16 ஜனவரி 2011

கருணாநிதி பெண்...ஜெயலிதா ஆண்....சோ சொல்கிறார்....


துக்ளக் வார இதழின் 41வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.


நிகழ்ச்சியில் வாசகர்களின் கேள்விகளுக்கு சோ பதில் அளித்து பேசியதை பார்ப்போம்.....


நாட்டில் எமர்ஜென்சி அமலில் இருந்தபோது, ஜனநாயகத்தைக் காப்பாற்ற இந்திரா காந்தியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அதுபோன்ற நிலை தான் இப்போது தமிழகத்தில் உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்தால்தான் நாட்டையே காப்பாற்ற முடியும். அது தமிழக மக்களின் கைகளில்தான் உள்ளது. நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் வாக்களித்தால் கண்டிப்பாக திமுக தோற்கும். திமுகவைத் தோற்கடிக்க ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.

அதற்கு அவருக்கு வலுவான கூட்டணி அமைய வேண்டும். அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும். திமுகவால் விஜயகாந்தும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. அவரது பொறியியல் கல்லூரிக்கும் இடையூறு செய்தார்கள். திமுகவைத் தோற்கடிக்கும் கடமையில் இருந்து விஜய்காந்த் தவறக் கூடாது. தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் எதையும் சாதிக்க முடியாது.

மக்களை ஈர்க்கும் வசீகரமான, துணிச்சலான தலைவர் ஜெயலலிதா. அவருக்கு எம்ஜிஆரின் புகழ் உதவி செய்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுக வெற்றி பெற்றதற்கு ஜெயலலிதாவின் திறமையே முக்கிய காரணம்.

கருணாநிதியின் அறிக்கையில் குழப்பமே இருக்கும். ஜெயலலிதாவின் அறிக்கையில் தெளிவு இருக்கும். கருணாநிதி பெண் போல புலம்ப ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதா ஆண் போல நிமிர்ந்து நிற்கிறார். கருணாநிதியிடம் பெண் தன்மையையும், ஜெயலலிதாவிடம் ஆண் தன்மையும் நான் பார்க்கிறேன்.

திமுக ஆட்சியில் தமிழகத்தை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. இதுபோன்ற நிலை இந்தியாவில் எங்கும் இல்லை. திரைப்படத் துறை முதல்வரின் குடும்பத்தின் பிடிக்குள் சென்று விட்டது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் தயவு இல்லாமல் எந்தப் படத்தையும் திரையிட முடியாது என்ற நிலை உள்ளதாக நடிகர்களே கூறுகின்றனர்.

அடுத்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அவர்கள் வந்து விட்டனர். திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் கருணாநிதியின் குடும்பத்துக்கு கொடுத்துவிட வேண்டியதுதான்.

துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியை சமாளிக்கவே நேரம் போதவில்லை. அதற்கே மூச்சு முட்டும்போது அவரால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்?.

சென்னை சங்கமம் விழாவுக்கு அரசு விளம்பரத்தில் தமிழ் மையத்தின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் சங்கமம் விழாவில் முதல்வர் கருணாநிதி, ஜெகத் கஸ்பருடன் பங்கேற்றிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களைக் காவல்துறை பணம் கொடுத்து மீட்கிறது. பணம் கொடுத்து மீட்பதற்கு காவல்துறை எதற்கு?.

நல்லாத்தான் சொல்றாரு சோ....பேசாமல் சோவும் அதிமுகவில் ஐக்கியமாகி அம்மா புகழ் இன்னும் ஜோராக பாடலாமே.....அதைவிட்டுவிட்டு தன்னை நடுநிலை பத்திரிக்கையாளராக காட்டி கொள்வது ஏன்?

17 கருத்துகள்:

 1. Jeyalaithavai jeikka vaippathu "mootai poochikku payandhu veetai koluthuvathu" pondrathu.


  Jayalaitha oru sarvaathikari.itharku karunanithiye mel.

  பதிலளிநீக்கு
 2. நல்லாத்தான் சொல்றாரு சோ....பேசாமல் சோவும் அதிமுகவில் ஐக்கியமாகி அம்மா புகழ் இன்னும் ஜோராக பாடலாமே.....அதைவிட்டுவிட்டு தன்னை நடுநிலை பத்திரிக்கையாளராக காட்டி கொள்வது ஏன்?///
  உண்மைதான். துக்ளக் இன்னொரு நமது எம்.ஜி.ஆர். இந்தாளு இன்னொரு வைகோ

  பதிலளிநீக்கு
 3. அகில இந்தியாவுக்கும் காமெடி பீசு சுப்ரமணிய சாமி என்றால்.....தமிழ்நாட்டுக்கு சோ. ராமசாமி. வேறொன்றும் சொல்வதற்கில்லை.

