்கள் முன்னிலையில் எந்த பொதுத்தேர்தலையும் நடத்தியது இல்லை.

      ஆனால்....

      ஹமாஸ் எனும் அரசியல் கட்சி ஆதரவு பெற்று இருந்த காஸா என்ற பாலஸ்தீன மாநிலத்தில் ஐநா வும் இஸ்ரேல் அரசும் அமெரிக்காவும் மேற்பார்வை இட்டுக்கொண்டு... உலக ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பொதுத்தேர்தலை நடத்தியது..! மிகவும் நியாயமாகவும் சரியாகவும் அசம்பாவிதம் இன்றி சிறப்பாக தேர்தலை நடத்தியதுக்காக அமெரிக்கா-இஸ்ரேல்-ஐநா இவை ஒன்றை ஒன் பாராட்டிக்கொண்டன. இவர்களை உலகமே பாராட்டியது. ஆனால்... சில நாட்கள் கழித்து ஓட்டு ஐநாவால் அமெரிக்க-இஸ்ரேல் பன்னாட்டு ஊடகம் லைவ் ஷோவில் ஓட்டு எண்ணப்பட்டது.

      அதில் ஹமாஸ் அமோக வெற்றி பெற்று... அதிபரையும் பிரதமரையும் அறிவித்த வுடன்... இந்த பொதுத்தேர்தல் செல்லாது... இவர்கள் பிரதமரும் இல்லை அபதிபரும் இல்லை... காஸா ஒரு சுயாட்சி மாநிலம் இல்லை என்று ஒரு உலகமகா குட்டிக்கரணம் போட்டன இஸ்ரேலும் அமெரிக்காவும். இந்த ஜனநாயக படுகொலையை ஐநாவும் நேர்மையற்றவர்களும் வேடிக்கை பார்த்தனர்.

      அந்த வகையில்... ஹமாஸ் .... விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட பன்மடங்கு உயர்வானது...!!! இரண்டையும் ஒப்பிட முடியாதுதான்..!

      ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டவர்களை ஆதரிக்கும் மற்றும் அப்பாவி மக்களை படுகொலை செய்யும் அரச பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அனைவருமே பயங்கரவாதிதான்.

      நீக்கு
    9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    10. ஹமாஸ் இஸ்ரேலின் மீது ராக்கெட் குண்டு வீசுவதைப் போல, லஷ்கர் இ தொய்பா இந்தியாவின் மேல் ராக்கெட் குண்டு வீசினால் அப்பொழுது இந்தியா என்ன நிலையை எடுக்கவேண்டும் ? அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டுமா அல்லது இஸ்ரேல் போல பதில் தாக்குதல் நடத்த வேண்டுமா ? உங்கள் எண்ணத்தை தெளிவு படுத்துங்கள் !

      நீக்கு
    11. முதலில் ஹமாசோடு லஸ்கர் இ தொய்பாவை சம்பந்தப்படுத்தும் உங்கள் கேள்வியே தவறு...நான் கேட்ட கேள்விக்கு உங்கள் பதில் என்ன?நூற்றுகணக்கான குழந்தைகளை குண்டு வீசி இஸ்ரேல் கொன்றது சரியா?தவறா ?

      நீக்கு
    12. லஸ்கர் இ தொய்பா<<------மக்களால் ஓட்டுப்போட்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசா இது..? காமடி பண்ணாதீங்க கபிலன்.

      நீக்கு
  8. உணர்சிகரமான பதிவு
    கொலை எங்கு நடந்தாலும் அதை தட்டி கேட்க வேண்டும். அதைத்தான் மனிதாபிமானம் உள்ளவர்கள் செய்யவேண்டும்.ஆனால் நாம் அனைவரும் மதத்தாலும் மற்றும் பல பிரிவுகளாலும் பிளவு பட்டு நிற்கின்றோம். நம்மிடையே உள்ள பிரிவினையை முதலில் நாம் குறைக்க வேண்டும். பிற மனிதனை,சமூகத்தை,நாட்டை எதிரியாக பார்க்கக்கூடாது.

