08 அக்டோபர் 2012

எப்படி உருவானது அதிமுக......?!


வரும் 17 ம்  தேதியுடன் அதிமுக  தொடங்கப்பட்டு  40 ஆண்டுகள்  முடிவடைகிறது....தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள் என்றால் அது திமுகவும்,அதிமுகவும்தான் .........ஆனால் இந்த இரண்டு கட்சிகளுமே  தானாக  தோன்றிய  கட்சிகள் அல்ல.....அதாவது  திமுக  திராவிடர்  கழகத்திலிருந்து  பிரிந்து வந்து புதிதாக தொடங்கப்பட்ட  கட்சி....

ஆனால் அதிமுக?!சுருக்கமாக சொல்வதாக இருந்தால் யானை தன்  தலையில்  மண்ணை வாரி போட்டு கொள்ளுமே  அதுபோல  கருணாநிதி சொந்த காசில் சூனியம்  வைத்ததினால் உருவான  கட்சி என்று சொன்னால் அது மிகையல்ல....

அதிமுக எப்படி உருவானது?எல்லாருக்கும் தெரிந்த விசயம்தான்...இருந்தாலும் போவோமா பிளாஸ்பேக்...

ஆரம்பத்தில்  திரைத்துறையிலும் ,பின்பு அரசியலிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்தான்  MGR ம் கருணாநிதியும்....சொல்லப்போனால்  கருணாநிதி முதல்வர்  ஆவதற்கு முக்கிய காரணமாக  இருந்தவர்  எம் ஜி ஆர்தான்....

வருடங்கள் ஓட ஓட இவர்கள் இருவருக்குள்ளும்  ஈகோ  சுனாமி  தலை விரித்தாட  பிரிவு  ஏற்பட  ஆரம்பித்தது... 

இந்த கருத்து வேற்றுமை, தி.மு. கழகத்தைப் பிளவுபடுத்தும் அளவுக்கு வளர்ந்தது.   1972 அக்டோபர் 8 ந்தேதி திருக்கழுக்குன்றத்திலும், பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலும் நடை பெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும்போது, தி.மு.கழகத்தில் ஏற்பட்டிருந்த பிளவு பகிரங்கமாக வெடித்தது. எம்.ஜி.ஆர். பேசுகையில் கூறியதாவது:-


எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர். என்று சொன்னேன். உடனே ஒருவர், "நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?" என்று கேட்டார். நான் சொல்கிறேன். நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. முன்பொரு முறை காமராஜர் அவர்களை "என் தலைவர்" என்றும், அண்ணா அவர்களை "வழிகாட்டி" என்றும் சொன்னேன்.

 தலைவர்கள் பலர் இருப்பார்கள்.
ஆனால் கட்சிகளுக்கு கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். அண்ணா அவர்கள்தான் தி.மு.க. வழிகாட்டி. காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன், நான் மக்களை சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய், வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை.

நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில், "தி.மு.க.வுக்கு வாக்குத் தாருங்கள். இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது, நேர்மை இருக்கும்" என்று சொன்னேனே. அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புவதற்கு, சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?

மந்திரிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குக்காட்ட வேண்டும் என்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்;
சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக்காட்டு. மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் பதவிகளில் இருப்பவர்கள், குடும்பத்திற்கு வாங்கியிருக்கிற சொத்துக்கள் இருந்தால் கணக்குக் காட்டவேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்ல வேண்டும்.

பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காகக் குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை கூறி, மக்கள் முன் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்கள் மக்கள் முன்னால் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன் நிறுத்தி தூக்கி எறிவோம்."

என்ன ரொம்ப சூடாக  இருக்கா எம் ஜி ஆரின் பேச்சு!இது யாருக்கு வைக்கப்பட்ட  சூடு என்பதை சொல்லவும் வேண்டுமா?

சூடான   எம் ஜி ஆரின்  பேச்சுக்கு  கருணாநிதியின்  ரியாக்சன் ???!

அடுத்த பதிவில்............2 கருத்துகள்:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....