24 அக்டோபர் 2012

ரஜினி கொடுக்கும் பிரியாணி விருந்து!(நானாக சொல்லும் கதை)முன்குசும்பு சாரி  முன் குறிப்பு: இந்த படம் சும்மா ஒரு பப்ளிகுட்டிக்காக ..

நான் எப்ப வருவேன் எப்படின்னு வருவேன்னு  சொல்லமாட்டேன்..ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா  வருவேன் ...என்ற சூடான பஞ்ச்  டயலாக்கை பேசிவிட்டு கேரவனுக்குள் வந்து அமர்ந்தார் 33 வயதே ஆன ரஜினிகாந்த்...

 ரஜினிகாந்த் தமிழ்பட உலகின் சூப்பர் ஸ்டார்....சமிபத்தில்தான் தனது கல்யாணத்தை ஆடம்பரமாக பண்ணி முடித்து இருந்தார்....

சார்..உங்களை பேட்டி எடுக்க ஆறு மாசமா ஒரு பத்திரிக்கை காரன்  கேட்டுகிட்டே இருக்கான் சார்...என்றார் ரஜினிகாந்தின் உதவியாளர்....

நாளைக்கு வரசொல்...படம் ரிலிசாக போகுது ..இப்ப பரபரப்பா ஏதாவது பேட்டி கொடுத்தால்தான் ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும் என்றார்  ரஜினி....

சார் அப்புறம் இன்னொன்னு...திரும்பவும் அவர் உதவியாளர்

என்ன?எரிச்சலுடன் கேட்டார் ரஜினி


உங்க ரசிகர் மன்ற நிர்வாகிகள்  "நீங்க உங்க  கல்யாணத்துக்கு ரசிகர்களுக்காக  பிரியாணி விருந்து போடுவதாக சொல்லி இருந்தீர்கள் அல்லவா !அது பற்றி கேட்பதற்காக  வந்து இருக்கிறார்கள்...என்ன சொல்ல சார்....

ம்ம்ம்... எல்லாத்தையும்  மறந்துவிடாமல்  கேட்பானுக....என் படம் ரிலிசான பிறகு   பிரியாணி விருந்துன்னு சொல்லிடு...அப்பத்தான் வழக்கத்தைவிட  ரொம்ப உற்சாகமா  படத்துக்கு தடபுடலா வரவேற்பு  கொடுப்பானுக ...பிறகு வேற ஏதாவது காரணம் சொல்லி தட்டி கழிக்கலாம் .என சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டுக்கு எழுந்து போனார் ரஜினி....

வெளியே தங்கள்  தலைவன் சொல்லப்போகும் பதிலுக்காக உச்சி வெயிலில் கால் கடுக்க காத்து  கொண்டு நின்றனர் ரசிகர்கள்  !7 கருத்துகள்:

 1. ஏன் நிஜக் கதையை கற்பனை எனப்
  போட்டிருக்கிறீர்கள் எனப் புரியவில்லை
  இது போன்ற நிஜக் கற்பனைகள் தொடர
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்குத்தான் நானாக சொல்லும் கதைன்னு பேர் வைத்தேன்....நன்றி சார்...

   நீக்கு
 2. ""நீங்க உங்க கல்யாணத்துக்கு ரசிகர்களுக்காக பிரியாணி விருந்து போடுவதாக "
  உங்க மகளின் கல்யாணத்துக்கு - உங்க கல்யாணத்துக்கு ( இது மட்டும் தான் கற்பனை மற்றதெல்லாம் அப்பட்டமான உண்மை )

  பதிலளிநீக்கு
 3. இதெல்லாம் நடந்த உண்மைகள் என்று நினைக்கிறேன்...

  நன்றி...
  tm3

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....