16 ஆகஸ்ட் 2012

ஆண்களே ...பிரசவத்தை நேரில் பாருங்கள்...தாய்மையின் மகத்துவத்தை உணருங்கள்...!


பிரசவம் என்றால் அது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்று சொல்வார்கள்....அது எவ்வளவு உண்மை என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

நம் தாய் நம்மை எவ்வளவு வலி வேதனைகளை பொறுத்துக்கொண்டு பெற்றெடுத்தாள் என புரிந்து கொள்ள வேண்டுமா?

நம் மனைவி நமது வாரிசை பெற்றெடுக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறாள் என அறிந்து கொள்ள வேண்டுமா?

இவற்றை எல்லாம் வெறும் வார்த்தைகளினால் சொன்னால் புரியாது....நம்மை பெற்றெடுத்த தாயின் அருமையை, நம் வாரிசை பெற்றெடுத்த மனைவியின் அருமையை வெறும் வார்த்தைகளினால் அளவிடுவதும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை முழுதாக எண்ணுவதும் ஒன்றுதான்..!


நமது நாட்டில் பிரசவம் என்றால் அது சுக பிரசவம் என்றாலும் சரி,சிசேரியன் ஆனாலும் சரி நாம் யாரும் பிரசவம் நடக்கும் அறையினுல் எட்டி கூட பார்க்க முடியாது...சும்மா வெறுமனே கையை கட்டிக்கொண்டு வெளியே நிற்போம்...சிறிது நேரம் கழித்து ஒரு நர்ஸ் வந்து உங்களுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று சொல்வார்...நாம் ஆனந்தம் அடைவோம்..அதோடு சரி...

ஆனால் மலேசியாவில் சுகபிரசவம் என்றாலும்,சிசேரியன் என்றாலும் அந்த பெண்ணின் கணவன் உடன் இருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது...கிட்டத்தட்ட கட்டாயம் என்று கூட சொல்லலாம்...அப்போது அப்பெண் படும் வேதனையை கண்ணால் கண்ட அவள் கணவன் பின் எப்போது அவளை மறக்கவோ,வெறுக்கவோ முடியும்....

பிரசவத்தின் பொது ஒரு பெண் அடையும் வேதனையை உடனிருந்து பார்க்கும் ஒருவன் பின் எப்படி தன் தாயை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட முடியும்?

அதனால்தான் மலேசியாவில் பிரசவத்தின்போது கணவன் கூட இருப்பது கட்டாயம்...அது போல நம் நாட்டில் அனுமதித்தால் நிச்சயம் விவாகரத்துகளும், முதியோர் இல்லங்களும் குறையும்...

சென்ற வாரம் என் மனைவிக்கு மலேசியாவில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது....அப்போது என் மனைவியுடன் நான் உடனிருந்தேன்...என் குழந்தையை டாக்டர் வெளியே எடுக்கும்போது நான் பார்த்த அந்த உணர்வை விவரிக்க வார்த்தை இல்லை...


நம் நாட்டில் இதுபோன்ற ஒரு சூழ்நிலைகளை மருத்துவமனைகள் உருவாக்க வேண்டும்....ஆனால் அது சாத்தியமா ?!

தெரியவில்லை..................நமது பணத்தில் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் நம்மை வெளியே நிற்க சொல்வது முரண்பாடாக இல்லை...!

பிரசவத்தை நேரில் பார்க்கும் எந்த ஆணுக்கும் நிச்சயம் தன் தாயின் மீதும்,மனைவியின் மீதும் மதிப்பும் பரிவும் கூடுவது ஆயிரம் சதவீதம் உண்மை என்றால் அது மிகையல்ல....


5 கருத்துகள்:

 1. /// பிரசவத்தின் பொது ஒரு பெண் அடையும் வேதனையை உடனிருந்து பார்க்கும் ஒருவன் பின் எப்படி தன் தாயை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட முடியும் ? ///

  சிறப்பான கருத்து... 25 வருடங்களுக்கு முன் என் மேலதிகாரி, ( வேறு ஒரு விசயத்தில் ) திருந்தியதும் உண்டு...

  அருமையாக முடித்துள்ளதும் சிறப்பு...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

  பதிலளிநீக்கு
 2. சரியாக சொன்னீர்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. //பிரசவத்தை நேரில் பார்க்கும் எந்த ஆணுக்கும் நிச்சயம் தன் தாயின் மீதும்,மனைவியின் மீதும் மதிப்பும் பரிவும் கூடுவது ஆயிரம் சதவீதம் உண்மை என்றால் அது மிகையல்ல....//

  கண்டிப்பாக...நன்றி நண்பா..

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....