01 நவம்பர் 2012

புரட்சி தலைவியும்,நாட்டாமையும் (கூட்டுப்பொறியல்)


                                                     கூட்டு .....................
                                        ................ .................. ............................

மெஜாரிட்டியில் ஆட்சி செய்யும்  ஒரு அரசு எதிர்கட்சியை உடைத்து அதில் இன்பம் காணுவது ஏன் என்றுதான் புரியவில்லை....நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகள்  எவ்வளவோ இருக்க  விஜயகாந்தின் கட்சியை உடைத்து நான்கு பேரை விலைக்கு வாங்கி  என்ன சாதிக்க போகிறார் ஜெயலலிதா? இது விஜயகாந்தின் மீது ஜெயலலிதாவுக்கு உள்ள பயத்தையே காட்டுகிறது ....யாருக்கும் அஞ்சாத தலைவர் என்றல் ஒரு வழக்கு போட்டதுமே ஏன் முன்ஜாமீன் கேட்கிறார் விஜயகாந்த் என கேள்வி எழுப்பும் ஜெயலலிதா  தன்  மீதான  சொத்து குவிப்பு வழக்கில் எத்தனை  வாய்தா வாங்கி  இழுத்தடித்தார்?அதை எந்த கணக்கில் கொண்டு போய்  சேர்ப்பது?

அடுத்த கட்சியை உடைத்து ஆனந்தம் அடைவதற்கு பெயர்தான் புரட்சி தலைவியா?

ஒன்று மட்டும் புரிகிறது...தமிழகத்தில் ரொம்ப மட்டமான அரசியலை  நடத்தி கொண்டு இருக்கிறது அதிமுக  என்றால் அது மிகையல்ல....

..................................... ............................................ ........................................................

சந்தையில் விக்காத பொருளை கூவி கூவி விற்பதுபோல  மின்சார  தட்டுபாடிற்கு சென்ற திமுக அரசுதான் காரணம் என கூவி வருகிறார் ஜெயலலிதா...எனக்கு ஒரு சந்தேகம் அம்மா?!

நீங்கள் ஒரு வீட்டிற்கு குடி வருகிறீர்கள்..(சும்மா எழுத்துக்குதான்!)அந்த வீட்டில் முன்பு குடி இருந்தவர்கள் கரண்ட்  பில்  கட்டாததால் உங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை....நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள் ?வீட்டில் மின்சாரம் இல்லாததற்கு  காரணம்  முதலில் இந்த வீட்டில் குடி இருந்தவர்கள்தான் என சொல்லிக்கொண்டு மின்சாரம் இல்லாமல் இருப்பீர்களா?அல்லது மீண்டும் மின் இணைப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா?புத்திசாலி இரண்டாவதைத்தான்  செய்வான் !ஆனால் நீங்கள்???

................................... ....................................................... .................................................

சரத்குமார் என்று ஒரு நடிகர்....ஜெயலலிதா "நான்தான்  இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தேன் "என சொன்னாலும் ஆம் அதுதான் உண்மை என பாராட்டு விழ எடுக்கும் அளவுக்கு நல்லவர் ..வல்லவர்...!

ஆனால் அவர் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா  அடிப்பதோட நிறுத்தி கொள்ளாமல் எல்லை தாண்டி வெளியே வருவதுதான் அவருக்கும் ஆபத்து  நமக்கும் ஆபத்து...

நாட்டாமையாக  படத்தில் நடித்து இருந்தாலும் அவர் இன்னும் காட்டாமை  போலவே செயல்பட்டு வருகிறார் ...

கூடங்குளம் அணு உலை திறக்க வேண்டும் என போராட்டம் நடத்திய அவர் உதயகுமாரை  மேடையில்  விவாதம் பண்ண தயாரா என படத்தில் வில்லனை பார்த்து சண்டைக்கு கூப்பிடுவதை போல  கூப்பிடுகிறார்....முதலில் ஒன்றை சரத்குமார் புரிந்து கொள்ளவேண்டும்...உதயகுமார் மட்டும் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை...ஏறக்குறைய அப்பகுதி  மக்கள் ஆயிரகணக்கானோர் போராடி வருகின்றனர்...அவர்களிடம்  பேசி அணு உலையினால் ஆபத்து இல்லை என புரிய வைக்கவேண்டும்..அதற்கு ஏதாவது முயற்சி எடுத்தாரா சரத்?!இல்லையெனில் அணு உலைக்கு அருகிலே நானும் குடி வந்துவிடுகிறேன் என சொல்ல தயாரா சரத்குமார்?!
..................... ................................... .................................................. 


.............................................. .....................பொறியல் ...................... .............................

மற்ற பொருட்களை போல் மி்ன்சாரத்தை தேக்கி வைக்கவோ, பதுக்கி வைக்கவோ முடியாது. #சரத்குமார் 

நீங்க ஒரு  நடமாடும்  தாமஸ் ஆல்வா எடிசன் பாஸ்!!

................................... ........................................... .............................................................................

முதல் மாதத்திலேயே கருக்கலைப்பு செய்யாமல் 10வது மாதம்  செய்தால் அதற்கு பெயர் கொலை என்றே கூற வேண்டும். #சரத்குமார் 

முதல் மாதத்தில்  செய்தால் மட்டும் அது கருணை கொலை ஆகிவிடுமோ!#டவுட்டு 


.............................................. ...................................................... ..........................................................

டெசோ  தீர்மானங்களை ஐநா சபையில் கொடுக்க ஸ்டாலின் அமெரிக்கா  பயணம்#

அப்படின்னா இனி ஐநா சபைக்கே கடிதம்    அனுப்புவார் கருணாநிதி!!!


............................................................... ................................................. ..........................................................

2 கருத்துகள்:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....