11 ஜனவரி 2011

கொடி காத்த குமரனை நினைவுகூர்வோம் ....


தேச விடுதலைக்காக கொடி ஏந்தி உயிர் பிரிந்த மாவீரனின் நினைவு நாள் இன்று......


சிறுவயது முதலே விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் குமரன்.....கள்ளுக்கடை மறியல், உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார் குமரன்.....

வட்டமேஜை மாநாடு முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சியை தடை செய்து காந்தி அடிகளை கைது செய்தது ஆங்கிலயே அரசு .....ஆங்கிலயே அரசின் அடக்குமுறையை எதிர்த்து பொதுமக்கள் கொதித்து எழுந்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.....
தமிழகத்தில் குமரனும் தேசிய கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்....போலீஸ் அவரை தடியால் தாக்கி மண்டையை பிளந்தனர்.....என்றாலும் குமரன் தனது கையிலிருந்து கொடியை விடாமல் வந்தே மாதரம் என்று முழங்கியபடி மண்ணில் சாய்ந்தார்.....

படுகாயம் அடைந்த குமரனை மருத்துவமனையில் சேர்த்தனர்....கொடியை

பிடிங்கினால் உயிர் பிரிந்துவிடும் இறுதி கட்டத்தில் குமரன் இருந்தார் அப்போது...அருகில் இருந்த போலீஸ் கொடியை அவரிடம் இருந்து பறித்தனர்..குமரனின் உயிரும் பிரிந்தது...


இறுதிவரை உறுதி குறையாமல் தேசிய கொடியை பிடித்தபடி உயிர் துறந்த அந்த கொடி காத்த குமரனை இன்று நினைவு கூர்வதன் மூலம் அவருக்கு மரியாதை செலுத்துவோம்....

7 கருத்துகள்:

 1. //இறுதிவரை உறுதி குறையாமல் தேசிய கொடியை பிடித்தபடி உயிர் துறந்த அந்த கொடி காத்த குமரனை இன்று நினைவு கூர்வதன் மூலம் அவருக்கு மரியாதை செலுத்துவோம்....//

  நிச்சயம்

  பதிலளிநீக்கு
 2. கோடி காத்த குமரனுக்கு ஒரு சல்யூட்...

  பதிலளிநீக்கு
 3. கொடு காத்த குமரனுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
 4. Philosophy Prabhakaran சொன்னது…

  கோடி காத்த குமரனுக்கு ஒரு சல்யூட்.../////
  அதுயாருப்பா கோடி காத்த குமரன் .
  ஒருவேளை ஸ்பெக்ட்ரம் ராசாவ சொல்லுறாரோ...

  பதிலளிநீக்கு
 5. மறந்து போண முக்கியமான நாட்களை நினைவுபடுத்தியதற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 6. கொடிகாத்த குமரனுக்கு மரியாதை செலுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி நண்பர்களே....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....