05 ஆகஸ்ட் 2012

புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட சில எளிய வழிகள்


புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எல்லாருக்கும் அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்....ஆனால் நிறுத்த முடியாமல் தவிப்பார்கள் ...சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை மறக்க அல்லது அந்த உணர்வை மாற்ற சில எளிய வழிகள் உள்ளன..

சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையைக் கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.ஆனால் இந்த சிகரெட் நம்நாட்டில் பரவலாக நடைமுறைக்கு வரவில்லை ...

சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மெல்லலாம். அதற்காக அதிக நேரம் மென்றாலும் உடலுக்கு ஆபத்தானது. ஆகவே இனிப்பு குறைவாக இருக்கும் புதினா சுவையாலான சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மென்றால், சிறிது சுயக்கட்டுப்பாடானது மனதில் இருக்கும்.

புதினாவானது உடலுக்கு மிகவும் நல்லது. ஆகவே அவ்வாறு சூயிங்கம் போடும் போது, இந்த புதினா ஃப்ளேவரான சூயிங்கம் அல்லது சாக்லேட்டை சாப்பிடலாம்.

டார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு, வயிறு முழுவதும் உண்டுவிடுவர். மேலும் அந்த சாக்லேடில் உள்ள கோக்கோவானது, அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச் செய்துவிடும்.

நிறைய பேர் மிகவும் பிடித்த டூத் பிக்கை மெல்லுவார்கள். இது மிகவும் ஆரோக்கியமானது. அந்த டூத் பிக்கானது மூங்கில் அல்லது பிர்ச் மரத்தில் இருந்து செய்யப்படுவது. இதனை நீண்ட நேரம் மெல்லுவதால் பற்களில் உள்ள அழுக்கானது போய்விடும். இந்த டூத் பிக்கானது நிறைய ஃப்ளேவரில் உள்ளது.

சோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த, ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு மிகவும் சிறந்தது.

எப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ, அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி.

நன்றி தட்ஸ்தமிழ்
நான் என்ன சொல்றேன்னா புகை பிடிப்பதற்கு முன்னாடி கேன்சரால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்துபோன ஒருவரை பற்றி ( அவர் உங்கள் உறவினராகவோ ,நண்பராகவோ ,தெரிந்தவராகவோ ,உங்கள் நண்பர்களுக்குதெரிந்தவர்களாகவோ இருக்கலாம்) நினையுங்கள்....சிகரெட் குடிக்கும் எண்ணம் மாறும்....நாளடைவில் விட்டு விடலாம்....முயற்சி செய்யுங்கள் நண்பர்களே...

5 கருத்துகள்:

  1. நான் என்ன சொல்றேன்னா புகை பிடிப்பதற்கு முன்னாடி கேன்சரால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்துபோன ஒருவரை பற்றி ( அவர் உங்கள் உறவினராகவோ ,நண்பராகவோ ,தெரிந்தவராகவோ ,உங்கள் நண்பர்களுக்குதெரிந்தவர்களாகவோ இருக்கலாம்) நினையுங்கள்....சிகரெட் குடிக்கும் எண்ணம் மாறும்....நாளடைவில் விட்டு விடலாம்....முயற்சி செய்யுங்கள் நண்பர்களே..//

    இதுதான் சரியான வழியாகப் படுகிறது
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. 21 நாட்கள் கட்டுப்படுத்தினால் எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் விட்டு விடலாம் நண்பரே... ஆனால் அதன் பிறகு அதனைப் பற்றி சிந்தனை கூட செய்யக்கூடாது.... எல்லாம் மனம் தான் காரணம்... (TM. 3)


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா6:25 PM, ஆகஸ்ட் 18, 2012

    I will to get over this bad habit. Your posting is inspirational.Thank you.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....