26 நவம்பர் 2012

தருமபுரி கலவரம் என்ன சமபந்தி விருந்தா மருத்துவரய்யா?!!...


நாம் இருப்பது கற்காலமா அல்லது ஆதி மனிதர்களிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது தர்மபுரி கலவரத்தை பற்றி படித்தவுடன்...ஒரு காதல் சம்பவத்துக்காக  3 தலித் கிராமங்களையே சூறையாடி வெறியாட்டம் போட்ட அந்த ஜாதி வெறி பிடித்தவர்களை எப்படி மனித இனத்தில் சேர்ப்பது? தலித்களின்  உடைமைகளை ,வாழ்வாதாரங்களை,பொருளாதாரங்களை நசுக்கும் வகையில்  குறிவைத்து நவீன ஜாதி வெறி தாக்குதலை நடத்திய அவர்களை கற்கால மனிதர்கள் என்று சொன்னால்கூட அது பொருத்தமாகாது!இந்த கலவரங்களுக்கு ஆரம்ப காரணமாக இருந்தவர் காடுவெட்டி குரு ...சில மாதங்களுக்கு முன்பு பா ம க கூட்டத்தில் பேசும்போது  ஜாதி மாறி  கலப்பு திருமணம் செய்பவர்களின் கைகளை வெட்ட வேண்டும் என பகிரங்கமாக பேசினார்....இது சம்பந்தமாக அவர் மீது வழக்கு பதிந்ததோடு  அரசு தனது கடமையை நிறுத்தி கொண்டது....அவர் அன்று அப்படி பேசியதுதான் ஜாதி வெறி பிடித்தவர்களின் தைரியமாக இன்று மாறி தமிழகத்தில் வாழும் தலித் மக்களின் பாதுகாப்பையே கேள்வி குறியாக்கியுள்ளது ...

சரி சம்பவம் நடந்தாச்சு....வன்மத்தை தீர்த்து கொண்டாச்சு....இப்பவாது இரு தரப்பு மக்களிடையே சிறிதளவாவது ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் பாமக தலைமை ஈடுபட்டால்,அட ஈடுபடுவது மாறி நடித்தால் கூட போதும் சிறிது அனல் குறையும...

ஆனால் ராமதாஸ் சொல்கிறார் " இந்த தாக்குதலில் வன்னியர்கள் மட்டும் ஈடுபடவில்லை அனைத்து சாதியினரும்,திமுக,அதிமுக என அனைத்து  கட்சி தொடர்களும் ஈடுபட்டு உள்ளனர்" என ....அனைத்து ஜாதியினரும்,அனைத்து  கட்சியினரும் சேர்ந்து  ஈடுபட கலவரம் என்ன சமபந்தி விருந்தா மருத்துவரய்யா?


ஏன்யா உங்கள் வாதப்படியே  வைத்துகொண்டாலும் எல்லா ஜாதியினரும்,எல்லா கட்சியினரும் சேர்ந்து அந்த 3 கிராமங்களையும் சூறை ஆடினால் அது தவறு இல்லையா?அது ஏதோ அந்நிய நாட்டு ராணுவத்தை எல்லாரும் சேர்ந்து அடித்து விரட்டினோம் என பெருமையாக கூறுவதுபோல கூறுகிறீர்களே ?ஒரு கட்சி தலைவராக இது உங்களுக்கு அழகா?

தலித்களால் பாதிக்கப்பட்ட மற்ற சாதியினரால் இந்த கலவரம் நடந்துள்ளது என கூறி பிற சாதியினரையும்  தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொண்டு மேலும் தமிழகமெங்கும் சாதி பிரச்சினையை தூண்டும் வகையில் பேசுவது ஒரு கட்சியின்  தலைவராக உங்களுக்கு அழகா?

