29 ஆகஸ்ட் 2012

பதிவர் சந்திப்பில் பி கே பி சாரின் உரையும் எனது பதிவும் ...அடடா ஒரு !

 பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத  குறையை அன்றைய நேரடி  ஒளிபரப்பும் ,அதை தொடர்ந்து வந்த, வந்து கொண்டு இருக்கும் நண்பர்களின் பதிவும் போக்கி   கொண்டு இருக்கிறது....

பதிவர் சந்திப்பில் சிறப்புரை ஆற்றிய எழுத்துலக சக்கரவர்த்தி பி கே பி சாரின் உரையும்  பதிவர் சந்திப்புக்கு முன்னாடி நான் எழுதிய பதிவும் ஒரே நேர்கோட்டில் அமைந்து இருந்தது (அதாங்க சினிமா பாணியில் வேவ்ஸ் என்பார்களே ) எனக்கு ஆச்சர்யம்....!! அண்ணன் "வீடு திரும்பல்"மோகன் குமாரின் பதிவில் பி கே பி பேசியதாக  நான் படித்ததையும்  எனது பதிவில் நான் எழுதியதையும் பதிவிட்டுள்ளேன்...

 பி கே பி சார் பேசியது..

வலைப்பதிவர்கள் உங்கள் அனுபவத்தை எழுதுவதுடன் இன்னும் பலரை எழுத வைக்க வேண்டும். நாம் பேப்பர்லெஸ் சொசைட்டி நோக்கி செல்கிறோம். வருங்காலத்தில் வலைப்பூக்கள் உலகை ஆளும். எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !

 இது நான் சொன்னது...(

சென்னை பதிவர் சந்திப்பினால் என்ன லாபம்?!(http://nkshajamydeen.blogspot.com/2012/08/blog-post_23.html)



 நாளடைவில் பதிவுலகம் மிகப்பெரிய ஆக்க சக்தியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை..எனவே புதிதாக வரும் பதிவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன் நாம் அறிந்த தெரிந்த எழுத்து திறமையும் ,பேச்சு திறமையும் கொண்ட மாணவர்களையும் பதிவுலகில் இணைத்திட முயற்சி செய்யலாம் என முடிவெடுக்கலாம்...

இது சார் சொன்னது...

Unparliamentary வார்த்தைகள்/ விஷயங்கள் எழுதினால் பெண்களால் எப்படி வாசிக்க முடியும்? அப்படி நீங்கள் தொடர்ந்து எழுதினால் உங்களை பலரும் புறக்கணித்து விடுவார்கள். ஒரு மீட்டிங்கில் உங்களை பார்த்தால் உங்களை வந்து சந்தித்து பேசணும். இவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது என போகும் அளவில் இருக்க கூடாது !


இது நான் எழுதியது....


சினிமா விமர்சனங்களை பதிவிடும் பதிவர்கள் கவர்ச்சி படங்களை அதில் தவிர்த்தல் நன்மையாக இருக்கும் என்பது என் கருத்து ..அதை இந்த மாநாட்டில் வலியுறுத்தலாம்....

இதுவும் சார் சொன்னது.....

 சில ப்ளாகுகளில் பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் நடப்பதை பார்க்கிறேன். ஒருவனின் எழுத்தை மட்டும் பாருங்கள். விமர்சியுங்கள் அவன் வாழ்க்கையையும், அவனையும் விமர்சிக்காதீர்கள்.


இதுவும் நான் எழுதியது....

 இறுதியாக பதிவுலகில் எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் ,சக பதிவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவிட வேண்டாம் என ஒரு தீர்மானமே போடலாம்...

இதற்கு  பெயர்தான் டெலிபதியோ!

இறுதி டச் :பி  கே பி  சாரின்  பேச்சோடு  எனது கருத்துக்களும்  ஒத்து இருந்ததை குறிப்பிடவே இந்த பதிவு...



4 கருத்துகள்:

  1. இதுலையும் ஒரு விளையாட்டா...!

    நடத்துங்க...

    பதிலளிநீக்கு
  2. ஸலாம் சகோ.ஹாஜா,
    PKB சாரின் பேச்சை நானும் பார்த்தேன். மிக நல்ல நடுநிலையான கருத்துக்கள்..! Hats off..!
    ஆனால், அதே கருத்தை ஒரு 'Pபட்டுக்Kகோட்டை Bபாய்' சொல்லி இருந்திருந்தால்... என்ன ஆகி இருக்கும்..? பதிவர் சந்திப்பில் ரணகளம் நடந்திருக்கும்..! உங்களுக்கு மைனஸ் குத்தியவர்கள் அங்கே அவரின் மூக்கிலேயே குத்தி இருப்பார்கள்..! நல்லவேளை பிரபாகர் முஸ்லிம் இல்லை. அவர் சொன்னதெல்லாம் 'வேறு யாருக்கோ' (?!) என்று நினைத்து... அவரை ஒன்றும் செய்யவில்லை..! :-)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஸ்ஸலாம் சகோ...

      ஆம்...பேர் மட்டும்தான் வித்தியாசம் தேவைப்படுகிறது இங்கே...இல்லையென்றால் நீங்கள் சொல்வது மாதிரிதான்...

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....