22 நவம்பர் 2010

வாழ்க்கை இவ்ளோ இன்பமா???????

நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமானது......எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் சில இன்பங்கள் போதும் நாம் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவதற்கு.......

மருத்துவமனை பல பேருக்கு துன்பத்தையும் பல பேருக்கு இன்பத்தையும் ஒரே நேரத்தில் தரக்கூடியது.....இதில் துன்பங்கள் பலவித நோய்களினால் அவதிப்படும் நோயாளிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் ஏற்படக்கூடியது...


ஆனால் இன்பம்????.....


உறவினர்கள் படைசூழ நாம் ஒரு இக்கட்டான நிலைமையில் ஆபரேஷன் தியேட்டரில் பதட்டத்துடனும், அதே சமயம் ஆவலுடனும் நிற்போம்.....


மயக்க டாக்டர் உள்ளே போகிறார்.....அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் உள்ளே போகிறார்....


அந்த நேரத்தில் நாம் அனைவரும் பிரார்த்தனையில் இருப்போம்......


சிறுது நேரத்தில் நர்சு வெளியே வருவார்......நாம் அனைவரும் அவரிடத்தில் ஒரே விதமான கேள்வியை கேட்போம்...அவர் பதில் கூறியவுடன் அங்கு நிற்கும் அனைவரும் அடையும் சந்தோசத்துக்கு அளவே இல்லை.....


அனைவரும் கேட்ட கேள்விக்கு நர்சு சொன்ன பதில் இதுதான்.....


குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது............


இதை நாம் அனைவரும் வாழ்கையில் அனுபவித்து இருப்போம்.....அனுபவிக்காதவர்கள் இனி அனுபவிக்க போகிறார்கள்......


ஆம் அந்த அளவில்லா ஆனந்தத்தை நானும் அனுபவித்தேன்......நான்கு நாட்களுக்கு முன்பு எனக்கு ( தப்பு தப்பு ,என் மனைவிக்கு ) குழந்தை பிறத்தது.....


வாழ்கையில் அடுத்த கட்ட நகர்வை நான் இப்போது சந்தித்து உள்ளேன்......


இந்த உலகத்தில் குழந்தை செல்வம்தான் ஈடற்ற ,மாசற்ற சந்தோசம்......

5 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் அங்கிள்... போட்டோவை பார்த்த சின்ன பையன் போல தெரிந்தது... இப்போ தானே உண்மை தெரியுது...

  Male or Female...?

  பதிலளிநீக்கு
 2. நன்றி பிரபாகரன், ஹரிஸ்...
  ஆண்குழந்தை பிறந்துள்ளது...........
  அப்புறம் நான் அங்கிள் எல்லாம் இல்லை.....
  im just 27 years only.....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....