வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 நவம்பர் 2012

ஏன் உருவானது திமுக?!



 தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள் என்றால் அது திமுகவும்,அதிமுகவும்தான்....ஆனால் இந்த இரண்டுமே தானாக தோன்றிய கட்சிகள் அல்ல...இன்னொரு கட்சியிலிருந்து  உருவானவை ..அதிமுக தோன்றியது பற்றி ஏற்கனவே நான் பதிவிட்டு இருந்தேன்..இப்ப திமுக எப்படி உருவானது  என கொஞ்சம் பிளாஷ்பேக்...எல்லாருக்கும் தெரிந்து இருந்தாலும் வரலாற்றை திரும்பி பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்றுதானே....!

அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தில் பெரியாருக்கு அடுத்த நிலையில் இருந்து  வந்தார்.... இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க ஆங்கிலய அரசு முடிவு எடுத்து இருந்த நேரம் அது....அந்த சமயத்தில் பெரியார் "1947 ஆகஸ்ட் 15 துக்க நாள்" என்று அறிக்கை விட்டார்....


கட்சியின் மற்ற தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அவர் வெளியிட்ட அறிக்கை, கழகத்தினருக்கு அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக, திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணா பெரிதும் வேதனை அடைந்தார். பெரியாரின் அறிக்கை பற்றி, மற்ற தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் அண்ணா கலந்து ஆலோசித்தார்.


முடிவில் "சுதந்திர தினம் துக்க நாள் அல்ல. இன்ப நாள்" என்று அறிக்கை விடுத்தார்.  இந்த அறிக்கை, தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது பகிரங்கமாகியது. அண்ணா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பெரியாரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.


"என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் என் கருத்துக்களை அஞ்சாமல் கூறுவேன்" என்றார் அண்ணா."பெரியாரும், அண்ணாவும் பிரிந்துவிட்டார்கள். இனி ஒன்று சேர வழியே இல்லை" என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு அதிசயம் நடந்தது.


ஈரோட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியாரும், அண்ணாவும் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், மாநாட்டுத் தலைவரான அண்ணாவை அலங்கார வண்டியில் அமரச்செய்துவிட்டு, நடந்தே வந்தார் பெரியார். மாநாட்டில் பெரியார் பேசும்போது "பெட்டிச்சாவியை நானே வைத்துக்கொண்டு எத்தனைக்காலம் அலைந்து திரிவது? அதனால் சாவியை அண்ணாதுரையிடம் கொடுத்துவிட முடிவு செய்துவிட்டேன்" என்று அறிவித்தார்.


மாநாட்டில் எழுந்த கைதட்டல் அடங்க, வெகுநேரம் பிடித்தது. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை தீர்ந்துவிட்டதாக அனைவரும் எண்ணினார்கள். 1949 ம் ஆண்டு மே மாதம் 14 ந்தேதி, அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.
அவரைப் பெரியார் சந்தித்தார். இருவரும் ஒரு மணி நேரம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் கொள்கையில் இரு துருவங்களாக இருந்த போதிலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாக விளங்கினார்கள். இருவரும் சந்தித்து நீண்ட நேரம் பேசியது, திராவிடக் கழகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.


இந்த சமயத்தில், கோவையில் "முத்தமிழ் மாநாடு" நடந்தது. அதில் பெரியாரும், அண்ணாவும் கலந்து கொண்டனர். அண்ணா பேசும்போது, "திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் பெரியார் பேசியது என்ன என்பதை அறிய நாடு ஆவலாக இருக்கிறது. அதனை இந்த மாநாட்டில் பெரியார் விளக்கிட வேண்டும்" என்று கூறினார்.


"அது முற்றிலும் என் சொந்த விஷயம். மாநாட்டில் வெளியிட முடியாது" என்று பெரியார் கனல் கக்க பதிலளித்தார். பின்னர் பெரியார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், தனக்கொரு வாரிசு ஏற்படுத்திக்கொள்வது பற்றி ராஜாஜியுடன் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இன்னொரு அறிக்கையை வெளியிட்டார்.


