15 அக்டோபர் 2012

உங்கள் பதிவுகள் ஹிட்ஸ் அடிக்க வேண்டுமா?


 முன்குறிப்பு: இது எந்த பதிவரையும் தாக்கியோ,நோக்கியோ  எழுதப்பட்ட  பதிவு அல்ல ........

பதிவு ஹிட் அடிக்கனும்னு  எல்லாருக்கும் ஆசை இருக்கும்.....ஆனால்  எல்லா பதிவும் ஹிட் அடிக்கணும் என்ற  பேராசை இருந்தால்  அது நடப்பது கஷ்டம்தான்....

நமது பதிவுக்கு வாசகர்களை வரவழைப்பதில் முதலிடம் பதிவின் தலைப்புக்குத்தான்....தலைப்பை வைத்து வருவோரின்  எண்ணிக்கைதான் அதிகம்....


ஓகே....இப்ப தலைப்பு எப்படி வைப்பது?(ஆமா இவரு பெரிய அவரு அப்பிடின்னுல்லாம்  யாரும் நினைக்க வேண்டாம்....ஏனா நானும் உங்க கேஸ்தான்..ஹி ஹி..இப்படி தலைப்பு வைத்து எப்படி உங்களை வர வச்சேன் பார்த்தீர்களா !?)

தலைப்பு வைப்பதில் இரண்டு வகை உண்டு.....முதலில்  பதிவை எழுதிவிட்டு  தலைப்பை வைப்பது.....அதாவது குழந்தை பிறந்தவுடன்  பேரை தேடி  வைப்பது போல....இரண்டாவது  தலைப்பை வைத்துவிட்டு  பதிவை எழுதுவது....அதாவது குழந்தை பிறக்கும் முன்னரே பேரை தேர்வு செய்து வைத்து இருப்பது போல....


பதிவை எழுதிவிட்டு தலைப்பைவைப்பதில்  நன்மையும் உண்டு.....ஆனால் அந்த பதிவில் என்ன எழுதி இருக்கிறோமோ அதற்கு ஏற்றது போல  தலைப்பு இருக்க வேண்டும்...அதை விட்டு விட்டு  எழுதிய பதிவு ஒரு பக்கம் இருக்க பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் தலைப்பு வைப்பது ஆண் குழந்தைக்கு  பெண் குழந்தையின்  பெயரை வைப்பதுபோல!

 அதாவது அரசியல் பதிவை எழுதிவிட்டு அதற்கு பவர் ஸ்டாரின் பெயரையும் சேர்த்து வைப்பது !பெரும்பாலும் இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது....(சில நேரங்களில்  நானும்தான்..ஹி ஹி)..இது உடனடி பலன் கொடுக்கும் ஒன்றுதான்..ஆனால்  போக போக இவனுக்கு இதுதான் வேலை...தலைப்பு மட்டும்தான் சூடாக இருக்கும்,பதிவு ஆறி போன ஒன்றுதான் என நினைத்து வரமாட்டார்கள் அதிபுத்திசாலி  வாசகர்கள்!..சோ இழப்பு நமக்குத்தான் ...


அடுத்ததாக  தலைப்பை  வைத்துவிட்டு பதிவை எழுதுவது.....அதாவது  விஜயகாந்த்  கருணாநிதி சந்திப்பு என  தலைப்பு வைத்துவிட்டு அவர்கள் சந்தித்த பழைய புகைப்படத்தையும்  செய்தியையும் போட்டு பதிவு எழுதுவது.....இதுவும் உடனடி பலன்  கொடுக்க கூடிய ஒன்றுதான்....தலைப்பை பார்த்துவிட்டு ஓடி வருவார்கள்...இதே மாதிரி தொடர்ந்து எழுதினால்  தலைப்பு மட்டும்தான் புதுசு..மேட்டர் பழசு...சரக்கு இல்லை என நினைத்து  நம் பதிவுகள் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்....


