25 ஜனவரி 2011

பயோ டேட்டா: விஜய் (வருங்கால CM )


பெயர்: விஜய்

அடைமொழி: இளையதளபதி விஜய்..( எந்த போருக்கு தளபதியாக போனார்,இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு "இளைய " தளபதியாகவே இருப்பார் என்றெல்லாம் கேட்ககூடாது...)

டாக்டர் பட்டம்: பிளஸ் டூ பாஸ் பண்ணியதற்காக கிடைத்தது....

தொழில்: ரௌடிகளை கொத்துபரோட்டா போடுவது ....சினிமாவில்தான்....

மேனரிசம்: பொது நிகழ்சிகள்,கலைவிழாக்களில் பல கோடிகளை பறிகொடுத்ததுமாதிரி இருப்பது....

பொழுதுபோக்கு: ஆக்சிலேட்டரை வாயால் பிடித்துகொண்டு கார் ஓட்டுவது, ஹெலிகாப்டரில் தொங்கியபடி சண்டை போடுவது....( சினிமாவில்தான்....)


சாதனை :: தொடர்ந்து எஸ் எம் எஸ் மற்றும் இணையதளங்களில் நம்பர் ஒன் காமெடியனாக இருப்பது....


கருணாநிதி: முன்பு ஆகாதவர் ..கூடிய சீக்கிரம் ஆக கூடியவர்


ஜெயலலிதா: அணிலாக பயன்படுத்தியவர் !


ராகுல்காந்தி: இளைஞர் காங்கிரஸில் சேரும் வயதை தாண்டிவிட்டார் என்று சொல்லி உண்மையான வயதை வெளிகாட்டியவர் ...


அப்பா: கூட இருந்து குழி பறித்து கொண்டு இருப்பவர்..( அரசியல் குழி தாங்க)


ஆசை: கட்சி ஆரம்பிக்க நினைப்பது


பேராசை: அப்படியே முதல்வர் ஆக நினைப்பது....


ரசிகர்கள்: தன்னை நிஜ ஹீரோவாக நினைக்கும் அப்பாவிகள்....


ரசிகர்மன்றங்கள்: அரசியலில் நுழைவதற்கு நுழைவு சீட்டு ..


லட்சியம்: வேற என்ன ...??? ....நாட்டை ஆள்வதுதான்....


தமிழக மக்கள்: நடிகர்களை நாடாள வைப்பவர்கள்.....


(கொசுறு: CM என்றால் சிரிப்பு மனிதன், சிறந்த மனிதன் என்று அவரவர் இஷ்டத்துக்கு நினைத்து கொள்ளலாமுங்கோ..!)

11 கருத்துகள்:

 1. டாக்டர் பட்டத விட்டிடீன்களே

  பதிலளிநீக்கு
 2. ஜெயலலிதா: பாடிகார்ட் (தற்போதைக்கு)
  HAA.....HAA,,,,

  பதிலளிநீக்கு
 3. //காவலன்: ஒரு வெற்றிக்கு முன்பு ஐந்து தோல்வி படங்களை காவு வாங்கிய படம்...

  இதுதான் காமெடி காவலன் ரிலிஸ் ஆயிடுச்சா

  பதிலளிநீக்கு
 4. வடை போச்சே...
  நறுக்குன்னு நாலு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு....

  பதிலளிநீக்கு
 5. அவர் அரசியலில் நின்றால் வோட்டு போடுவன்.............. இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன்னு வாக்குறுதி கொடுத்தல்...........

  பதிலளிநீக்கு
 6. #உங்களுள் ஒருவன் சொன்னது…

  அவர் அரசியலில் நின்றால் வோட்டு போடுவன்.............. இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன்னு வாக்குறுதி கொடுத்தல்...........#

  அட இதுவும் நல்லாத்தான் இருக்கு..

  பதிலளிநீக்கு
 7. காவலன் வெற்றின்னு எப்படி சொல்லலாம்.

  சாதனை மற்றும் வேதனை இடம் மாறி இருக்கிறது


  வேதனை: கதற கதற தோல்விபடங்கள் கொடுத்தும் கலையாமல் இருக்கும் ரசிகர்கள் கூட்டம்...

  சாதனை: தொடர்ந்து எஸ் எம் எஸ் மற்றும் இணையதளங்களில் நம்பர் ஒன் காமெடியனாக இருப்பது....


  இது எப்படி இருக்கு?

  பதிலளிநீக்கு
 8. என்னதான் சொல்லுங்க அப்பனே மவன காவு வாங்குற காட்சி சும்மா சூப்பருங்க.......

  பதிலளிநீக்கு
 9. நன்றி பாலா...நீங்கள் சொல்வதும் நல்லாத்தான் இருக்கு....

  பதிலளிநீக்கு
 10. பயோ டேட்டா: விஜய்.

  இதை வன்மையாக கண்டிகிரேன்

  பயோ டேட்டா: டாக்டர் விஜய்.


  மேலும் டாக்டர்
  அதிரடி காண இங்கு வரவும்

  http://enpakkangal-rajagopal.blogspot.com/2011/01/blog-post.html

  பதிலளிநீக்கு
 11. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....