"எனக்கும், என் பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால் நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்கத்தின் நலத்திலும் உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறவருமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமை ஆக்கிக் கொண்டு, ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்பதே அந்த அறிக்கை.
பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுக்கப்போவதாக அறிவித்தவர், இப்போது திடீரென்று வாரிசு நியமிக்கப் போவதாக அறிவித்தது, திராவிட கழகத்தினருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதற்கிடையே, மணியம்மையை பெரியார் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அதற்காகத் திருமணப் பதிவாளரிடம் அவர் மனு செய்திருப்பதாகவும், சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
அதைப் படித்த அண்ணாவும், மற்ற தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பெரியாரின் வயது 70, மணியம்மைக்கு வயது 30. மணியம்மை பெரியாருடனேயே இருந்து பணி விடைகள் செய்து வந்தார். "வேண்டாம் இந்த பொருந்தாத் திருமணம்" என்று பெரியாருக்கு தந்திகளும், கடிதங்களும் குவிந்தன.

ஆனால் திட்டமிட்டபடி 9.7.1949 ல் திராவிடக் கழக பிரமுகர் சி.பி.நாயகத்தின் இல்லத்தில், திருமணப் பதிவாளர் முன்னிலையில் பெரியார் மணியம்மை திருமணம் நடந்தேறியது...

இதனை தொடர்ந்து திராவிடர் கலக்கம் உடைந்தது..அண்ணா அவர்களால் திமுக செப்டம்பர் 18 அன்று உருவாக்கப்பட்டது.....செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பார்கில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி. மு. க. வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.

செய்தி சேகரிப்புக்கு நன்றி :காலச்சுவடுகள் 


ஆனால் இதெல்லாம் அண்ணாவுக்கு திராவிடர் கழகத்தில்  இருந்து விலக  தேவைப்பட்ட காரணங்கள்..உண்மையில் அண்ணாவுக்கு தேர்தல் அரசியலில் ஈடுபட ஆசை இருந்தது...அதற்கு திராவிடர் கழகம்  சரியாக வராது,பெரியார் ஒப்பு கொள்ள மாட்டார்  என்பதால் தக்க தருணம் பார்த்துகொண்டு இருந்த அண்ணாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது பெரியாரின் திருமணம்...!

25 அக்டோபர் 2012

எம் ஜி ஆர் தான் என்னை சுட்டார்....MR ராதா

எம் ஜி ஆர் சுடப்பட்டதும் தெரியும்,MR  ராதாவுக்கு தண்டனை கிடைத்ததும் தெரியும்....ஆனால் MR ராதா வாக்குமூலத்தையும் தெரிந்துகொள்வோமா!இனி பிளாஷ்பேக் ...........
 இதன் முந்தய பதிவு :http://nkshajamydeen.blogspot.com/2012/10/blog-post_21.html எம்.ஜி.ஆரை சுட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா வாக்கு மூலம் கொடுத்தார். "எம். ஜி.ஆர்.தான் என்னை சுட்டார். நான் தற்காப்புக்காக திருப்பி சுட்டேன்" என்று கூறினார்....

அவர் அளித்த வாக்குமூலம் ....

"படம் எடுப்பது பற்றி, வாசு என்னிடம் பேசினார். "எனக்கு படம் எடுக்கும் யோசனை கிடையாது. கோவை பார்ட்டி இருப்பதாக ஒரு புரோக்கர் சொன்னார். நான் வேண்டுமானால் அந்த பார்ட்டியிடம் பேசுகிறேன்" என்றேன். அந்த தேதி எனக்கு ஞாபகம் இல்லை. அதன்பிறகு ஜனவரி 11ந்தேதி சம்பவம் நடந்த நாளுக்கு முன் தினம், வாசு வந்து என்னிடம் கோவை பார்ட்டி பற்றி கேட்டார். 

"வந்தால் சொல்கிறேன்" என்று நான் சொன்னேன். பிறகு 12ந்தேதி வாசு வந்து, "எப்படியாவது முடித்துக் கொடுத்துவிடு. ஒரு வார்த்தை சொல்லு. அப்போதுதான் எம்.ஜி.ஆர். என்னை நம்புவார். இல்லாவிட்டால் நம்பமாட்டார்" என்று கூறினார்....

நானும் வாசுவும் எம் ஜி ஆர் வீட்டிற்கு சென்றோம்....எம்.ஜி.ஆர். வீட்டின் முன் அறையில் உட்கார்ந்தோம். பிறகு நான் நடந்து கொண்டு இருந்தேன். அப்போது வந்த எம்.ஜி.ஆர்., என்னிடம் "என்ன அண்ணே, காமராஜரைக் கொல்ல நான் சதி செய்வதாக முன்னாலே பத்திரிகையில் எழுதி இருக்கீங்க. 

