15 ஆகஸ்ட் 2012

ஜெயலலிதாவால் மிரட்டப்பட்டாரா ஆச்சார்யா?!ராஜினாமாவின் ரகசியம் என்ன?


தவறு செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் ’....இது இன்று கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி வைத்து ஜெயலலிதா பேசிய பேச்சு....

பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு....ஆனால் அதெல்லாம் பிறருக்குத்தான் போல...

தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை எவ்வளவு தூரம் தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்தி வந்தார் ...வருகிறார்....மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமேன் ஜெயலலிதாவுக்கு....

மாஜி சினிமா நடிகை என்பதாலோ என்னவோ சினிமாவில் வருவது போல அதிரடி காட்சிகளை சொத்து குவிப்புவழக்கில் நடைமுறைப்படுத்தினார்..முதலில் இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் நியமனம் செல்லாது என வழக்கு போட்டு குட்டு வாங்கி கொண்டார்....

இப்போது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த வக்கீலையே ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்...

கர்நாடக அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக மாநில உள்துறை செயலருக்கு அனுப்பியுள்ளார் ...மன உளைச்சல் காரணமாகவே தாம் ராஜினாமா செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித மிரட்டலும் இல்லாமல் ராஜினாமா செய்வாரா அவர்?


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஆச்சார்யாவை கடந்த 2005-ம் ஆண்டு உச்சநீதிமன்றமே சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் ஆச்சார்யாவும் நீதிபதி மல்லிகார்ஜூனையாவும் ஜெயலலிதா தரப்புக்கு தொடர்ந்து சிம்மசொப்பனமாக இருந்து வந்தனர்.

அதே நேரத்தில் கர்நாடக ஆளும் பாஜகவின் துணையோடு ஆச்சார்யாவை அரசு தலைமை வழக்கறிஞராக்கியும் அகற்றப் பார்த்தனர். ஆனால் ஆச்சார்யா அந்தப் பதவியை ராஜினாம செய்துவிட்டு தொடர்ந்து ஜெயலலிதா வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்....

இந்த வழக்கிற்காக வந்த பதவியையும் வேண்டாம் என்ற ஆச்சார்யா இப்போது ராஜினாமா செய்வதன் மர்மம் ஏதோ ஒரு வகையில் அவர் மிரட்டப்பட்டதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?ஏற்கனவே இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜுனே ஒய்வு பெற்றுள்ளநிலையில் இப்போது இவரும் காலி....இனி இந்த வழக்கும் காலி....

ஆட்சியும்,அதிகாரமும் இருந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்...அதுவும் சுதந்திர தின நாளிலே..!வாழ்க தனி மனித சுதந்திரம்..!!2 கருத்துகள்:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....