பதிவர் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஆகஸ்ட் 2012

பதிவர் சந்திப்பில் பி கே பி சாரின் உரையும் எனது பதிவும் ...அடடா ஒரு !

 பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத  குறையை அன்றைய நேரடி  ஒளிபரப்பும் ,அதை தொடர்ந்து வந்த, வந்து கொண்டு இருக்கும் நண்பர்களின் பதிவும் போக்கி   கொண்டு இருக்கிறது....

பதிவர் சந்திப்பில் சிறப்புரை ஆற்றிய எழுத்துலக சக்கரவர்த்தி பி கே பி சாரின் உரையும்  பதிவர் சந்திப்புக்கு முன்னாடி நான் எழுதிய பதிவும் ஒரே நேர்கோட்டில் அமைந்து இருந்தது (அதாங்க சினிமா பாணியில் வேவ்ஸ் என்பார்களே ) எனக்கு ஆச்சர்யம்....!! அண்ணன் "வீடு திரும்பல்"மோகன் குமாரின் பதிவில் பி கே பி பேசியதாக  நான் படித்ததையும்  எனது பதிவில் நான் எழுதியதையும் பதிவிட்டுள்ளேன்...

 பி கே பி சார் பேசியது..

வலைப்பதிவர்கள் உங்கள் அனுபவத்தை எழுதுவதுடன் இன்னும் பலரை எழுத வைக்க வேண்டும். நாம் பேப்பர்லெஸ் சொசைட்டி நோக்கி செல்கிறோம். வருங்காலத்தில் வலைப்பூக்கள் உலகை ஆளும். எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !

 இது நான் சொன்னது...(

சென்னை பதிவர் சந்திப்பினால் என்ன லாபம்?!(http://nkshajamydeen.blogspot.com/2012/08/blog-post_23.html)



 நாளடைவில் பதிவுலகம் மிகப்பெரிய ஆக்க சக்தியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை..எனவே புதிதாக வரும் பதிவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன் நாம் அறிந்த தெரிந்த எழுத்து திறமையும் ,பேச்சு திறமையும் கொண்ட மாணவர்களையும் பதிவுலகில் இணைத்திட முயற்சி செய்யலாம் என முடிவெடுக்கலாம்...

இது சார் சொன்னது...

Unparliamentary வார்த்தைகள்/ விஷயங்கள் எழுதினால் பெண்களால் எப்படி வாசிக்க முடியும்? அப்படி நீங்கள் தொடர்ந்து எழுதினால் உங்களை பலரும் புறக்கணித்து விடுவார்கள். ஒரு மீட்டிங்கில் உங்களை பார்த்தால் உங்களை வந்து சந்தித்து பேசணும். இவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது என போகும் அளவில் இருக்க கூடாது !


இது நான் எழுதியது....


சினிமா விமர்சனங்களை பதிவிடும் பதிவர்கள் கவர்ச்சி படங்களை அதில் தவிர்த்தல் நன்மையாக இருக்கும் என்பது என் கருத்து ..அதை இந்த மாநாட்டில் வலியுறுத்தலாம்....

இதுவும் சார் சொன்னது.....

 சில ப்ளாகுகளில் பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் நடப்பதை பார்க்கிறேன். ஒருவனின் எழுத்தை மட்டும் பாருங்கள். விமர்சியுங்கள் அவன் வாழ்க்கையையும், அவனையும் விமர்சிக்காதீர்கள்.


இதுவும் நான் எழுதியது....

 இறுதியாக பதிவுலகில் எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் ,சக பதிவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவிட வேண்டாம் என ஒரு தீர்மானமே போடலாம்...

இதற்கு  பெயர்தான் டெலிபதியோ!

இறுதி டச் :பி  கே பி  சாரின்  பேச்சோடு  எனது கருத்துக்களும்  ஒத்து இருந்ததை குறிப்பிடவே இந்த பதிவு...



24 ஆகஸ்ட் 2012

சென்னை பதிவர் சந்திப்பில் கருணாநிதி!


நடக்கவிருக்கும் சென்னை பதிவர் சந்திப்பில் கலைஞர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்....

இருங்க நண்பர்களே....அப்படி அவர் கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றினால் எப்படி இருக்கும்....அவரின் கற்பனை பேச்சுக்கு போனசாக எனது கற்பனை கமெண்டும் உண்டு....!


எனதருமை உடன்பிறப்புகளே (இது என்ன கட்சி மாநாடா!).....வலையுலகில் புலி போல் பாயும் புலிகளே....நான் விடுதலைபுலிகளை சொல்லவில்லை.(இவருக்கு நாக்கில்தான் சனி போல)...இந்த எழுத்தினால் நான் பெற்ற புகழ் இந்த வையகம் அறிந்ததே ....அதை போல எழுத்தில் என் பாணியை பின் பற்றி நீங்களும் புகழ் பெற வேண்டும்...(பதிவர்களில் பாதி பேரு காதில் பஞ்சு வைத்து கொள்ள துவங்குகின்றனர்)

இப்போது ஜெயலலிதா அவரை விமர்சிக்கும் அனைவரின் மீதும் வழக்குகள் போட்டுள்ளார்...இம்மாதிரி வழக்குகள் நாளை பதிவர்களான உங்கள் மீதும் பாயலாம்...எனவே பதிவர்கள் அனைவரும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்து எழுத்து பணியோடு மக்கள் பணியும் சேர்ந்து ஆற்ற அழைக்கிறேன்...(இப்போது முழு பதிவர்களும் காதில் பஞ்சோடு)


நீங்கள் எல்லாம் பதிவுலகில் ஒற்றுமையாக ஒருங்கிணைத்து செயல்படவேண்டும் (தலைவரே முதலில் உங்க வாரிசுகளை ஒற்றுமையா செயல்பட சொல்லுங்க )......சமுகத்தில் நடக்கும் தவறுகளை சுட்டி காட்ட வேண்டும்...(நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாங்க செய்வோம் தலைவரே ).....எதிர்வரும் காலங்களில் திமுக ஆட்சி அமைகின்ற நேரத்தில் எனக்கு பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாராட்டு விழா எதுவும் நடத்த வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்....(உங்க அகராதியில் வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தமாமே !)


இப்போது இணையதளங்களில் என்னைய மட்டும்தான் அதிகமாக கஞ்சி காய்ச்சி வருகின்றனர் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குராருய்யா.)..அதனால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை...ஏனென்றால் காய்த்த மரம்தான் கல்லடிபடும்...(யாரும் உங்களை கல்லால அடிக்கலையே ...சொல்லால தானே அடிக்கிறார்கள் !)


நீங்களெல்லாம் ஈழத்துக்காக போராடும் என் போர்குணத்தை பற்றி அறிவீர்கள்....அதுபோல போர்குணம் உங்களுக்கும் இருக்க வேண்டும்(அச்சச்சோ ..வேணாம் அய்யா வேணாம் உங்க போர்குணம்..)ஈழம் வேண்டும் என்று நான் சொல்லவில்லை...அதே சமயம் ஈழம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை!மொத்தத்தில் நான் சொல்வது யாருக்கும் சரியாக புரிவதில்லை...(முதலில் உங்களுக்காவது புரியுதா தலைவரே !)

இறுதியாக ஒன்று இந்த பதிவர் மாநாடு ஜெயலலிதாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்று தெரிவித்துக்கொண்டு எனது உரையை முடித்துகொள்கிறேன்...(தலைவர் உரையை முடிக்கும் முன்பே மைக் அனைக்கப்படுகிறது..பதிவர்கள் காதிலிருந்து பஞ்சை தூக்கி எறிகிறார்கள்)