13 அக்டோபர் 2012

மாற்றான்- தோற்றான்



சூர்யாவுக்கு  தொட்டதெல்லாம்  பொன்னான  காலம் போயி இப்ப  தொட்டதெல்லாம் புண்ணாகி இருக்கிறது....

பொதுவாக ஒரு படம் வெற்றி படமாக கொடுத்தவர்கள் மீண்டும் இணையும்போது அவர்களின்  அடுத்த படம் தோல்வியில்தான் முடியும் என்பது சினிமாவின் கட்டாயம் போல ....அந்த வரிசையில் இந்த மாற்றானும்  சேர்ந்து இருக்கிறது....


கதைன்னு பார்த்தால் தவறு செய்தவன் தந்தையே ஆனாலும் அவனை ஹீரோ வெளி உலகிற்கு காட்டி கொடுத்து தண்டனை கொடுக்கும்  MGR  காலத்து கதைதான்....அதில் ஒட்டி பிறந்த இரட்டையர் ,மரபணு மாற்றம் என  சயின்ஸ்  மசாலா தடவி கொடுத்து இருகிறார்கள்....

சூர்யாவின் தந்தை மரபணுக்களை மாற்றம் செய்து அதிவிரைவில் ஊட்டமளிக்கும் உணவுபொருட்களை தயார் செய்யும் நம்பர் 1 பிசினஸ் மேன் வில்லன்  .........அதனால் ஏற்படும் தீமைகளை கண்டறிந்து சூர்யா தந்தையை வெளி உலகிற்கு காட்டிகொடுத்து தண்டனை அளிப்பதே நீளமான மாற்றானின் குள்ளமான கதை .......


ஒருவர் மீசையுடனும்,ஒருவர் மீசை இல்லாமலும் வந்து நாங்கதான் ஒட்டி பிறந்த இரட்டையர்  என நம்ப வைக்கின்றனர் ஆனால் கிராபிக்ஸ் கை கொடுக்கவில்லை .....வழக்கம்போல சூர்யா மின்னுகிறார்..ஆனால் டிவி  விளம்பரங்கள்,மற்றும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என நிகழ்சிகளில் அடிக்கடி பார்த்ததால்  சலித்துபோய்  பெரிதாக ஈர்க்க மறுக்கிறார்.....


காஜல் அகர்வால் தமிழ் பட விதிமுறைகளின் படி ஹீரோவை காதலிக்கிறார்,டூயட் பாடுகிறார்,ரஷ்ய மொழியை  மொழி பெயர்க்கிறேன் என கழுத்தையும் அறுக்கிறார்.....பேசாமல் ரஷ்ய மொழியில் மற்றவர்கள் பேசும்போது கீழயே  தமிழில்  எழுதி இருக்கலாம்..அதை விட்டு விட்டு காஜலை   மொழி பெயர்க்க வைத்து நம்மை  குழம்ப வைக்கின்றனர்....

முதல் பாதியிலயே சூர்யாவின் தந்தைதான் வில்லன் என தெரிந்துவிடுகிறதே....!பின்பு எப்படி கதையில் ஈர்ர்ப்பு வரும் என இயக்குனர் கொஞ்சமாச்சும் யோசித்து திரைக்கதை அமைத்து இருக்கலாம்.....அப்புறம் உக்ரைன்(அப்பிடின்னுதான்  நினைக்கிறேன்) நாட்டிற்கு சூர்யா செல்வதும் ,அதை தொடர்ந்து வரும் காட்சிகளின் நீளமும்  மின்சாரம் இல்லாவிட்டாலும் பரவா இல்லை ,எப்படா வீட்டிற்கு  செல்வோம் என நம்மை நினைக்க வைக்கிறது.....

சூர்யா  எல்லா உண்மைகளையும் கண்டறிந்த பின்பாவது படத்தை முடித்து இருக்கலாம்...அதை விட்டுவிட்டு வில்லனை குஜராத்தில் ஓட விட்டு மக்களை துரத்த வைத்து ஹீரோ வசனம் பேசி...அப்பப்பா  நம்மை தியட்டரை விட்டே ஓட வைக்கிறார்கள்.....

இயக்குனருக்கு ஒரு சொட்டு: மரபணு மாற்றம் போன்ற  இயற்கைக்கு முரணான   முறைகளில் சிந்தித்ததால்  ஏற்படும் விளைவுகளை  திரையில் காட்டிய  கதை அமைப்புக்கு...

ஒரு குட்டு:  பீகார் வாசிகளை கூலிக்கு கொலை செய்பவர்களாக காட்டியதற்கு(வட  நாட்டுக்காரர்களை  ஏன்யா அந்த கண்ணோட்டத்திலே பார்க்கிறீர்கள்?)

பிளஸ்: முதல் பாதியில் கொஞ்சம் ரசிக்க வைக்கும் சூர்யாவின் நடிப்பு

மைனஸ்: நீளமான இரண்டாம் பாதியும்,சொதப்பலான  திரைக்கதையும்

எனக்கு மற்ற விமர்சகர்களை போல   நுணுக்கமாக  விமர்சனம் எழுதி பழக்கமில்லை..... இந்த படம்   வெற்றி படம் ,நல்ல படம் என எனக்கு தோன்றவில்லை...மற்றவர்களுக்கு அவர்களின் ரசனையை பொருத்தது அது....

மாற்றான் -  தோற்றான்


6 கருத்துகள்:

  1. சும்மா நச்சுனு இருக்கு விமர்சனம்....படம் பார்க்கும் திட்டத்தை கைவிட்டு விட்டேன்...நன்றி

    பதிலளிநீக்கு
  2. என்ன இப்படி சொல்லிட்டீங்க...!

    பார்க்கலாம் என்று இருந்தேன்...

    பதிலளிநீக்கு
  3. நான் சினிமா பார்ப்பதில்லை. ஆனால், உங்கள் சினிமா விமர்சனத்தை விரும்பிப் படித்தேன்.

    நுணுக்கமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....