அப்பட்டமாக தெரிகிறது இது ஒரு ஜாதி வெறி தாக்குதல் என்று ...பாதிக்கப்பட்ட 3 கிராமங்களும் தமிழகத்தில் தானே  இருக்கிறது?சம்பவம் நடந்த அன்று காவல்துறையும்,அரசும் என்ன பண்ணி கொண்டு இருந்தன ?அன்று  மட்டும் தமிழகத்தில் அரசுக்கே அரசு விடுமுறையா ?

மின்தடையால் மட்டுமல்ல இது போன்ற ஜாதி வெறி தாக்குதல்களாலும் தமிழகம் இருண்ட காலத்திற்கே சென்று கொண்டு இருக்கிறது என சொன்னால் அது மிகையல்ல!18 கருத்துகள்:

 1. நல்ல கேட்டீங்க... ஒருவேளை அவருக்கு அப்படித்தான் தோணுமோ...?

  மின்வெட்டை விடுங்க... இந்த ஜாதி வெறி மிகவும் கொடுமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழகம் பின்னோக்கி போய் கொண்டு இருக்கிறது...வேறு என்னத்த சொல்ல?!

   நீக்கு
 2. சாதிக் கலவரங்கள் வன்மையாக கண்டிக்கப் படவேண்டியது. மாற்றுக் கருத்து இல்லை. இந்த கலவரம் ஏன் என்று ஒரு வார்த்தை போட்டிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும் சரி. சொல்றேன்.

  பிழைப்புக்கு வழி தேடாமல் ஒரு இளைஞன்(தலித்) காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணை(வன்னியர்) கடத்தி செல்கிறான். இதை வெறும் பாசத்தோடு தட்டிகேட்ட/புகார் கொடுக்கச் சென்ற அவளது தந்தையை சாதிபாசம் (தலித் சாதி வெறி) கொண்ட ஒரு அதிகாரி, மற்றும் அவர்களுடைய கும்பல் மிகவும் கேவலமாக பேசி தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்.. அந்த பெண்ணை பெற்ற குற்றத்திற்காக கண்டவர்களிடதிலும் அவமானம் அடைகிரோமே என்று எண்ணி அந்த தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். இந்த செய்தியை கேட்கும்போது பெண்ணையும் இழந்து கணவனையும் இழந்து நிற்கும் அந்த குடும்பத்தின் மீது பரிதாபமும், இந்நிலைக்கு காரணமான கயவர்கள் மீது கோபம் வருவது இயல்பு தானே..

  இந்த கோபத்தால் நடந்த வன்முறை இது....தடுக்க வேண்டிய தலைவர்கள் தவறியதால் வந்த விளைவு இது ! அதற்கு என் கண்டனங்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டனத்திற்கு நன்றி..ஆனால் அவர்கள் இருவரும் விரும்பிதான் திருமணம் செய்து இருக்கிறார்கள்...அப்பெண்ணை கடத்தி செல்லவில்லை ....ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்வதுபோல கடத்தி செல்லப்பட்டார் என்றே வைத்து கொண்டாலும் அதற்காக 3 கிராமங்களை வேட்டையாடுவது எப்படி சரியாகும்?

   நீக்கு
 3. இங்கு கபிலன் என்ற சாதி வெறியர் தனது வாந்தியை கக்கி சென்று இருக்கிறார்.
  "பிழைப்புக்கு வழி தேடாமல் ஒரு இளைஞன்(தலித்) காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணை(வன்னியர்) கடத்தி செல்கிறான். "
  விருப்பபட்ட பெண்ணை திருமணம் செய்தல் கடத்தி செல்லுதலா? கடத்தி சென்ருந்தால் அந்த பெண் ஏன் வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொன்னார் என்று சாதி வெறியர் கபிலன் காரணம் சொல்வாரா?