  பதிலளிநீக்கு
 4. கலைஞர் பொம்புள....ஜெயா ஆம்புளைன்னா இவரு ஒரு ஒம்போது

  பதிலளிநீக்கு
 5. இந்த விஷயத்தில் சோ சொல்வது சரியே - இது என் கருத்து நண்பரே

  பதிலளிநீக்கு
 6. நடுநிலையெல்லாம் எப்பவோ போச்சு... ஜெயா டி.வியில எங்கே பிராமணன் பார்க்குறீங்களா நீங்க? துக்ளக்ல வர்ற ஒவ்வொரு கார்ட்டூனும் தி.மு.க வை தாக்கி மட்டும் தான் இருக்கும்..

  பதிலளிநீக்கு
 7. இந்தம்மா ஆட்சிக்கு வந்தா இத பத்தியும் அவர் ஆட்சிக்கு வந்தா அவர பத்தியும் குறை சொல்வதை தான் வேலையாக வச்சுருக்கார். ஆனா இப்ப சொன்னது எதுவும் மறுப்பதற்கில்லை

  பதிலளிநீக்கு
 8. பத்திரிக்கை தர்மம் என்றால் என்ன என்று தெரியாத சோ போன்றவர்கள். இந்த உலகில் நாரதர் வேலையை செய்வதில் கில்லாடி.

  பதிலளிநீக்கு
 9. உள்ளேன் ஐயா...
  சூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க சார்!

  பதிலளிநீக்கு
 10. அவர் எங்கே தன்னை நடுநிலை பத்திரிக்கையாளன் என்று சொன்னார் ? நல்ல நகைச்சுவை உணர்வுதான் உங்களுக்கு.
  //இந்தம்மா ஆட்சிக்கு வந்தா இத பத்தியும் அவர் ஆட்சிக்கு வந்தா அவர பத்தியும்// அந்தம்மாவைப் பத்தி குறையே சொல்லமாட்டார். ஜெயலலிதா ஆட்சியில் மழை வரலன்னாலும் கருணாநிதியைக் குற்றம் சொல்வார். சங்கராச்சாரியாரை ஜெயலலிதா கைது செய்தபோது, கருணாநிதியைத் திட்டின அறிவாளி இவரு.

  பதிலளிநீக்கு
 11. யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ளவே வேண்டும்போல உள்ளது. எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ?

  பதிலளிநீக்கு
 12. நன்றி நண்பர்களே....உங்களின் கருத்துகளுக்கு.....

  பதிலளிநீக்கு
 13. கருணாநிதியிடம் பெண் தன்மையையும், ஜெயலலிதாவிடம் ஆண் தன்மையும் நான் பார்க்கிறேன்.//
  பெட் ரூம்-ல கேமரா வச்சுட்டாரோ. ஆனா படம் இன்னும் வெளியே வரலியே.தமிழகக்மக்களுக்கு கலைஞர் இதை சொல்லியே ஆக வேண்ட்டும். இந்த வயதுவரை இதை ஏன் மறைத்தார்.

  பதிலளிநீக்கு
 14. தீர்வுகளை யாரும் செய்ய முன்வரவில்லை
  மாற்றி மாற்றி குறைகளை சொல்வதில் வல்லவர் இவர்

  பதிலளிநீக்கு
 15. திமுக தோற்க வேண்டும் என்பது தான் எங்களது எண்ணமும்........... அதற்காக ஆஇதிமுக விற்கு அடர்வு திருவக முடியாது......... ஜெயலிதா இவளவு நாள் கொடநாட்டில் ஓய்வு எடுத்து விட்டு இப்பொழுது தான் தமிழ் நாட்டு மக்கள் மிது அக்கறை வந்து இருகிறது போல...........
  சோ எப்பொழுதும் அவர் ஒரு ஆஇதிமுக சார்ந்து உள்ளவர் என்பதை மணி க்கு ஒருமுறை நிருபித்து கொண்டு உள்ளார்...........

  பதிலளிநீக்கு
 16. //கலைஞர் பொம்புள....ஜெயா ஆம்புளைன்னா இவரு ஒரு ஒம்போது //

  perfect.. CHO IS a "9"

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....