நடக்கவிருக்கும் சென்னை பதிவர் மாநாட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நானும் ஒரு பதிவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
அதே சமயம் இதில் கலந்துகொள்ள ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருந்தாலும் நான் மலேசியாவில் இருப்பதால் இயலாது என்பதால் சிறு வருத்தம் எனக்கு...
ஓகே....மேட்டருக்கு வருவோம்....
அடிக்கடி அங்கங்கே நடக்கும் பதிவர் சந்திப்புகள் இப்போது பதிவர் மாநாடாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பது பதிவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விசயமாகவே இருக்கும்...
இந்த பதிவர் மாநாட்டினால் இதுமாதிரி நன்மைகள் கிடைத்தால் நல்லது என ஒரு பதிவர் என்ற முறையில் எனக்கு நானே ஒரு பட்டியலிட்டுள்ளேன்...
பதிவர்களாகிய நம்மில் பெரும்பாலோர் பெரும்பாலும் சினிமாவை பற்றியும்,அரசியலை பற்றியும்தான் பதிவிடுகிறார்கள்...சினிமா விமர்சனங்களை பதிவிடும் பதிவர்கள் கவர்ச்சி படங்களை அதில் தவிர்த்தல் நன்மையாக இருக்கும் என்பது என் கருத்து ..அதை இந்த மாநாட்டில் வலியுறுத்தலாம்....
அரசியல்வாதிகளை ,சமுக அவலங்களை விமர்சனம் செய்யும் நாம் நம்முடைய பழக்கவழக்கங்களை பிறர் விமர்சனம் செய்யாத அளவுக்கு ஒரு முன்மாதிரியாக வைத்து இருக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துகொள்ளலாம்..(அதாவது யாருக்கும் எந்த விசயத்துக்காகவும் லஞ்சம் கொடுக்காமல்இருத்தல், சாலை விதிகளை மதித்தல், எல்லாவற்றிலும் உண்மையாக இருத்தல் போன்றவைகள்)
குடியை கெடுக்கும் "குடியை" ஒழித்திட,குடியை ஆதரித்து ஜாலிக்காக கூட பதிவு எழுதவோ பேசவோ வேண்டாம் என ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம் போடலாம்...
பத்திரிக்கைகள் மீது வழக்குகள் போடுவதை இப்போது ஜெயலலிதா ஒரு காலைகடனாக வைத்துள்ளார்..நாளடைவில் இது மாதிரி வழக்குகள் பதிவர்கள் மீதும் பாயலாம்...எனவே பதிவர்களுக்காக ஒரு அமைப்போ ,சங்கமோ உருவாக்கலாம்...
நாளடைவில் பதிவுலகம் மிகப்பெரிய ஆக்க சக்தியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை..எனவே புதிதாக வரும் பதிவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன் நாம் அறிந்த தெரிந்த எழுத்து திறமையும் ,பேச்சு திறமையும் கொண்ட மாணவர்களையும் பதிவுலகில் இணைத்திட முயற்சி செய்யலாம் என முடிவெடுக்கலாம்...
இறுதியாக பதிவுலகில் எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் ,சக பதிவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவிட வேண்டாம் என ஒரு தீர்மானமே போடலாம்...
என் மனதில் உள்ள இந்த கருத்துக்களை சென்னை பதிவர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி எனக்கு.!சென்னை பதிவர் சந்திப்பின் மூலம் இதெல்லாம் லாபமாக கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்...
சென்னை பதிவர் சந்திப்பு நோ நோ மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்...
Tweet |
வாழ்த்துக்கள் பதிவர் மாநாட்டிற்கு
பதிலளிநீக்குநன்றி
நீக்குThank you for your wishes Friend
பதிலளிநீக்குநன்றி
நீக்குநல்ல பல கருத்துக்கள்...
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள்...
நன்றி நண்பரே... (TM 4)
நன்றி நண்பரே..
நீக்குகுடியை கெடுக்கும் "குடியை" ஒழித்திட,
பதிலளிநீக்குகுடியை ஆதரித்து ஜாலிக்காக கூட பதிவு எழுதவோ பேசவோ வேண்டாம் என ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம் போடலாம்...
குடி போதையற்ற பதிவர்கள் & வாசகர்கள்... ஏராளமாக வந்திருந்து,
அரங்கம் நிறைந்து,
சென்னை பதிவர் மாநாடு... சீரும் சிறப்பாக நல்ல நோக்கத்தில் மக்கள் நலன் நாடும் பல ஆரோக்கியமான விஷயங்களுடன்,
குடி/சரக்கு பற்றிய வீண் வெட்டி அரட்டை இல்லாமல் இனிதே நடைபெறவேண்டும்.
என் எண்ணமும் அதுதான்....வருகைக்கு நன்றி
நீக்குஸலாம் சகோ.ஹாஜா...
பதிலளிநீக்குமிக அருமையான ஆக்கப்பூர்வமான கோரிக்கைகள்..!
டாப் டு பாட்டம்... வரிக்கு வரி எனது அமோக ஆதரவை தருகிறேன்..!
நன்றி சகோ..!
வஸ்ஸலாம் சகோ....எனது எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன்...நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி சகோ....
நீக்குஉங்கள் வாழ்த்துக்கும் கருத்துகளுக்கும் நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குமகிழ்ச்சி தோழரே..
பதிலளிநீக்குநன்றி தோழரே...
நீக்குஇன்னும் சமூகம் சார்ந்த விசயங்கள் நிறைய இருக்கு தல... அதப்பத்தியும் பேசலாம்...
பதிலளிநீக்குதிருப்பூரை சேர்ந்த நல்ல மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு படிப்பு செலவிற்கு கோவை பதிவர் குழுமம் சார்பாக உதவி செய்ய இருக்கிறோம்... அது போல் அனைவரும் அவர் அவர் ஊரில் நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து படிக்க வைக்கலாம்... இதைப்பற்றி சந்திப்பில் நான் பேச இருக்கேன்...
நல்லது நண்பா...நல்லது எது நடந்தாலும் சந்தோசமே....நன்றி
நீக்குஆக்கப்பூர்வமான யோசனை
பதிலளிநீக்குநிச்சயம் பரிசீலிப்பார்கள்
பகிர்வுக்கு நன்றி
நல்ல ஆலோசனைகள்.. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்! வலைப் பதிவுகளின் சிறப்பே கருத்து சுதந்திரம்தான், ஆனால் அதை பயன்படுத்தும் விதத்தில் முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து & அவா!!
பதிலளிநீக்கு