முள்ளம்பன்றி தலையா, தேங்காய் தலையா, போண்டா வாயா, கின்னிக்கோழி மண்டையா, அடுப்புகரி வாயா ....இதுமாதிரி தமிழ் வார்த்தைகளை( !!!) சினிமாவில் அறிமுகப்படுத்தி புது தமிழ் அகராதியை உருவாக்கியவர் நம்ம ஆளு......
கால்பந்து வீரர்களைவிட தன்னுடன் நடிக்கும் நடிகர்களை மிக நன்றாக உதைபவர்.....
ஹீரோ மட்டும்தான் டூயட் பாடனும் என்ற விதியை உடைத்து ஹீரோவோடு தானும் சேர்ந்து டூயட் பாடியவர்......
இவரிடம் அடி ,உதைவாங்காத காமெடி நடிகர்களே இல்லை.....
இவர் வந்தாலே படம் இவரது சவுண்டால் அலறும் ....
அந்த சவுண்ட் பார்ட்டி தான் நம்ம கவுண்ட மணி........
பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் அறிமுகம்.....
இவரது சவுண்ட் இவரை காமெடி நடிகர்களில் தனியாக இவரை அடையாளம் காட்டியது......
பிறகு செந்திலையும் தன்னுடன் சேர்த்து கொண்டு நடிக்க ஆரம்பித்தார்.....
கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடி இவர்களை புகளின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.....
அதன்பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் நல்லா வரவேற்பை பெற்றன...
ஒருகாலத்தில் கவுண்டமணி இல்லாத படங்களே இல்லை.....அவர் இல்லாவிட்டால் அது படமும் இல்லை என்ற நிலை உருவானது.....
ஹீரோ பேசும் வசனங்களை விட இவர் பேசும் நக்கல் நய்யாண்டி பேச்சு பெரும் புகழ் பெற்றன....சூரியன் படத்தில் கவுண்டமணி பேசும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ...என்ற வசனம் இன்று வரை பிரபலம்.....
இவரிடம் அடி உதை வாங்காத காமெடி நடிகர்கள் இல்லை.....கவுண்டமணியின் டைமிங் காமெடி,பாடி லாங்குவேஜ் பாதிப்பில்லாத காமெடி நடிகர்கள் யாரும் இல்லை....
ஹீரோவை செட்டில் வைத்து கொண்டே " தாத்தா வயசாகியும் இன்னும் மரத்தை சுற்றி டூயட் பாடுகிறார்" என்று கிண்டல் அடிக்க கவுண்டரால் மட்டுமே முடியும்....
நாளாக நாளாக தன்னால்தான் படங்கள் ஓடுகிறது என்று எண்ணினாரோ என்னவோ செந்திலை ஓரம்கட்டினார்....சம்பளம் எக்கசக்கமாக கேட்க ஆரம்பித்தார்......சில படங்களில் ஹீரோக்களையே டாமினேட் செய்ய ஆரம்பித்தார்.....வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன....
அந்த கேப்பில் வடிவேலுவும், விவேக்கும் அண்ணன் எப்படா எழுந்திருப்பான் திண்ணை எப்ப காலியாகும் " என்பதுபோல கப்பென்று வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற ஆரம்பித்தனர்.....
ஹீரோவாக இருத்த கவுண்டர் கொஞ்சம் கொஞ்சமாக ஜீரோவாகி போனார்.....
கவுண்டர் இப்போது படங்கள் இல்லாமல் இருக்கிறார்....ஒருவேளை உடல்நிலை காரணமாக படங்களை அவரே குறைத்து கொண்டாரா என்று தெரியவில்லை.......
ஆனால் இப்போது வந்தாலும் சிங்கம் சிங்கம்தான்....கவுண்டர் திரும்பவும் வந்து கர்ஜிக்க வேண்டும் என நினைக்கும் அவரது லட்சகணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்........
Tweet |
தமிழ் நகைச்சுவை நடிகர்களில் மறக்க முடியாதவர் கவுண்டமணி. தன் திறமைக்கு ஏற்ப அதிககாலம் நகைச்சுவையில் ஆட்சி செய்துவிட்டார். இப்போதைய நிலை அவருக்கு தோல்வி அல்ல.
பதிலளிநீக்குநன்றி ...அவருக்கு இணை யாரும் இல்லை......நானும் அவருக்கு தோல்வி என்று குறிப்பிடவில்லை......இது ஒரு தேக்க நிலைதான்.....
பதிலளிநீக்குதேக்க நிலை என்றும் சொல்ல முடியாது. அவர் சாதிக்க வேண்டியதை எல்லாம் சாதித்து விட்டார். இப்போது ஓய்வெடுக்கும் நேரம்.
நீக்குகவுண்டரை அடிச்சுக்க ஆள் இல்ல..மற்றவர்கள் எல்லோரும் அவர் காப்பி தான்
பதிலளிநீக்குகவுண்டருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்வி.அவரின் "" ஏன்டா எரும சானிய மூஞ்சில அப்புன மாதிரி நிக்கிற"" வசனம் என்னால் மறக்கவே முடியாது
பதிலளிநீக்குநன்றி நண்பர்களே.....கவுண்டர்கவுண்டர்தான்.....
பதிலளிநீக்குஅவராக ஒதுங்கிக்கொண்டது தான் சகோ....
பதிலளிநீக்குபதிவு அருமை
// கால்பந்து வீரர்களைவிட தன்னுடன் நடிக்கும் நடிகர்களை மிக நன்றாக உதைபவர்..... //
பதிலளிநீக்குசெம நக்கல்...
எழுத்துரு அளவை குறைக்கலாமே... ரொம்ப உறுத்தலாக இருக்கிறது...
பதிலளிநீக்குயாரு மைனஸ் ஓட்டு போட்டது...?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅது யாருன்னு தெரியல நண்பா.....என்னாலையும் தமிழ்மணத்தில் ஒட்டு போட முடியவில்லை...
பதிலளிநீக்குகவுண்டரு நடிக்க வேண்டிய அளவுக்கு நடிச்சு முடிச்சிட்டாரு... அவர் போடாத கெட்டப்பு இல்ல, வேஷம் இல்ல..... !
பதிலளிநீக்குஹாஜா.. கூகிள் க்ரோம் பயன்படுத்துனா தமிழ்மணத்த்ல ஓட்டுப் போடலாம்.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி ராமசாமி அவர்களே.....
பதிலளிநீக்கு