என்னடா இவன் சொல்ல வரான்னு  கடுப்புல பார்க்கும் நண்பர்களுக்கு....நாம் என்ன ஏழுத போகின்றமோ அல்லது எழுதி இருக்கோமோ  அதற்கேற்ற  தலைப்பை வைப்பது நல்லது என எனக்கு தோணுது...அது நமக்கு ஒரு ஸ்டாண்டர்ட்  பதிவர் எனும் பெயரை பெற்று தரும்...பிரபல பதிவர்கள் எல்லாம் அப்பிடி வந்தவர்கள்தான்.....இவன் என்னடா நமக்கு சொல்லுமளவுக்கு  பெரிய அப்பாடக்கர்  பதிவரா என யாரும்  கோப பட வேண்டாம் மக்களே....இது  அட்வைஸ்  சொல்றது அல்ல..அன்புல  சொல்றது....(ஹி ஹி அஜித்  ஸ்டைலில்  படிக்கவும்!)

ஓகே....பதிவுக்கேற்ற  தலைப்பு வைப்போம்....பல பல  ஹிட்ஸ் அடிப்போம்....

அப்பாடா இன்னைக்கு ஒரு பதிவு தேத்தியாச்சு !!
24 கருத்துகள்:

 1. ஒரே நாளில் பணக்காரனாவது எப்படி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கான பதில் பிளாக்கர் நண்பன் தளத்தில் உள்ளது

   நீக்கு
  2. பிளாக்கர் நண்பனா? அது யாரு? புது பதிவரா?

   :D :D :D

   நீக்கு
  3. அடுத்த பதிவுக்கு நல்ல தலைப்பா தெரியுதே?!

   நீக்கு
  4. அவ்வ்வ்வ்... உங்களுக்கு புரியலையா? அவ்வளவு இலக்கியத்தரமாவா என் பின்னூட்டம் இருக்கு?

   //ஒரே நாளில் பணக்காரனாவது எப்படி?//

   வடிவேல்-பார்த்திபன் காமெடி பார்த்ததில்லையா?

   நீக்கு
 2. ஸ்மைலி போட மறந்துட்டேன்.

  :) :) :)

  பதிலளிநீக்கு
 3. ஐய்யய்யோ முடிய'லை ! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்பால் செல்வனுக்கு முடியலையாம்....மாத்ரு பூதமும் இறந்துட்டாரே...வேற டாக்டர் இருக்காங்களா...??தெரிஞ்சவங்க சொல்லுங்க...பதிவுலக சகோதரருக்கு உதவுவீர்...

   நீக்கு
  2. மாத்ரு பூதம் எதுக்கு, ஹதித்ஸ்களை ஒரு முறைப் படித்தாலே போதும் .. ஹில்மா தான்.

   நீக்கு
  3. ஹதீத்கள் உங்களுக்கு அந்த மாதிரினா....அப்ப உங்க பதிவுகளை படிச்சா தத்துவ ஞானியா ஆயிரலாமா..???

   இக்பால் செல்வன் பதிவை அதிகம் படித்த ஒரு ரசிகர் படம் முதன் முறையாக இணைய தளங்களில் ......

   http://www.rahimgazzali.com/2012/09/blogger.html (பதிவில் முதல் படம்)

   நீக்கு
 4. ஹாஜா... கஸாலி மேல ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.......குரு மேல் எப்படி கோபம் வரும்?ஜெயா டிவி செய்தியை விட உங்கள் கமெண்ட் கண்டிக்க தக்க ஒன்று !!

   நீக்கு
 5. இப்படியும் பதிவு எழுதலாம்னு உங்கள பார்த்துதான் கத்துக்கணும். சூப்பரு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது உட்டாலங்கடி பதிவு சார்...நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்....

   நீக்கு
 6. ம்ம் இந்த பதிவு ஹிட்டா பாஸ்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....