29 ஜனவரி 2011

ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்கு!


போர்க்குற்றவாளி என பல நாடுகளாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரி்க்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.( பூனைக்கு இப்போதாவது மணி கட்டப்பட்டதே ..சந்தோசம்..)

இலங்கை ராணுவத்தினரின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களால் தங்களது உறவினர்கள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்கள் வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராஜபக்சே கைது செய்யப்பட வேண்டும் என்றும், தங்களுக்கு நஷ்ட ஈடாக 30 மில்லியன் டாலர்களை அவரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்றும் அந்த வழக்கின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் சட்டத்தின்படி போர்க்குற்றம், மனித உரிமை மீறல், படுகொலை ஆகியவற்றில் தொடர்புடைய நபர்கள் அந் நாட்டுக்கு வந்தால் அவர்களை கைது செய்ய அமெரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா வந்த ராஜபக்சே பிப்ரவரி 3-ம் தேதி தான் நாடு திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தன் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ள தகவல் அறிந்து அவசரமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜயசேகர, "இந்த வழக்கு வெறும் ஊடகப் பரபரப்புதான். பணம் கறக்கும் முயற்சி. இதற்கு நாங்கள் பணிய மாட்டோம்", என்றார்....

பார்ப்போம்...ஓநாய்கள் என்ன ஆகிறார்கள் என்று....

8 கருத்துகள்:

 1. அமெரிக்கா செய்த முதல் உருப்படியான வேலை

  பதிலளிநீக்கு
 2. ராஜபக்சேயை கைதுச்செய்ய வெள்ளை மாளிகை முன்பு அமெரிக்க தமிழர்கள் ஆர்ப்பாட்டம் கூட செய்துள்ளனர்..

  பதிலளிநீக்கு
 3. அமெரிக்கனை நம்பாதீர்கள். ஆயிரக்கணக்கான ஈராக்கியர்களை கொன்றவனுக்கு தமிழர்களை கொன்றவனை பற்றி என்ன கவலை..அவன் வேண்டுவதெல்லாம் இந்தியா பெருங்க்கடல் பகுதியில் தான் ஆளுமைக்குட்பட்ட ஒரு பகுதி. அதற்க்கு இலங்கை பலியாடக்காமல் இருந்தால் சரி

  பதிலளிநீக்கு
 4. அப்படியா... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. நண்பா... உங்கள் பனி தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. நல்லது..தொடரட்டும்!!

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....