    மனிதத்திற்கு மட்டுமே நாம் முக்கியத்துவம் கொடுத்து,போதித்து நாம் மக்களை வளர்த்தால் எதிர்காலத்தில் இந்த பிரச்சனைகளை குறைக்கலாம். மனிதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தரும் தலைவர்கள் உலகில் வந்தால் மட்டுமே பூமியில் அமைதியை கொண்டு வர முடியும். மத உணர்வு இருக்கும் வரை மனிதம் வளர வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன்.

    இஸ்ரேல் செயல் கண்டனத்திற்கு உரியது அதே நேரத்தில் ஹமாஸ் செயலும் அவர்களின் நோக்கமான இஸ்ரேலை அழித்தலும் கண்டனத்திற்கு உரியது. பேச்சு வார்த்தையின் மூலம் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டுமே ஒழிய ஆயுதத்தால் அல்ல என மக்களும் தலைவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
    ஒரு சில இறைவன்களும் இறைதூதர்களுமே இதை புரிந்து கொள்ளாத பொழுது சாதாரண மக்கள் புரிந்துகொள்வார்களா எனபது ஐயமே. அப்படி புரிந்து கொள்ளும் மக்கள் இறைவன்களையும் இறைதூதர்களையும் விட சிறந்தவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி புரட்சி மணி..மனிதாபிமான அடிப்படயில் புரிந்து கொண்டு கருத்துரை சொன்னதற்கு .........உங்களின் கருத்தில்# "ஒரு சில இறைவன்களும் இறைதூதர்களுமே இதை புரிந்து கொள்ளாத பொழுது சாதாரண மக்கள் புரிந்துகொள்வார்களா எனபது ஐயமே. "#இந்த இடத்தில நான் மாறுபடுகிறேன்....இறைவனையும் இறை தூதர்களையும் மக்கள் சரியாக புரிந்து கொண்டால் இது போன்ற பிரச்சினைகளுக்கே வேலை இல்லை...

      நீக்கு
  9. //அட ஐநாவுக்கே கடிதம் அனுப்பிய "கடித புகழ்"கருணாநிதி கூட இது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிடவில்லை....இப்ப ஜெயலலிதா இது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டால் உடனே இவர் 1980 களிலே இதை கண்டித்து இருக்கிறோம் என "நாங்கள் எல்லாம் அப்பவே அப்படி"என புராணம் பாட ஆரம்பித்து விடுவார்
    //

    100 % true

    பதிலளிநீக்கு
  10. விடுதலைப்புலிகள்...
    இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத... ஆயுதம் தாங்கி தற்கொலைப்படை போன்ற எதிரின அப்பாவி மக்களை கொல்லும் பயங்கரவாதங்களையும் மேற்கொண்டு போராடிய ஒரு போராளி இயக்கம்..!

    ஹமாஸ்...
    இது, ஐநா மேற்பாவையில் பாலஸ்தீன மக்களால் பொதுத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட... இஸ்ரேலுடன் ஆயுதம் தாங்கி போரில் போராடும் தீவிரவாத போராளி அரசியல் கட்சி நடத்தும் அங்கீகரிக்கப்படாத காஸாவின் அரசு..!

    பதிலளிநீக்கு
  11. சலாம் சகோ.ஹாஜா

    உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பி இருக்கேன் ..பாருங்கள்..!!!

    நன்றி !!!

    பதிலளிநீக்கு
  12. தவறு எந்த பக்கம்? இரண்டு பக்கமுமா? அல்லது ஒரே பக்கமா?
    என்ன செய்ய, எந்த பக்கம் தவறோ அவர்களுக்கு எல்லாம் வல்ல பேரிறையோ அல்லது இயற்கையோ, தகுந்த தண்டனை வழங்குவர் என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    அதற்காக ஹிட்லர் சொன்னது சரி என்பது, அவர்களுக்கு பயப்படவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று சொல்லி கடுமையாக எதிர்வினையாற்ற ஊக்குவிப்பாகவும் மட்டுமே இருக்கும். (it is better to be safe now than be sorry later).

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....