12 நவம்பர் 2010

விஜய்க்கு ஆஸ்கார் வேணுமாம்: கவுண்டமணி....


கவுண்டமணி: வாப்பா கிண்ணி கோழி மண்டையா நல்லா இருக்கியா?


விஜய்: நான் நல்லா இல்லைங்கண்ணா....


க.மணி: அதான் தெரியுமே சிம்கார்ட் தலையா......ஊதி போன பலூன் மாதிரி இருக்கிற உன் மூஞ்சிய கேக்கல நான்....சும்மா நல்லா இருக்கியான்னு நலம் தான் விசாரிச்சேன்......


விஜய்: கிண்டல் பண்ணாதிங்க அண்ணே...நான் நடிச்ச படம்லாம் ஓடலன்னு நானே கவலைல இருக்கேன்....நீங்க வேற....


க.மணி: அட போண்டா வாயா.....நீ எல்லாம் படத்துல பண்றதுக்கு பேரு நடிப்புனு நெனச்சிக்கிட்டு இருக்கியா ? கலிகாலம்டா கடவுளே......


விஜய்: சும்மா போங்கண்ணே.....நான் எவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கிறேன்.....அதுக்குலாம் ஆஸ்கார் அவார்டே குடுக்கலாம்......


க.மணி: அட தேங்கா தலையா......ஆஸ்கார் என்ன இப்ப புதுசா வந்த கார் மாடல்னு நெனச்சு கிட்டு இருக்கியா?பாருங்க பாவப்பட்ட ரசிகர்களே இவருக்கு ஆஸ்கார் வேணுமாம்......


விஜய்: நீங்க வேணும்னா பாருங்க அண்ணே....நா ஒருநாள் அத வாங்கி காட்டுறேன்....


க.மணி: ஆமா ஆமா ..இந்த உலகத்திலே யாருமே நடிக்காம நீ மட்டும் நடிச்சாலும் உனக்கு அத குடுக்க மாட்டாங்கடா ....குண்டூசி வாயா........


விஜய்: அடுத்த படம் நல்லா ஓடுறதுக்கு ஒரு நல்லா ஐடியா குடுங்கன்னா ....


க.மணி: அடுத்து ராம.நாராயணன் படத்துல நடி ...படம் நல்லா ஓடும்.....


விஜய்: அட போங்கண்ணே...அவரு படத்துல எல்லாம் மிருகங்கள்தான் நடிக்கும்...


க.மணி: அதுக்கு தாண்டா உன்னைய போயி நடிக்க சொன்னேன்....ஆப்ப தலையா...


விஜய்: என்னைய கிண்டல் பண்றதே உங்களுக்கு வேலையா போச்சு அண்ணே....


க.மணி: ஆமா நீ அரசியலுக்கு வர போறதா டகால்டி வேலை காட்டுனியே அது என்ன ஆச்சு.....


விஜய்: அதுலாம் சும்மா ஒரு பப்ளிசிட்டி அண்ணே....அடுத்த படம் வெளியாகும்போது அரசியலுக்கு வந்தாலும் வருவேன்னு ஒரு அறிக்கை விட்டா போதும்....நம்ம ரசிக கூட்டமெல்லாம் அலை போல திரண்டு படம் பார்க்க வருவாங்க இல்ல.......


க.மணி: அட சுண்ணாம்பு வாயா......இதுதான் நீங்க அரசியலுக்கு வர லட்சணமா....


உங்கள எல்லாம் நிக்க வச்சு நெருப்புல அபிசேகம் பண்ணனும்டா.....உன்னோட பேசிகிட்டு இருந்தா நானும் அரசியலுக்கு வருவேன்னு அறிக்கை விட்டாலும் விடுவேன்....ஆளை விடுடா அடுப்பு வாயா......எஸ்கேப் டா.....

8 கருத்துகள்:

 1. கிண்ணி கோழி மண்டையா//ஆஹா அருமையான பட்ட பெயர்

  பதிலளிநீக்கு
 2. திட்டுவாங்கன்னு பயமா எதுக்கு இந்த கமெண்ட் மாடுரெசன்?

  பதிலளிநீக்கு
 3. நன்றி சதிஷ்குமார்.....உங்கள் கருத்துக்கு....
  பயம்லாம் இல்ல....சில பேரு வரம்பு மீறிய வார்த்தைகளை உபயோகிப்பதால் இந்த முன்னெச்சரிக்கை....

  பதிலளிநீக்கு
 4. க.மணி: ஆமா ஆமா ..இந்த உலகத்திலே யாருமே நடிக்காம நீ மட்டும் நடிச்சாலும் உனக்கு அத குடுக்க மாட்டாங்கடா ....குண்டூசி வாயா........////சிரிப்ப அடக்க முடியலப்பா....சூப்பர்

  பதிலளிநீக்கு
 5. எவ்வளவு நாள் பாஸ் அந்த புள்ளப்பூச்சியை அடிக்கிறது... பாருங்க இன்ட்லியில் கூட நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை... இனி வேற யாரையாவது கலாய்ப்போம்...

  பதிலளிநீக்கு
 6. நேரமுங்கோய்,,,,,நேரமுங்கோய்,,,,நேரமுங்கோய்./

  பதிலளிநீக்கு
 7. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பர்களே........

  பதிலளிநீக்கு
 8. hahahahahah superbbbbbbbbbbb, actually indha week end ellarum kaavalan film pogalam nu en thambi sonnan but my mother said na sondha kaasula sooniyam vechika virumabala nu, en inoru thambi sonnan namma veetu tinku (pet dog) kuda time spend pannalam nu irukren indha week end na varala nu.. na nenaichen vijay movies n acting ku enga veetla than ipdi comment varudhu nu.. but makkal ellarume apdi than nondhu poirukranga nu indha post padichadhum therinchikten.. romba nalla iruku anna.... enjoyed while reading... :) :) :) :)

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....