22 அக்டோபர் 2012

கலப்பட பாலும், கெஜ்ரிவாலும் (கூட்டுப்பொறியல்)ஊழலுக்கு எதிராக  பிரதமர்,சோனியா  காந்தி ,அரியானா முதல்மந்திரி  என சகட்டுமேனிக்கு   எல்லார் வீடுகளின் முன்பும் போராட்டம் நடத்தும் கெஜ்ரிவாலின்  கண்களுக்கு ஏன் தமிழ்நாடும் ,தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் தெரியவில்லை?ஊழல் புகழ் உத்தமர் ஆ.ராசா,கருணாநிதி அண்ட் கோ ,ஜெயலலிதா  அண்ட் கோ போன்ற   மக்களுக்காக உழைத்து தங்களுக்காக சொத்து சேர்த்த தமிழக பிரபலங்களின் வீடுகளின் முன்பும் போராட்டம் நடத்த சீக்கிரம் வாங்க கெஜ்ரிவால்  சார்....!

.......................................... ................................................... .....................................


ஒருவழியாக மதுரை ஆதனத்தை பிடித்து இருந்த அசிங்கம் நீங்கிவிட்டது.....மதுரை ஆதின மடத்தின் பெருமையை  நிலைநாட்டவே நித்யானந்தாவை இளைய ஆதின பொறுப்பிலிருந்து நீக்கியதாக பொறுப்பாக கூறியுள்ளார் அருணகிரிநாதர்....அப்ப நித்யானந்தா பொறுப்பில் இருந்த இந்த 6 மாத காலமும் ஆதின மடத்தின் பெருமையை வேறு  எங்கோ  குத்தகைக்கு விட்டு இருந்தார் போல...!

................................................ ......................................... ..........................................

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மற்றும் அத்வானி உறவினர்கள் மீதும் நிறைய முறைகேடு புகார்கள் வந்தன.அவற்றிற்கான ஆதாரங்கள்  இருந்த போதும் நாங்கள் பெரிது படுத்தவில்லை என திருவாய் மலர்ந்துள்ளார் திக் விஜய் சிங் ..அதாவது மறைமுகமாக நாங்கள் உங்களை கண்டு கொள்ளவில்லை,நீங்களும் எங்களை  கண்டு கொள்ளாதீர்கள்  என பேரம் பேசுகிறார்.....என்ன ஒரு மொள்ளமாரித்தனம்....!ஆதாரம்  இருக்கு ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என சொன்னதற்காகவே இவரை உள்ளே தூக்கி  போடலாம்...

ஏன்யா மானம் கெட்ட  அரசியல்வாதிகளே....நீங்கள் மாறி மாறி கொள்ளை அடிப்பீர்கள்...அதை யாரும் கேட்க கூடாது..கேட்டால் நாங்கள் மட்டுமல்ல..எங்களுக்கு முன்னாடி இருந்தவர்களும் அப்படித்தான் என நா கூசாமல் சமாளிப்பு வேறு...உங்கள் எல்லாரையும் ஒட்டு மொத்தமாக நாடு கடத்தினால்தான் இந்தியா வல்லரசு அல்ல ஒரு நல்லரசாவது ஆகும்..!

............................. .................................................. ...........................................................


பொதுமக்கள் பயன்படுத்தம் பாலில்  68 சதவீதம் கலப்படம் இருப்பதாக மத்திய  அரசே சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளது...!பாலில் தண்ணீரோடு குளுக்கோசும் கலக்கப்படுகிறதாம்!

 மேலும் பாலில் உள்ள அழுக்கை நீக்குவதற்காக டிடர்ஜென்ட் பவுடரை பயன்படுத்துவதாக  கூறி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது   நீதிமன்றத்தில் அறிக்கை   தாக்கல் செய்துள்ள அரசு...நாம் எல்லாம் பால் என்று நினைத்து கொண்டு பாதி விஷத்தை அருந்தி கொண்டு இருக்கிறோம்....இனி எதை நம்பி வாங்குவது?கலப்படத்தை மட்டும்  துல்லியமாக  கூறும் அரசு அதை ஏன் கட்டுபடுத்த தவறிவிட்டது? ...அப்படின்னா  இனி மக்கள் ஆரோக்கியமாக  வாழ தகுதி அற்ற  நாடாக  அறிவிக்க வேண்டியது மட்டும்தான் அரசோட வேலை   போல!....................................  ........................பொறியல் ........ ......................................................