அன்று முதல், என்னையும் சுட்டுவிடுவதாக சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நான் மட்டும் என்ன? நானும் சுட்டுடுவேன் என்றுதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்" என்று கூறினார். நான் என்பாட்டுக்கு "வாக்" பண்ணிக்கொண்டு (நடந்து கொண்டு) இருந்தேன். பேப்பரில் உள்ளதைப் பேசுகிறானே விரோதமா என்னை நினைச்சுக்கிட்டு இருக்கிறானே" என்று நினைத்துக்கொண்டேன். 

"ஏதோ அவன் (வாசு) கூப்பிட்டானே என்று வந்தேன். நீயும் சுட்டுடுவேன்னு பயமுறுத்தி அசிங்கமாகப் பேசுகிறாய். இது அசிங்கமாக தெரியலையா?" என்று கூறிக் கொண்டு நடந்தேன். உடனே, எம்.ஜி.ஆர். "சுட்டால் என்ன செய்வீங்க?" என்று கேட்டார். உடனே நான், "மனிதன் உயிர் எப்படியும் போகுது. சுட்டுச் செத்தா என்னடா கெட்டுப் போச்சு" என்று திரும்பினேன். நான் திரும்பும்போது, "படார்" என்று ஒரு சப்தம் கேட்டது. 

தலையில் சுத்தியை வைத்து அடித்ததுபோல இருந்தது. நான் அடிபட்ட இடத்தில கையை பொத்திக்கொண்டு அப்படியே நின்றேன். நான் கையை எடுத்தபோது ஒரே ரத்தமாக இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் மெல்ல திரும்பிப் பார்த்தேன். எம்.ஜி.ஆர். கையில் துப்பாக்கி இருந்தது. அப்போது எனக்கு கொஞ்சம் உணர்ச்சி வந்தது. "இவன் நம்மை சுட்டுவிட்டான்" என்று எண்ணினேன். 

எப்படியும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. உடனே, நான் எம்.ஜி.ஆர். கையைப் பிடித்தேன். அப்போது என் கையில் இருந்த ரத்தம் எம்.ஜி.ஆரின் கையிலும், முகத்திலும் பட்டது. துப்பாக்கியை பிடுங்கினேன் அதன் பிறகு என்னுடைய 2 கைகளையும் சேர்த்துக் கொண்டு, எம்.ஜி.ஆர். கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கிச் சுட்டேன். யாரை சுட்டேன் என்று எனக்குத் தெரியாது. 

சூடு அவர் (எம்.ஜி.ஆர்.) மேல் விழுந்து இருக்கலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது. இதற்கு அப்புறம் எனக்கு ஒன்றும் சரியாக தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து எவ்வளவு நேரம் என்று சொல்லமுடியாது. இன்னொரு குண்டு என் மீது பாய்ந்தது. ஆனால் யார் சுட்டது என்று சொல்ல இயலாது. இதற்கு அப்புறம் சைதாப்பேட்டை மேம்பாலத்தில் வண்டி போவதுபோல் தெரிந்தது. ஆனால், அது காரா அல்லது கட்டை வண்டியா என்று சரியாகத் தெரியவில்லை. 

சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வரும்போது, "சப்இன்ஸ்பெக்டர் இருந்தால் கூப்பிடச்சொல்லு" என்று சொன்னேன். கார் நிறுத்தப்பட்டது. காருக்குள் யாரோ வந்து என்னைப் பார்த்தார்கள். அப்போது, "எம். ஜி.ஆர். சுட்டுட்டார்" என்று கூறினேன். அப்புறம் என்னால் அதிகம் பேசமுடியவில்லை. உடனே, "அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கள்" என்று கூறினார். 

"இதுபற்றி நாங்கள் எழுதிக் கொள்கிறோம். கையெழுத்து போடுங்கள்" என்று 2 பேப்ப ரிலோ, 4 பேப்பரிலோ கையெழுத்து வாங்கினார்கள். நான் எங்கே கையெழுத்து போட்டேன், யாரிடம் போட்டேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆஸ்பத்திரியில் என்னிடம் வாக்குமூலம் வாங்கியபோது நடந்ததை சொன்னேன். இவ்வாறு எம்.ஆர்.ராதா கூறினார். ..இதனை தொடர்ந்து எம் ஜி ஆர் வீட்டு வேலை ஆட்கள், எம் ஜி ஆர்,வாசு என பலபேர் சாட்சியம் அளித்தார்கள்...

