12 ஜனவரி 2011

பயோ டேட்டா : ஜெயலலிதா..


பெயர் : ஜெயலலிதா...


அடைமொழி: புரட்சி தலைவி அம்மா ( என்ன புரட்சி செய்தார், யாருக்கு அம்மா என்றெல்லாம் கேட்க கூடாது..)


பதவி: அதிமுகவின் பொது செயலாளர்.....


தொழில்: முன்னால் நடிகை....இந்நாள் அரசியல்வா(வியா)தி ....


நீண்ட நாள் சாதனை: கட்சியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் காலில் விழ வைத்தது....


சோதனை: ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய தனக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு இன்னும் நடந்துகொண்டு இருப்பது.....


வேதனை: கோடநாட்டில் இருந்து மக்கள் பணி ஆற்றி கொண்டிருக்கும்போது எப்போதுமே தூங்கிகொண்டு இருக்கிறார் என மற்ற கட்சியினர் குறை சொல்லும்போது ஏற்படுவது....


பொழுதுபோக்கு: ஜெயா டிவி செய்திகளுக்காக தினமும் அரைவேக்காடு தனமாக ஒருபக்க அறிக்கை தயார் செய்து கொடுப்பது...


கோடநாடு: ஆட்சி அமைந்தால் அடுத்த தலைமை செயலகம்...


வைகோ: என்ன சொன்னாலும் தலையாட்டும் கைப்புள்ள...


விஜய்: அனேகமாக அடுத்த கைப்புள்ள....


கருணாநிதி: இந்த வயதிலும் கடுப்பை கிளப்புபவர்....


அழகிரி: ஹார்லிக்ஸ் பாட்டில் திருடுபவர்...


சசிகலா: தனக்கு உயிர்தோழி...உண்மையான தொண்டனுக்கு உயிர் எடுக்கும் தோழி....எம் ஜி ஆர்: தேர்தல் சமயத்தில் மட்டும் தேவைபடுபவர்.....


கட்சி தொண்டன்: காலம் முழுவதும் காலில் கிடப்பவர்கள்....


கனவு: பிரதமர் ஆவது.....


லட்சியம்: எப்படியாவது மீண்டும் ஆட்சி அமைத்து தமிழக மக்களின் தலையில் மிளகாய் அரைப்பது...

21 கருத்துகள்:

 1. வந்தோம்....ஓட்டு போட்டோம்.....

  கெளம்புரோம்....

  பதிலளிநீக்கு
 2. வெளங்காதவன் சொன்னது…
  வந்தோம்....ஓட்டு போட்டோம்.....

  கெளம்புரோம்...

  பதிலளிநீக்கு
 3. ஆஹா... அரசியல் களம் அமர்க்களப்படுகிறது...

  பதிலளிநீக்கு
 4. பார்த்து பாஸ் அ.தி.மு.க காரங்க முட்டையோட வரப்போராங்க..
  மற்றபடி கற்பனை அபாரம்..
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. இன்னும் அடுத்தடுத்து பல தலைகள் உருளும் என்று தோணுகிறது?
  நடத்துங்கள் ஹாஜா .

  பதிலளிநீக்கு
 6. நல்லா அடிச்சி ஆடி இருக்கேங்க சாமியோவ்!

  பதிலளிநீக்கு
 7. //பொழுதுபோக்கு: ஜெயா டிவி செய்திகளுக்காக தினமும் அரைவேக்காடு தனமாக ஒருபக்க அறிக்கை தயார் செய்து கொடுப்பது...///

  அது இவர் எழுதுவது இல்லை, கையெழுத்து மட்டும்தான்

  பதிலளிநீக்கு
 8. விஜய்: அனேகமாக அடுத்த கைப்புள்ள...
  இவரையும் விட்டு வைக்க வில்லையா ??

  பதிலளிநீக்கு
 9. நீங்களும் ஆரம்பிச்சாச்சா , வெளுதுகட்டுங்க.

  பதிலளிநீக்கு
 10. கலக்கல் போங்க....

  முதல் பய;)டேட்டாவே அம்மா ஆசியோட ஆரம்பிச்சுருக்கீங்க... இனி தொடர்ந்து களத்தில் கலக்குவீங்க

  பதிலளிநீக்கு
 11. ஆஹா அரசியல் களம் சும்மா களைகட்டுதே

  பதிலளிநீக்கு
 12. ஆமினா சொன்னது…

  கலக்கல் போங்க....

  முதல் பய;)டேட்டாவே அம்மா ஆசியோட ஆரம்பிச்சுருக்கீங்க... இனி தொடர்ந்து களத்தில் கலக்குவீங்க////
  இதுக்கு முன்னாடி கலைஞர் பயோ-டேட்டா வந்துச்சே,,,நீங்க படிக்கலியோ

  பதிலளிநீக்கு
 13. THOPPITHOPPI சொன்னது…

  //பொழுதுபோக்கு: ஜெயா டிவி செய்திகளுக்காக தினமும் அரைவேக்காடு தனமாக ஒருபக்க அறிக்கை தயார் செய்து கொடுப்பது...///

  அது இவர் எழுதுவது இல்லை, கையெழுத்து மட்டும்தான்


  ஹி ஹி இதுதான் உண்மை...

  பதிலளிநீக்கு
 14. sakthistudycentre.blogspot.com சொன்னது…

  பார்த்து பாஸ் அ.தி.மு.க காரங்க முட்டையோட வரப்போராங்க..

  ஹி ஹி...முட்டையோட வந்தா ஆம்லெட் போட்டு சாப்பிட வேண்டியதுதான்....

  பதிலளிநீக்கு
 15. // முன்னால்// - முன்னாள் என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்...

  மற்றபடி பயோடேட்டா சூப்பர்...

  http://www.philosophyprabhakaran.blogspot.com/

  பதிலளிநீக்கு
 16. தவறாக எழுதிவிட்டேன்....நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 17. //அடைமொழி: புரட்சி தலைவி அம்மா ( என்ன புரட்சி செய்தார், யாருக்கு அம்மா என்றெல்லாம் கேட்க கூடாது..)// haa... haa...haa...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....