'ரசிகர்கள் விரும்புவதால் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப் போகிறார் என்றும், அடுத்த மாதம் ரசிகர் மாநாடு கூட்டி அதை அறிவிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின்றன. இன்னொரு பக்கம் அ.தி. மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வார் விஜய் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜய் தீர்மானமான எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆனாலும், அரசியலில் இறங்குவது பற்றி இப்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கூறினார், நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில்.
இதுபற்றி விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது:
"விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை. அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.
அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம். ஆனால் காவலன் அரசியல் படம் அல்ல. பஞ்ச் வசனங்கள் இல்லை. அது முழுக்க காதல் கதை. அந்த படத்துக்கு நெருக்கடியும், எதிர்ப்புகளும் ஏன் வந்தன என்றே புரியவில்லை.
பொங்கலுக்கு காவலன் வராது என்றும் செய்தி பரப்பினார்கள். ரசிகர்கள் கட்- அவுட் வைக்கவும் போஸ்டர்கள் ஒட்டவும் அனுமதிக்கப்படவில்லை.
எம்ஜிஆர் உயரத்துக்கு இணையாக...
எம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன்?(அட பாவிகளா...எம் ஜி ஆரை யாருமே விட்டு வைக்க மாட்டிங்களா?) விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி.
ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அவர்களிடம் அடுத்த 4 வருடங்கள் ரசிகர் மன்ற அமைப்புகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன்... விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி (விஜய்க்கு இப்போது 37 வயது!)", என்றார்.
ஹி ஹி....என்ன கொடுமை சார்? அரசியலில் இறங்குவதற்கே நாள், நட்சத்திரம்,வயது பார்க்கும் விஜய் அரசியலுக்கு வந்து என்ன கிழித்து விட போகிறார்?
Tweet |
வடை?
பதிலளிநீக்குஹி ஹி....என்ன கொடுமை சார்? அரசியலில் இறங்குவதற்கே நாள், நட்சத்திரம்,வயது பார்க்கும் விஜய் அரசியலுக்கு வந்து என்ன கிழித்து விட போகிறார்?
வாஸ்தவம்தான்! விஜய் மட்டுமல்ல அரசியலுக்கு வரும் எந்தவொரு நடிகனையும் நான் வெறுக்கிறேன்! ( நான் விரும்பினா மட்டும் ஏதாவது நடந்திடுமா? )
ஆஹா....அப்படின்னா 2016-தேர்தலில் இன்னொரு முதலமைச்சர் வேட்பாளர் ரெடிபோல....
பதிலளிநீக்குஅதாவது 40 வயதில் அரசியல் என்னும் சாக்கடையில் குளிக்க சாரி குதிக்க போகிறார்.
பதிலளிநீக்குஎல்லாம் ஒரே குட்டையில் ஊரின மட்டைகள்..
பதிலளிநீக்குலேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்மபக்கம் வந்துட்டு போங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html
அடப்போங்கப்பா 10ல் 1
பதிலளிநீக்குநன்றி நண்பர்களே....
பதிலளிநீக்கு