07 ஆகஸ்ட் 2012

இவங்கெல்லாம் முதல்வரானால்.......ஒரு சீரியஸ் பதிவு


இன்னும் எவ்வளவு வருடத்துக்குத்தான் ஜெயலலிதாவையும்,கருணாநிதியையும் தமிழக முதல்வராக பார்ப்பது....ஒரு மாற்றத்துக்கு இவர்களையும் முதல்வர் ஆக்கி அவர்கள் அவர்கள் போடும் முதல் ஆணை என்னவாக இருக்கும்..லேசாக சிந்தித்து பார்த்ததன் விளைவே இதுவிஜயகாந்த்: தமிழ்நாடு என்ற பெயர் சுத்த தமிழில் "டமில் நாடு "என்று மாற்றி அமைக்கப்படும்...சட்டசபையில் நாக்கு துருத்தி பேசுவதும், எம் எல் ஏக்களை அடிப்பதும் தவறில்லை என சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்...ராமதாஸ்: தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு வன்னிய நாடு எனவும், வன்னியரல்லாத நாடு எனவும் பெயர் சூட்டப்படும்...நடிகர்,நடிகைகள் நாடு கடத்தப்படுவார்கள்...திருமாவளவன் : ஆணின் திருமண வயது ஐம்பது என ஆணையிடுவேன்....சீமான் : தமிழ் மொழியை தவிர பிற மொழிகள் தமிழ்நாட்டில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தடை செய்யப்படும்....சரத்குமார்: என்னை மாதிரி ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் மட்டுமே முதல்வராக இருக்க முடியும் என சட்ட திருத்தம் பண்ணி ஆணையிடுவேன்.....தங்கபாலு,இளங்கோவன் (காங்கிரஸ் வகையிராக்கள்): என்னது நான் முதல்வரா? கொஞ்ச நேரம் இருங்க அன்னை சோனியாவிடம் கேட்டு சொல்கிறேன்....வைகோ: கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்வது நாட்டு மக்களுக்கு கடமை ஆக்கப்படும்...மேடைபேச்சில் உணர்ச்சிவசத்தால் அழுவது எப்படி என்ற பாடத்திட்டம் பள்ளிகளில் கொண்டு வரப்படும்
டி ராஜேந்தர்: தாடி வளர்ப்பது கட்டாயமாக்கப்படும் ....அடுக்கு மொழியில் பேசுவது எப்படி என்ற பாடத்திட்டம் பள்ளிகளில் கொண்டுவரப்படும்ரஜினியை விடக்கூடாதுல....ரஜினி: தமிழ் நாடு மக்கள் அனைவரும் இமயமலைக்கு சென்று பாபா ஜியை தரிசித்துவிட்டு வருவதற்கு இலவச பயண ஏற்பாடுகள் செய்து ஆணையிடுவேன்......

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

நித்யானந்தா : தமிழ்நாட்டின் பெயர் நித்ய நாடு என மாற்றப்படும்....அனைத்து ஆசிரமங்களும் அரசுடமை ஆக்கப்படும்....தலைமை செயலகம் முதல் தாலுக்கா ஆபிஸ் வரை எங்கும் எதிலும் எனது பக்தைகளே வேலையில் இருப்பார்கள்...துணை முதல்வராக ரஞ்சிதாவும் மாதம் ஒருமுறை சுழற்சி முறையில் இதர பக்தைகளும் பதவி வகிப்பார்கள்...

17 கருத்துகள்:

 1. ஹ ஹ ஹா ... நித்தியை எப்படி மறக்கலாம்... பக்த்தர்கள் கோபம்

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ...ஆமாம்..வருகைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. அவங்க அவங்க ஸ்டையில் கண்டிப்பா இப்படிதான் இருப்பாங்க போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படிதான் இருப்பார்கள்...ஒரு கற்பனைதான்...நன்றி

   நீக்கு
 5. பதில்கள்
  1. மிக்க நன்றி..ரசித்ததற்கும்,கருத்துரைக்கும்...

   நீக்கு
 6. ஹா... ஹா.... ரசித்தேன்...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)

  பதிலளிநீக்கு
 7. அருமையான கற்பனை
  அருமையான நையாண்டி
  ரசித்துச் சிரித்தோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்து படித்து அழகா கருத்து சொல்லி ஓட்டும் போட்டதற்கு நன்றி....

   நீக்கு
 8. நித்ய நாடு கலக்கல் கற்பனை

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....