01 ஆகஸ்ட் 2012

காவல் துறையா?கற்பழிப்பு துறையா?....ஜெ வுக்கு இதுவும் கூட பெருமையோ?


கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னதாக இப்போதைய எதிர்க்கட்சி தலைவர்!விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் காவல் நிலையத்தில் வைத்து ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணை கற்பழிக்க முயல்வார்...அப்போது விஜயகாந்த் வந்து காப்பாற்றுவார்....

படத்தில் மட்டுமல்ல வருடங்கள் ஓடினாலும் அதே போலீஸ் நிஜத்திலும் இன்னும் கற்பழிப்புகளை நிறுத்தவில்லை....வெகு ஜோராக நடத்தி கொண்டு இருக்கிறது....

சில மாதங்களுக்கு முன்பு இருளர் இன பெண்கள் நான்கு பேரை காவல் துறையினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது....ஆனால் அந்த அதிகாரிகளை கைது செய்யாமல் இடைகால பணி நீக்கம் மட்டும் செய்தது "அம்மா " அரசு..இப்போது அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை...

ரீசன்டா பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணை கடமலைகுண்டு இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் ,சிறப்பு உதவி ஆய்வாளர் அமுதன் ஆகியோர் விசாரிக்க வேண்டும் என காவல் நிலையத்துக்கு கூட்டி சென்று சீரழித்து உள்ளனர்...இது பற்றிய செய்தி ஜூனியர் விகடனில் வந்து இருக்கிறது....

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் மேலே திருட்டு வழக்கு போட்டு உள்ளே தள்ளியது அந்த காம மிருகங்கள்....இப்போது மதுரை எவிடென்ஸ் அமைப்பு இந்த விவகாரத்தை கையில் எடுத்த பிறகு அந்த இன்ஸ்பெக்டரை இட மாற்றம் மட்டும் செய்துள்ளனர்...வேறு ஒன்றும் நடவடிக்கை இல்லை....

மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையே கற்பழிப்பு துறையாக மாறி பெண்களை சீரழிக்கும் கொடுமையை எங்கே போய் புகார் சொல்வது?ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் ஜெயலலிதா ஒரு அப்பாவி பெண் வாழ்க்கை சீரழிந்தது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...

பூரா பேரும் சிறையில் இருந்து கொண்டே வெளியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய திமுக வும் இதற்காக போராடவில்லை..

படங்களில் சீறிய விஜயகாந்த் இந்த விவகாரங்களை கையில் எடுக்காமல் பம்மி கொண்டு இருக்கிறார்..ஒரு வேலை படங்களில் போல் துப்பாக்கிகளை எடுத்து சுட ரிகர்சல் பார்க்கிறாரோ என்ன எழவோ தெரியவில்லை....

காவல் துறையில் உள்ள இந்த மாதிரி கருப்பு ஆடுகளை ஜெயலலிதா என்று களை எடுக்கிறாரோ அன்றுதான் பெண்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியும்....இதுதான் இன்றைய தமிழகத்தின் அவல நிலை...

எதற்கெடுத்தாலும் அம்மா புகழ் பாடும் அமைச்சர்களுக்கு இது கூட ஒரு பெருமையாக தெரியுதோ என்னவோ!

5 கருத்துகள்:

 1. காலத்திற்கேற்ற நல்ல பதிவு. இலங்கையிலும் கூட அண்மையில் ஆறு வயது சிறுமியை பதினாறு வயதான மாமன் கற்பழித்த சம்பவம் நடைபெற்றது. இது எங்கே போய் முடியுமோ? உங்கள் தளம் load ஆக நேரமாகிறது. சற்று கவனியுங்கள்.நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?

  http://newsigaram.blogspot.com/2012/07/innumsolven-01.html#.UBjuFmEe7Nk

  பதிலளிநீக்கு
 2. பல கேள்விகளை முன்வைத்து சமூக கோபத்தோடு சிந்திக்க வேண்டிய பதிவு

  sigaram bharathi// அவர்கள் சொல்வது போல் உங்கள் தளம் load ஆக நேரமாகிறது. சற்று கவனியுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி சகோ....சரி பார்க்கிறேன்...

  பதிலளிநீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும்
  தங்கள் கருத்துக்கு மகிழ்வு அன்புச் சகோதரரே "சலாம் அய்யா...
  பயன்தரும் பதிவு அய்யா...."
  அன்பு வேண்டுகோள் : உங்கள் தளத்தில் ஒளிந்திருக்கும் இந்த - உலவு - ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது...(இரண்டு தடவை வந்து பார்க்க முடியாமல் திரும்பிவிட்டேன் இவ்விதம் தொடர்வது பார்வையாளர்களை பாதிக்கும் அதனால் வருகை குறையும் . உங்கள் தளம் கருதியே எழுதுகின்றேன் )..மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !
  JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
  "Allah will reward you [with] goodness."

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....