30 அக்டோபர் 2012

ஏன் ரத்து செய்யப்பட்டது மதுவிலக்கு??...ஒரு பிளாஷ்பேக்...!


தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்  என்ற கோரிக்கைகள் இப்போது வலுவடைந்து வருகின்றன....இந்தியாவிலே ஏன் உலகத்திலே தனது குடிமக்களுக்கு "குடிப்பதற்காக "கடை நடத்தும் ஒரே அரசு நமது தமிழக  அரசாகத்தான் இருக்க முடியும்...

ஆனால் இதே  தமிழகத்தில் மதுவிலக்கு முன்பொரு காலத்தில்  அமுலில் இருந்தது....மீண்டும் மதுவிலக்கை ரத்து  செய்து மக்களை குடிக்கு அடிமை ஆக்கிய அந்த வரலாற்று பெருமையை யார் செய்தது தெரியுமா?ஒரு சின்ன பிளாஷ்பேக் ........

30.08.1971 முன்பு வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு  அமுலில் இருந்தது....அப்போது .மதுவிலக்கை புதிதாக அமுல் நடத்தும் மாநிலங்களுக்கு, நஷ்ட ஈடாக உதவிப்பணம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டம் வருவதற்கு முன்பே, தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மதுவிலக்கு அமுலில் இருந்தது.

தமிழ்நாட்டுக்கும் உதவிப்பணம் கொடுங்கள்" என்று மத்திய அரசிடம் அன்றைய முதல்வர்  கருணாநிதி கோரினார். ஆனால் அதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது. "மதுவிலக்கை புதிதாக அமுல் நடத்தும் மாநிலங்களுக்கே உதவிப்பணம் தரமுடியும்" என்று கூறியது. இதன் காரணமாக, மதுவிலக்கை ரத்து செய்ய கருணாநிதி முடிவு செய்தார்

.
தமிழக அரசின் 1971/72 ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை கருணாநிதி தாக்கல் செய்தபோது, 30.8.1971 முதல், தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். அவர் பேசுகையில், "மதுவிலக்கை இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார்.


ஆனால் அவருடைய தானைத் தளபதிகளாக விளங்கும் முதல் அமைச்சர்களாலும், மத்திய அரசை நடத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் மதுவிலக்குக் கொள்கை புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாளுக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?" என்றார்.

தமிழ்நாட்டில் முதன் முதலாக மதுவிலக்கை அமுல் நடத்தியவரான ராஜாஜி, முதல் அமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்குச்சென்று "மது விலக்கை ரத்து செய்ய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார். காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். "தமிழக அரசின் நிதி நிலை காரணமாகவே மதுவிலக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
நிலைமை சீரானதும் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவரப்படும்" என்று கருணாநிதி பதில் அளித்தார். (அதுபோலவே 1973 ல் மீண்டும் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது) மதுவிலக்கை ரத்து செய்வதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தலைவர்கள் அறிக்கைகள் விட்டனர். எனினும் இதில் அரசு உறுதியாக இருந்தது. அறிவிக்கப்பட்டபடி, 30.8.1971 அன்று மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. 

தமிழ்நாடு முழுவதும்7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 

அப்போது கருணாநிதி மதுவிலக்கை ரத்து  செய்தார்..பின்பு அது பரிணாம வளர்ச்சி பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியில்(2001-2006)அரசே ஏற்று நடத்தும் அளவுக்கு வந்தது...பின்பு ஆட்சிக்கு வந்த கருணாநிதியும்  அரசாங்கத்திற்கு  வருமானத்தை அள்ளி தந்த டாஸ்மாக்குக்கு பாஸ்மார்க் போட்டு அதை  கைவிட தயாராக இல்லை...

அது இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது...!மக்கள்"குடி"மக்களாக இருப்பதையே ஆள்பவர்கள் விரும்புகிறார்கள்..!அப்போதுதானே அவர்கள் தவறு செய்துகொண்டே இருக்கலாம்!!

1 கருத்து:

  1. தனக்கு கமிசன் கிடைப்பதற்காகவே மதுவிலக்கை ரத்து செய்து இருப்பார் கருணாநிதி....அதற்கு அப்படி ஒரு காரணம் வேறு...கிட்டத்தட்ட 40 வருடங்களாக மக்களை குடிக்கு அடிமை ஆக்கிய பெருமை அன்றிலிருந்து இன்று வரை இருக்கும் ஆட்சியாளர்களையே சேரும்....

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....