இந்த வழக்கில் செசன்சு நீதிபதி லட்சுமணன் கடந்த 5.11.67ல் தீர்ப்பு கூறினார். அதில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா தற்காப்புக்காகவோ அல்லது தவறுதலாகவோ சுடவில்லை. எம்.ஜி.ஆரை தீர்த்துக்கட்டி விட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்.
எனவே, அவரை குற்றவாளி என்று முடிவு செய்கிறேன். எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் நடிகர் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பு கூறுகிறேன்....என தீர்ப்பளித்தார்...

நன்றி: காலச்சுடுகள்...

21 அக்டோபர் 2012

ஏன் சுடப்பட்டார் எம்.ஜி.ஆர் ?!



MGR  MRராதாவால்  சுடப்பட்டார்  என்பது நாம் அறிந்த விசயமாகவே இருந்தாலும்,அதற்கான காரணம் என்ன என்று பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை....நான் படித்த அந்த வரலாற்று தகவல்களை  பகிர்ந்து கொள்கிறேன்....


இனி பிளாஷ்பேக் .....


1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம், தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்தார். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.




எம்.ஜி. ஆரும், எம்.ஆர்.ராதாவும் நடித்திருந்த 'பெற்றால்தான் பிள்ளையா' படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரின் தோட்டம், ராமாவரத்தில் உள்ளது. சென்னை பரங்கி மலையில் இருந்து 1 மைல் தூரத்தில் இந்த தோட்டம் உள்ளது.



1967 ஜனவரி 12-ந்தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி. ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு, எம்.ஆர். ராதா போனார். அவருடன், 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தை தயாரித்த முத்துக் குமரன் பிக்சர்ஸ் அதிபர் வாசுவும் சென்றார். 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தை தயாரிப்பதற்கு, எம். ஆர்.ராதா ரூ.1 லட்சம் பண உதவி செய்திருந்ததாகக் கூறப்பட்டது.



படம் வெளியான பிறகு, அந்தப் பணத்தை வாங்கித் தருவதாக, எம்.ஜி.ஆர். உறுதி கூறியிருந்தார் என்றும், அதன் படி பணம் வராததால், வாசுவையும் அழைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆர். வீட்டுக்கு ராதா சென்றதாகவும் சொல்லப்பட்டது.



எம்.ஜி.ஆரை ராதாவும், வாசுவும் சந்தித்தார்கள். முன்பு ஒப்புக் கொண்டது போல், தனக்கு ஒரு லட்சத்தை தரவேண்டும் என்று எம்.ஆர். ராதா கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



உன்னால் எனக்கு நிறைய நஷ்டம். பல படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள் என்று ராதா ஆத்திரத்தோடு கூறினார். இதனால் தகராறு முற்றியது. எம்.ஆர்.ராதா கோபத்தோடு வெளியே செல்வதுபோல எழுந்தார். பிறகு, 'சட்'டென்று மடியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை நோக்கி சுட்டார்.



எம்.ஜி.ஆர். கீழே குனிந்தார். குண்டு, அவர் இடதுபுற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் திகைப்படைந்த படத் தயாரிப்பாளர் வாசு, பாய்ந்து சென்று எம்.ஆர்.ராதாவை பிடித்தார். மேற்கொண்டு சுடாதபடி தடுத்தார்.



உடனே ராதா, துப்பாக்கியை தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது. இதற்குள் எம்.ஜி.ஆர். வீட்டு ஆட்கள் ஓடிவந்து ராதாவை பிடித்துக்கொண்டனர். துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டார்கள்.



எம்.ஜி.ஆரை ஒரு காரில் ஏற்றி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். எம்.ஆர்.ராதா, இன்னொரு காரில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில், அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.



எம்.ஆர்.ராதாவின் தலையில் குண்டு இருந்தது. மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக, அவர்கள் இருவரும் பெரிய (ஜெனரல்) ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டனர். இருவருக்கும் தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது.



எம்.ஜி.ஆருக்கு இரவு 10.45 மணி முதல் நள்ளிரவு 2.45 வரை ஆபரேஷன் நடந்தது. காது அருகே பாய்ந்து இருந்த சிறிய இரும்புத்துண்டை (குண்டின் ஒரு பகுதி) வெளியே எடுக்கமுடியவில்லை. அதை எடுக்க, ஆபரேஷன் செய்யச் செய்ய ரத்தப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, அதை உள்ளேயே வைத்து தையல் போட்டுவிட்டார்கள்.