  பதிலளிநீக்கு
 4. இத்தனைக்கும் அந்த பெண்ணுக்கு வயது 21 திருமண வயதை அடைந்தவர். மரம் வெட்டி வைத்தியரின் போர் வாளும் பிரபல ஜாதிய வெறி பதிவரும் ஆன அருள் என்பவர் இது குழந்தை திருமணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

  ஒருவன் திருமண வயதை அடையவில்லை என்பதற்காக அவனை குழந்தை என்று குறிப்பிட்டது எவ்வளவு கேவலமான முட்டாள் என்பதை வெளிகாட்டியுள்ளார். 18 வயதை அடைந்தால் மேஜர. அவனுக்கு வாக்குரிமை இருக்கு. குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லை.

  இந்த சாதிவெறியர்களின் கருத்து படி பார்த்தால் அந்த பெண் தான் (21வயது) அந்த பையனை கடத்தி சென்றிருக்க வேண்டும்.

  "பிழைப்புக்கு வழி தேடாமல் ஒரு இளைஞன்(தலித்) " பிழைப்புக்கு வழி தேடி விட்டு வந்தால் உடனடியாக தலித்துகளுக்கு பெண் கொடுப்பார்களா இந்த சாதி வெறியர்கள்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாதி வெறியர் என மதிப்பு கொடுத்து பேசாதீங்க....சாதி வெறியன் என பேசுங்க...சாதிக்கு நான் என்றுமே மதிப்பு கொடுத்தது கிடையாது...மனுஷனுக்குத் தான் மதிப்பு....

   வாழ்க்கையில் செட்டில் ஆகாமல் காதலித்து...கடத்திச் செல்வது ப்ராக்டிக்கலா ஒரு நல்ல விஷயம் இல்லையே....காதலிப்பது தவறு கிடையாது.....அதனை அவர்கள் பெற்றோர் எதிர்ப்பதும் தவறு கிடையாது...இது நார்மலா நடக்குற விஷயம்....இது ஒரு அசம்பாவித சம்பவம். இந்த சமுதாயத்தினர் தான் தவறு செய்தார்கள் என ஒரு சார்பு நிலையை என்னால் எடுக்க முடியவில்லை.

   நீக்கு
  2. "வாழ்க்கையில் செட்டில் ஆகாமல் காதலித்து...கடத்திச் செல்வது ப்ராக்டிக்கலா ஒரு நல்ல விஷயம் இல்லையே...."

   திரும்ப திரும்ப அதே கருத்தை தான் சொல்கிறீர்கள். யார் யாரை கடத்தியது?

   இரண்டு பேர் விருப்பப்பட்டு திருமணம் செய்யும் நோக்கில் வீட்டை விட்டு சென்றால் கடத்தி சென்று விட்டார்கள் எப்படி கூற முடியும்.
   அப்படி கடத்தி சென்றிருந்தால் அந்த பெண் வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லியிருக்க மாட்டார்.

   நீக்கு
  3. பொண்ணப் பெத்தவங்க நிலையில் இருந்து பாருங்க...அந்த கஷ்டம் என்னான்னு தெரியும்....இதுக்கு மேல உங்க கிட்ட இந்த விஷயத்தை நான் விவாதிக்க விரும்பவில்லை ! சாதி மட்டுமே கண்களுக்கு தெரியும் உங்களுக்கு, மனிதர்களின் மனங்கள்/ வேதனைகள் மறைந்து போவது இயல்பு தான் !

   நீக்கு
  4. முதல் விடயம் நான் தலித் அல்ல. பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவன். ஆனால் இன்று வரை சாதீய எண்ணங்களுக்கு இடம் கொடுத்ததில்லை. கொடுக்க போவதும் இல்லை.

   அந்த பெண்ணை பெற்ற மன தாக்கத்துக்கு அந்த வன்னிய சாதி சமூகம் தான் காரணம். பெண் வீட்டை விட்டு ஓடியவுடன் உன் பெண் வீட்டை விட்டு ஓடி விட்டால் என்று திட்டி ஒதுக்கியது தான் அந்த தந்தை மனம் உடைந்து தற்கொலை செய்தார்.