சேது சமுத்திர திட்டத்தை   எம் ஜி ஆரே விரும்பினார் :கருணாநிதி #

அந்த எம் ஜி ஆரையே  இப்ப அந்த அம்மா யாருன்னு கேட்பாங்க பாஸ்!

................................... ............................................ ...............................................................

எங்கள் தலைமையில் தமிழகத்தில் ஏற்கனவே 3-வது அணி உள்ளது: டாக்டர் ராமதாஸ் #

பட் அதில் பாமக மட்டுமே உள்ள்ளது! கோ க மணி....#

................................................. ............................................................ ..............................................................................

அடுத்த  3 ஆண்டுகளில் 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி :ஜெயலலிதா #

அம்மாவுக்கு இப்ப பசி எடுத்தால்  3 நாள் கழித்துதான் சாப்பிடுவார் போல!

................................... .......................................................... ..........................................................................


15 கருத்துகள்:

 1. "எங்கள் தலைமையில் தமிழகத்தில் ஏற்கனவே 3-வது அணி உள்ளது: டாக்டர் ராமதாஸ் #
  பட் அதில் பாமக மட்டுமே உள்ள்ளது! கோ க மணி...."
  பாமக ல் யாரு இருக்காங்க? அதில் யாரவது இருக்காங்களா?

  பதிலளிநீக்கு
 2. முடிவில் மூன்றும் நல்ல பொரியல்...

  நன்றி...
  tm4

  பதிலளிநீக்கு
 3. SUPER ...
  AFTER LONG TIME AM BACK
  IF U HAVE TIME DO VISIT TQ..
  http://tamilyaz.blogspot.com/2012/10/take-off.html

  பதிலளிநீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும்,

  :-) :-) :-) :-)

  பதிலளிநீக்கு
 5. கெஜ்ரிவாளோட புது "கெட்டப்ப" பார்த்திங்களா..காமெடியா இருக்கு!!!

  //ஒருவழியாக மதுரை ஆதனத்தை பிடித்து இருந்த அசிங்கம் நீங்கிவிட்டது.....மதுரை ஆதின மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்யானந்தாவை இளைய ஆதின பொறுப்பிலிருந்து நீக்கியதாக பொறுப்பாக கூறியுள்ளார் //

  அப்படினா..முதலில் சிவன் வந்து தன் கனவில் கூறியதால்தான் நித்தியை இளைய ஆதினமாக நியமித்ததாக சொன்னாரே ??...அசிங்கத்துக்கு காரணம் சிவன் தானோ!!!

  //அம்மாவுக்கு இப்ப பசி எடுத்தால் 3 நாள் கழித்துதான் சாப்பிடுவார் போல!//

  ஹ..ஹா ..ஹி ..ஹீ ..ஹூ..ஹே.....அம்மாவை பார்த்த அப்படியா தெரியுது ..??? அடுத்த 3 நாளுக்கு உள்ளத இப்பவே வச்சி செமத்தியா கட்டுற மாதிரில தெரியுது!!!


  பதிலளிநீக்கு
 6. அப்ப கலப்பட பாலை தினமும் குடித்தால் கூடிய சீக்கிரம் நமக்கு வாயில் பால் ஊத்தி சங்கு ஊதி விடுவார்கள் ....

  பதிலளிநீக்கு
 7. இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகள் அடிக்கும் கூத்துக்கும் ஊழலுக்கும் அளவே இல்லை...

  பொறியல் - நகைச்சுவையாக ரசிக்கும் படி உள்ளது

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....