இதனால் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எம்.ஜி.ஆர். உணர்வு இல்லாமல் இருந்தார். குண்டு பாய்ந்த இடத்தை டாக்டர்கள் பலமுறை 'எக்ஸ்ரே' எடுத்தனர். காயம்பட்ட இடத்தில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறியதால் ஆஸ்பத்திரியில் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.



எம்.ஆர்.ராதாவுக்கு இரவு 11 மணி வரை ஆபரேஷன் நடந்தது. அவர் தலையில் இருந்து ஒரு குண்டும், கழுத்தில் இருந்து ஒரு குண்டும் அகற்றப்பட்டன. நடிகர் எம். ஆர்.ராதா கைது செய்யப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் அறிவித்தார். எம்.ஜி.ஆரை கொல்ல முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் ராதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



தி.மு.கழகத் தலைவர் அண்ணா, மு.கருணாநிதி, என்.வி.நடராசன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்குச் சென்று எம்.ஜி.ஆரை பார்த்தனர். படுகாயத்துடன் படுக்கையில் படுத்திருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து, அண்ணாவும், மற்ற இரு தலைவர்களும் கண் கலங்கினர். பிறகு அண்ணாவும், மற்றவர்களும் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று, அங்கு நடந்ததை விசாரித்தனர்.



எம்.ஜி.ஆர். சுடப்பட்ட செய்தி, காட்டுத்தீபோல் பரவியது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கடைகள் மூடப்பட்டன. சென்னை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வரும்போதே, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். கழுத்தில் பெரிய கட்டுடன் இருக்கும் படங்கள், தி.மு.க. பிரசார சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன. தேர்தல் பிரசாரத்துக்கு போகாமல், ஆஸ்பத்திரியில் இருந்தபடி பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். தி.மு.கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா முதலமைச்சர் ஆனார்.



எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆர். மார்ச் 10-ந்தேதி வீடு திரும்பினார். எம்.ஜி.ஆரை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், எம்.ஆர்.ராதா மீது வழக்கு தொடரப்பட்டது. சைதாப்பேட்டை சப் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.......... 


 நன்றி : காலச்சுவடுகள் .....  


MR  ராதா வாக்குமூலம்  ,தண்டனை விபரங்கள் அடுத்தடுத்த  பதிவுகளில்...  

08 அக்டோபர் 2012

எப்படி உருவானது அதிமுக......?!


வரும் 17 ம்  தேதியுடன் அதிமுக  தொடங்கப்பட்டு  40 ஆண்டுகள்  முடிவடைகிறது....தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள் என்றால் அது திமுகவும்,அதிமுகவும்தான் .........ஆனால் இந்த இரண்டு கட்சிகளுமே  தானாக  தோன்றிய  கட்சிகள் அல்ல.....அதாவது  திமுக  திராவிடர்  கழகத்திலிருந்து  பிரிந்து வந்து புதிதாக தொடங்கப்பட்ட  கட்சி....

ஆனால் அதிமுக?!சுருக்கமாக சொல்வதாக இருந்தால் யானை தன்  தலையில்  மண்ணை வாரி போட்டு கொள்ளுமே  அதுபோல  கருணாநிதி சொந்த காசில் சூனியம்  வைத்ததினால் உருவான  கட்சி என்று சொன்னால் அது மிகையல்ல....

அதிமுக எப்படி உருவானது?எல்லாருக்கும் தெரிந்த விசயம்தான்...இருந்தாலும் போவோமா பிளாஸ்பேக்...

ஆரம்பத்தில்  திரைத்துறையிலும் ,பின்பு அரசியலிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்தான்  MGR ம் கருணாநிதியும்....சொல்லப்போனால்  கருணாநிதி முதல்வர்  ஆவதற்கு முக்கிய காரணமாக  இருந்தவர்  எம் ஜி ஆர்தான்....

வருடங்கள் ஓட ஓட இவர்கள் இருவருக்குள்ளும்  ஈகோ  சுனாமி  தலை விரித்தாட  பிரிவு  ஏற்பட  ஆரம்பித்தது... 

