05 ஜனவரி 2011

அனல் குறையாத அழகிரி.....அது ரஞ்சிதாவேதான்.....பதிவு 1 செய்தி 2

அழகிரியின் அனல் இன்னும் குறையவில்லை......ஏற்கனவே மந்திரி பதவியை உதறிவிட்டு மாநில அரசியலுக்கு திரும்பும் முடிவில் இருந்த அழகிரிக்கு கனிமொழி, நீரா, பூங்கோதை ஆகியோரின் தொலைபேசி உரையாடல் மேலும் வெறியாக்கியது.....
நேற்று இரவு கருணாநிதியை சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக கூறும் கடிதம்.

தனது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்குமாறும், அது முடியாத பட்சத்தில் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டாராம் அழகிரி.

அழகிரி கோரிக்கைகள்:

- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ராசாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

- நீரா ராடியாவுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியை விட்டு அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

- சென்னையில் கனிமொழி ஏற்பாடு செய்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அழகிரி வைத்துள்ளதாக தெரிகிறது.

- மாநில அளவில் கட்சியில் தனக்கு முக்கியப் பொறுப்பு தர வேண்டும்

மேலும், கோபாலபுரம் இல்லத்தை இலவச மருத்துவமனையாக்கும் திட்டத்திற்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அழகிரியின் இந்த புதிய போர்க்கொடியால் திமுக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

அது ரஞ்சிதாவேதான்......

சாமியார் நித்தியானந்தாவுடன் படுக்கை அறையிலும், படுக்கையிலும் இருப்பது நடிகை ரஞ்சிதாதான். இது தடயவியல் ஆய்வில் தெளவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக சிஐடி போலீஸார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று சமீபத்தில் ரஞ்சிதா கூறியிருந்தார். மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பன் தன்னைக் கற்பழிக்க முயன்றதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

ஆனால் ரஞ்சிதாவின் கூற்றை கர்நாடக சிஐடி போலீஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். வீடியோவில் இருப்பது சாட்சாத் ரஞ்சிதாததான் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிஐடிதரப்பில் கூறுகையில், சம்பந்தப்பட்ட வீடியோவை சண்டிகர், ஹைதராபாத்தில் உள்ள தடவியல் கழகங்களுக்கு அனுப்பி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நித்தியானந்தா, ரஞ்சிதாவின் தனித் தனிப் படங்களுடனும் அவை ஒப்பிடப்பட்டன.

இதில் வீடியோவில் உள்ள படங்கள் மிகத் தெளிவானவை, சரியானவை என்றும், நித்தியானந்தா, ரஞ்சிதாவின் ஒரிஜினல் படங்களுடன் இவை ஒத்துப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வீடியோவில் எந்தவிதமான சேர்ப்போ, மார்பிங்கோ நடைபெறவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உலகின் எந்த மூலைக்கு இதை அனுப்பினாலும் நாங்கள் சொல்வது சரியே என்பது நிரூபணமாகும். இதை எங்கு போய் நிரூபிக்க வேண்டும் என்றாலும் அதற்கு கர்நாடக சிஐடி போலீஸார் தயார் என்றனர்.

மேலும் லெனின் மீதான ரஞ்சிதாவின் புகாரையும் கர்நாடக சிஐடி போலீஸ் சீரியஸாக எடுக்கவில்லையாம். அவர் சொல்வது உண்மையாக இல்லை என்று கர்நாடக போலீஸ் கருதுகிறது.

3 கருத்துகள்:

 1. சகோ டைட்டில பாத்துட்டு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்...அழகிரி--ரஞ்சிதா....
  உவ்வே..என்னென்னமோ நெனச்சுட்டேன்..

  கழக கப்பல்'ல லைட்டா ஓட்ட விழுந்தமாதிரி தெரியல...
  அப்டித்தா நெனக்கிறேன்..

  ஏற்கனவே ஒட்டுபோட்டு ஓட்டிட்டு இருக்குறது வேர மேட்டரு...

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....