17 ஜனவரி 2011

ஆத்தா நான் பாசாகிட்டேன்....டாக்டரு காவலன் விஜய்....


விஜய் வெற்றிக்காக எவ்வளவு தூரம் இறங்கி வந்து இருக்கிறார் என்பதற்கு ரோஜாவிடம் அவர் அடி வாங்கும் காட்சி ஒன்றே போதும்.....

ஆர்ப்பாட்டமான அறிமுகம், நிமிடத்துக்கு ஒரு பஞ்சு டயலாக் என்று விஜய் படத்துக்கு உள்ள இலக்கணங்களை உடைத்து விஜய்யையும்,நம்மையும் காப்பாற்றி விடுகிறான் காவலன்.....

காதலுக்கு மரியாதை விஜய்யை மீண்டும் பார்க்குற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது காவலன்....

தனக்கு காவலனாக வரும் நாயகனை அவனுக்கு தெரியாமல் காதலிக்கும் கதை.....விஜய்யின் பக்கத்தில் இருந்துகொண்டே வேறு ஒரு பொண்ணு போல செல்லில் உருகி உருகி காதலிக்கிறார் அசின்...செல்லில் ஜொள்ளு விட்ட ஆளு யாருன்னு விஜய்க்கு தெரிந்ததா....விஜய் யாரை கைப்பிடித்தார் என்பதை சுவாரஸ்யமாகவும் கொஞ்சம் அழுகை மற்றும் கொஞ்சம் இலுவையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர்.....


படம் சில இடங்களில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தையும் ,ஷாருக் கான் நடித்த படம் ஒன்றையும் நினைவு படுத்துகிறது.....

விஜய் படத்தில் எப்போதுமே பாடல்கள் நன்றாக இருக்கும்....ஆனால் வித்யாசாகருக்கு விஜய் மேல் அப்படி என்ன கோபமோ....சொதப்பி விட்டார்...


நல்லவேளை இதில் டாக்டரு விஜய் சண்டை மட்டும் போடாமல் கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்...அசின்தான் சும்மா சும்மா அழுது ஆத்திரமூட்டுகிறார்...
காமெடிக்கு வடிவேலு....முதல் பாதியில் சிரிக்க வைக்கிறார்....அதன்பிறகு அவரும் ஓய்வு எடுத்து கொள்கிறார்.....

ரொம்ப படத்தை பற்றி எழுத விரும்பவில்லை....அது மாதிரி எழுதவும் தெரியாது....போர் அடிக்கும்..எனக்கும் படிக்கும் உங்களுக்கும்......


கடைசியாக வந்த விஜய் படங்களை ஒப்பிட்டால் இது நூறு சதவீதம் மேல்.....
இனி இது மாதிரி படங்களில் டாக்டரு நடித்தால் அவருக்கும் நல்லது......நமக்கும் நல்லது....

ஐ சீ யூ வில் இருந்த நோயாளியை காப்பாற்றி விட்டான் காவலன்.....

23 கருத்துகள்:

 1. நீங்க சொல்லரதுனால படத்துக்கு போறேன். பின்விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு.

  பதிலளிநீக்கு
 2. நல்ல விமர்சனம்....எல்லோரும் சொல்லுறாங்க...படம் அவ்வளவு நல்லாவா இருக்கு.. அப்ப போக வேண்டியதுதான் தியேடருக்கு...

  பதிலளிநீக்கு
 3. கண்டிப்பாக பாக்க வேண்டிய படம் தான்

  எதெது சூப்பர் மற்றும் சொதப்பல்ன்னு சொன்ன விதம் அருமையாக இருந்துச்சு

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு இரத்தின சுருக்கமான விமர்சனம். உனக்கு விமர்சனம் எழுதும் கலையும் நல்லா வருதுப்பா....
  KEEP IT UP

  பதிலளிநீக்கு
 5. சரியான விளக்கம் sorry விமர்சனம்

  பதிலளிநீக்கு
 6. #ரஹீம் கஸாலி சொன்னது…

  நல்லதொரு இரத்தின சுருக்கமான விமர்சனம். உனக்கு விமர்சனம் எழுதும் கலையும் நல்லா வருதுப்பா....
  KEEP IT உப#


  நன்றி அண்ணா.......

  பதிலளிநீக்கு
 7. #sakthistudycentre-கருன் சொன்னது…

  நீங்க சொல்லரதுனால படத்துக்கு போறேன். பின்விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு.#


  இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா......

  பதிலளிநீக்கு
 8. நீங்க சொல்றதால படாத பாக்க முடிவு பண்ணிட்டன்

  பதிலளிநீக்கு
 9. ஏதோ நல்லா இருக்குனு ரிசல்ட் வந்துச்சே

  பதிலளிநீக்கு
 10. // கடைசியாக வந்த விஜய் படங்களை ஒப்பிட்டால் இது நூறு சதவீதம் மேல்..... //

  என்ன ஒரு சமாளிபிகேஷன்... நீங்க விஜய் ரசிகரா...?

  பதிலளிநீக்கு
 11. அய்யோ யாரும் போகதிங்க இது இந்தி படத்தையும் மலையாளப் படத்தையிம் கலந்து நம்மை கொலை பன்னிடுவானுக

  பதிலளிநீக்கு
 12. #Philosophy Prabhakaran சொன்னது…

  // கடைசியாக வந்த விஜய் படங்களை ஒப்பிட்டால் இது நூறு சதவீதம் மேல்..... //

  என்ன ஒரு சமாளிபிகேஷன்... நீங்க விஜய் ரசிகரா...?#


  இதில் சமாளிக்க என்ன இருக்கிறது நண்பரே...விஜய்யை பற்றி நான் எழுதிய பதிவுகளை படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...படிக்காவிட்டால் படித்துவிட்டு சொல்லுங்கள் நான் விஜய் ரசிகரா என்று...ஹி ஹி

  பதிலளிநீக்கு
 13. விஜய்க்கு தை பிறந்ததும் வழி பிறந்துள்ளது போலிருக்கே!!!!!!!!!! வாழ்த்துக்கள்..

  முத்தான திரைப்பட கண்ணோட்டம் நன்றாக இருந்தது நண்பா..

  பதிலளிநீக்கு
 14. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே....

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லா9:37 PM, ஜனவரி 18, 2011

  இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. தல,

  ஒத்துக்கிரேன். விஜயோட முந்தின படங்கலுக்கு, இது o.k. ஆனா. கொடுமை கொஞ்சம் கூட பிடிக்கல. செம மொக்கை.

  climax மட்டும் o.k.

  பாவம், மத்தவங்கலயும், மாட்டி விடாதிங்க பாஷ்.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....