இந்த கருத்து வேற்றுமை, தி.மு. கழகத்தைப் பிளவுபடுத்தும் அளவுக்கு வளர்ந்தது.   1972 அக்டோபர் 8 ந்தேதி திருக்கழுக்குன்றத்திலும், பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலும் நடை பெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும்போது, தி.மு.கழகத்தில் ஏற்பட்டிருந்த பிளவு பகிரங்கமாக வெடித்தது. எம்.ஜி.ஆர். பேசுகையில் கூறியதாவது:-


எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர். என்று சொன்னேன். உடனே ஒருவர், "நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?" என்று கேட்டார். நான் சொல்கிறேன். நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. முன்பொரு முறை காமராஜர் அவர்களை "என் தலைவர்" என்றும், அண்ணா அவர்களை "வழிகாட்டி" என்றும் சொன்னேன்.

 தலைவர்கள் பலர் இருப்பார்கள்.
ஆனால் கட்சிகளுக்கு கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். அண்ணா அவர்கள்தான் தி.மு.க. வழிகாட்டி. காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன், நான் மக்களை சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய், வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை.

நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில், "தி.மு.க.வுக்கு வாக்குத் தாருங்கள். இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது, நேர்மை இருக்கும்" என்று சொன்னேனே. அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புவதற்கு, சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?

மந்திரிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குக்காட்ட வேண்டும் என்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்;
சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக்காட்டு. மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் பதவிகளில் இருப்பவர்கள், குடும்பத்திற்கு வாங்கியிருக்கிற சொத்துக்கள் இருந்தால் கணக்குக் காட்டவேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்ல வேண்டும்.

பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காகக் குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை கூறி, மக்கள் முன் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்கள் மக்கள் முன்னால் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன் நிறுத்தி தூக்கி எறிவோம்."

என்ன ரொம்ப சூடாக  இருக்கா எம் ஜி ஆரின் பேச்சு!இது யாருக்கு வைக்கப்பட்ட  சூடு என்பதை சொல்லவும் வேண்டுமா?

சூடான   எம் ஜி ஆரின்  பேச்சுக்கு  கருணாநிதியின்  ரியாக்சன் ???!

அடுத்த பதிவில்............



01 அக்டோபர் 2012

மகாத்மா பட்டம் எனக்கு மன வேதனையே !.....காந்தி




காந்தி ஜெயந்தி அன்று டிவி யில்  வரும் சிறப்பு நிகழ்சிகளை  பார்ப்பது எந்த வகையில் நன்மை என்று எனக்கு புரியவில்லை.... தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் நொடிக்கு நூறு விளம்பரங்கள் போட்டு  காந்தியையும் ,அவர் பிறந்த நாளையும் விற்பனை பொருளாக்கி விட்டனர்...

ஏற்கனவே காந்தியை பற்றி நாம் ஓரளவு அறிந்து வைத்து இருந்தாலும் அறியாத சில தகவல்களும்  இருக்கத்தான் செய்யும்....மகாத்மா அவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பதற்காக இந்த பதிவு....நான் விக்கிப்பீடியாவில்  படித்த தகவல்களை  பகிர்ந்துள்ளேன்....





மோகன்தாசு கரம்சந்த் காந்தி அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.


இளமை

மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.

இளமை வயதில் காந்தியடிகள், வயது 7, 1867
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில்தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.
இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.

[தொகு]தென்னாப்பிரிக்காவில்

அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

[தொகு]இந்திய விடுதலைப் போராட்டத்தில்

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபாலகிருஷ்ண கோகலேரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)
பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

காந்தி-ஜின்னா (காங்கிரஸ்-முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை)

காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

[தொகு]மரணம்

Gandhi death.jpg

மகாத்மா காந்தியின் அஸ்தி அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு காட்சி ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தியின் புதல்வர்கள் ராம்தாஸ் (கலசத்துடன்) மற்றும் தேவ்தாஸ் ஆகியோருடன்
1948 ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் நாதுராம் கோட்ஸே என்பவன் புது தில்லியில் காந்தியை சுட்டுக்கொலை செய்தான். ஜனவரி 30 தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

மகாத்மா .....
நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு நாகரிக உலகத்திற்கும் இப்பொழுது ‌தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் மகாத்மா பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மனவேதனையையே தந்திருக்கிறது. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை’ 
தன்னை  மகாத்மா  என்று அழைப்பது பற்றி 
இவ்வாறு கருத்து  தெரிவித்து இருக்கிறார் அண்ணல் காந்தி !!!



















நன்றி : விக்கிப்பீடியா