18 அக்டோபர் 2012

லஞ்சம் கேட்ட கருணாநிதியும், கொடுக்க மறுத்த விஜயகாந்தும் (நானாக சொல்லும் கதை)

முன்குறிப்பு  : இந்த படத்துக்கும் இந்த சிறு  கதைக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை ....இது சும்மாச்சுக்கும்  மக்களை மகிழ்விப்பதற்காக

அதெல்லாம் முடியாது...நான் என்ன ரொம்பவா கேட்கிறேன்....எல்லா இடத்துலயும்  நடக்கிறதுதானே....கடைசியா  சொல்றேன்  நான் கேட்ட 20000 ரூபாயை  கொடுத்தால்  உன்மகனை காலியாக  உள்ள சூப்பர்வைசர் வேலைக்கு   சேர்த்து கொள்ள சொல்லி  முதலாளியிடம் சொல்வேன்...இல்லையென்றால் யார் பணம் கொடுக்கிறார்களோ  அவர்களுக்குதான்  வேலை கறாராக சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினார் கருணாநிதி....

அந்த  நவீன அரிசி ஆலையில் கருணாநிதி வைத்ததுதான் சட்டம்....நீண்ட காலமாக  கணக்குபிள்ளையாக  இருக்கும் கருணாநிதி சொல்வதைத்தான் கேட்பார் அந்த மில் முதலாளி  ....எந்த வேலை காலியாக இருந்தாலும்  கருணாநிதி லஞ்சம் வாங்காமல்  யாரையும் வேலைக்கு சேர்த்து  கொள்ள  சிபாரிசு செய்யமாட்டார்....

வீட்டிற்குமுன்  புதிதாக வாங்கிய  பைக்கை  நிறுத்தினார்.. அது  ஸ்டாண்ட்  சரியாக போடாததால்  கீழே விழுந்துவிட்டது....கண்ணாடி காலி...லஞ்ச பணத்தில்  வாங்கிய பைக்குதானே என அலட்சியமாக  வீட்டிற்குள் நுழைந்தார்....உள்ளே  மகன் விஜயகாந்த்  கோபமாக  சத்தம்  போட்டு கொண்டு இருந்தது காதில் கேட்டது..அப்படியே ஒளிந்துநின்று தன்  மகனும், மனைவியும்  பேசுவதை கேட்கலானார்....

....500000லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான்  எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்றால்  அந்த வேலை எனக்கு வேண்டாம்மா ....500000 லட்சம் அல்ல 500 ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க நான் தயாரில்லை....லஞ்சம் கொடுப்பதும், லஞ்சம் வாங்குவதும் என்னை பொறுத்தவரை மலத்தை தின்று  உயிர் வாழ்வது போன்றுதான்....அதற்கு நான் தயாரில்லை....


கருணாநிதி தனது மொபைலை  எடுத்தார் கோபால  சாமிக்கு  போன்  போட்டு உன் மகனுக்கு வேலை உண்டு என சொல்வதற்காக!

இதுதான் எனது முதல் சிறு கதை.....நல்லா இருக்குன்னு  நீங்க சொன்னா தொடருவேன்....!

அப்புறம் இந்த கதையில் வரும் பெயர்களும்,கதாபாத்திரங்களும்  கற்பனையே..ஹி ஹி ....

11 கருத்துகள்:

  1. போட்டுத் தாக்குங்க... கதை தானே...

    தொடர்க...

    நன்றி...tm2

    பதிலளிநீக்கு
  2. அடப்பாவி.. ஒரு சிறுகதைக்கு இப்படி ஒரு தலைப்பா?, சிறுகதை நல்லாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. ஆமா...அந்த நவீன அரிசி ஆலை சமீபத்தில் இடிக்கப்பட்ட நேருவின் ஆலையில்லையே?

    பதிலளிநீக்கு
  4. நான், ‘நம்பர் 1’ புனைகதை விமர்சகன் [!!!] அறுவை மருத்துவன் சொல்லிட்டேன்: “தொடர்ந்து கதை எழுதுங்க.

    எழுத எழுதத்தான் நல்ல நல்ல கதை பிறக்கும்.

    பதிலளிநீக்கு
  5. தலைப்பு வைப்பதில் தேறிட்டீங்க!நடக்கட்டும்!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....