   பிராமணர்கள், பிள்ளைமார் வீடுகளிலும் இவ்வாறு நடக்கின்றது. யாராவது கத்தியை எடுத்து கொண்டு வெட்ட போகிறார்களா?
   சில வருடங்கள் ஒதுக்கி வைப்பார்கள். பின் ஒன்றாக சேர்ந்து விடுவார்கள்.

   ஒருவன் வீட்டில் பிள்ளை வீட்டை விட்டு ஓடினால், அந்த விடயத்தில் பெற்றோரை சார்ந்துள்ள சமூகம் தாக்காது விட்டால் ஏன் பெற்றோர் தற்கொலைக்கு போகின்றார்கள்.

   நீக்கு
  5. // //அருள் என்பவர் இது குழந்தை திருமணம் என்று குறிப்பிட்டுள்ளார்.// //

   குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்தான் 21 வயதுக்கு கீழான ஆண் திருமணம் செய்வதைத் தடை செய்கிறது. அதனால்தான் குழந்தைத் திருமணம் என்று குறிப்பிட்டேன்.

   நீக்கு
 5. வன்னியர் தாங்கள் காட்டுமிராண்டிகள் என்பதனை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளனர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // //வன்னியர் தாங்கள் காட்டுமிராண்டிகள் என்பதனை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளனர்// //

   பிள்ளைமார் சாதியினர் இப்படி நினைப்பதில் வியப்பொன்றும் இல்லை.

   நீக்கு
 6. "தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொண்டு மேலும் தமிழகமெங்கும் சாதி பிரச்சினையை தூண்டும் வகையில் பேசுவது ஒரு கட்சி தலைவருக்கு அழகா மருத்துவரய்யா?!"

  கட்சி தலைவர் அல்ல. ரௌடிகள் கூட்ட தலைவர். காட்டுமிராண்டிகளின் தலைவன்

  பதிலளிநீக்கு
 7. ஆனால் ஹாஜா உங்கள் மீது பதிவர் சுவனபிரியன் கோவம் கொள்ள போகிறார். ஏனென்றால் அவர் இதற்க்கு முன் வன்னியரை ஆதரித்து பதிவு போட்டிருந்தார். நீங்கள் கண்டித்து பதிவு போட்டிருக்கின்றீர்கள். அதுதான்

  பதிலளிநீக்கு
 8. தலித் காவலதிகாரிகள் குற்றம் சொன்ன சாதி வெறியர்களுக்கு ஒரு செய்தி.
  தேவர் சாதி போலிசின் கொலைவெறியாட்டம்
  http://www.vinavu.com/2012/11/26/koomapatti-police-atrocity-on-anand/

  "“நான் அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் படம் போட்ட பனியன் போட்டிருந்தேன். அந்த பனியனை கழற்றச் சொன்னார் எஸ்.ஐ.சந்திரசேகர். பனியனைக் கிழித்து கீழே போட்டார், அதன்மீது எல்லா போலீசும் சிறுநீர் கழித்தார்கள். அதை எடுத்து திரும்பவும் என்னைப் போடச் சொன்னார்கள். முடியாது என்றதற்காக கடுமையாக அடித்தார்கள். இரவு முழுவதும் கூமாபட்டி காவல் நிலையத்துக்குள் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்தார்கள். மயக்கம் தெளியத் தெளிய லத்தியால் அடித்தார்கள். பூட்ஸ் காலால் வயிற்றில் மிதித்து துவைத்தார்கள். மறுநாள் 15/11/12 மாலை 4.45 மணிவரை அடி ஓயவில்லை. எனது இரண்டு சிறுநீரகங்களும் சிதைந்து சிறுநீர் ரத்தமாக வெளியேறுகிறது. அடிவயிற்றில் உதைத்ததில் ஆசனவாய் வழியாகவும் ரத்தம் வெளியேறுகிறது.”"

  பதிலளிநீக்கு
 9. உயிர் காப்பவர் மருத்துவர். உயிர் எடுப்பவரையும் மருத்துவர் என்று சொல்லலாமா?

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....