09 ஜனவரி 2011

அஜித் விஜய்....பாராட்டிய ரஜினி....பதிவு 1 செய்தி 2

அஜித்தும் விஜய்யும் சந்தித்து கொண்டால் செய்திகளுக்கா பஞ்சம்?

சமீபத்தில் அஜித்தும் விஜய்யும் பின்னி மில் செட்டில் சந்தித்துக் கொண்டதாக செய்தி வெளியானதல்லவா... இந்த சந்திப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட சந்திப்பு என்பதுதான் இதில் ஹைலைட்.

இந்த சந்திப்பின்போது தங்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் திட்டங்கள் குறித்துப் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளின்போது நடந்ததை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்தும் கசிய விட்டுள்ளனர்.

விஜய்யின் காவலன் படத்துக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.( என்ன விவாதித்து என்ன? ரெண்டு பெரும் ஒரு நல்ல படத்தை கொடுங்கப்பா...)

இந்த சந்திப்பின்போது, விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் அஜீத் பிரியாணி விருந்து அளித்துள்ளார். அவர்களுடன் படப்பிடிப்புக் குழுவினரும் விருந்தில் பங்கேற்றனர்.( தல பிரியாணி யா?)

பாராட்டிய ரஜினி.....

சமீபத்தில் ரஜினியை விமர்சிப்போர் பட்டியலில் இணைந்த இயக்குநர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தைப் பார்த்துப் பாராட்டினார் ரஜினி.

சமீபத்தில் ஒரு மேடையில், 'ரஜினியின் எந்திரன் படம் தரமற்றது' என்ற ரீதியில் பேசி பரபரப்பேற்படுத்தியவர் இயக்குநர் மிஷ்கின்.

இப்போது சேரன் நடிக்கும் யுத்தம் செய் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

இந்த நிலையில் ரஜினி இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் மிஷ்கினும் சேரனும்.

ரஜினிக்காக சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ரஜினியும் நேற்று மாலை யுத்தம் செய் படம் பார்க்க வந்தார். அவரை சேரனும் மிஷ்கினும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

படம் முடிந்ததும், இருவரையும் பாராட்டிய ரஜினி, யுத்தம் செய் படத்தின் காட்சி அமைப்பு வித்தியாசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தப் படத்தில் சேரன் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். அவரையும் தனியாகப் பாராட்டினார்.

1 கருத்து:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....