27 ஜனவரி 2013

விஸ்வரூபம் நிச்சயம் வெளிவர வேண்டும்...ஆனால் அதற்கு முன்னால் !!......

முஸ்லிம்கள் எனக்கு பிரியாணி விருந்து போடுவார்கள் என சொல்லிவிட்டு முஸ்லிம்களுக்கு விஷ விருந்தை கொடுத்தால் அதை எதிர்க்காமல் சலாம் போடுவார்களா கமல்?

எங்கயோ ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாத செயல்களை உங்கள் படத்தில் காட்டி உள்ளதை போல  இங்கே இந்தியாவில் உள்ள குஜராத்தில் பல்லாயிர கணக்கான பெண்களையும் ,குழந்தைகளையும் , கர்ப்பிணிகளின் வயிற்றில்  உள்ள சிசுக்களையும் கூட விட்டு  வைக்காமல் நடந்த படுகொலைகளை இதுவரை நீங்கள் உள்பட உங்களுக்கு இப்போது ஆதரவு அளிக்கும் எந்த சினிமா காரர்களும் படங்களாகக் பதிவு செய்யாதது ஏன் கமல்?

முஸ்லிம்கள் புகார் கொடுத்தால் வாங்காதீர்கள், வேடிக்கை மட்டும் பாருங்கள் என அந்த படுகொலைகளை அரங்கேற்றிய கொடுங்கோலன் மோடியை குற்றவாளியாக்கி ஒரு படமல்ல ஒரு காட்சியாவது இதுவரை நீங்களும்,உங்கள் சினிமாக்காரர்களும் பதிவு செய்யாதது ஏன் கமல்?


இந்தியாவின்  ஒற்றுமையை சீர்குலைத்த சம்பவமான ,இந்தியாவுக்கு அவமானத்தை தேடி தந்த சம்பவமான ,ஏதோ ஒரு பாழடைந்த கட்டடத்தை இடிப்பதுபோல பாபர் மசூதியை  இடித்த  அயோக்கியர்களை பற்றியும், தேசத்தின் ஒற்றுமையை நாசமாக்கிய அந்த சம்பவத்தை பற்றியும் ஒரு தேச பக்தி உள்ள இந்தியனாக இதுவரை நீங்களும்,இப்போது உங்களக்கு ஆதரவு அளிக்கும் சினிமா காரர்களும் இதுவரை அப்படியே பதிவு செய்யாதது ஏன் கமல்?


இந்த இரண்டு சம்பவங்களையும் முதலில் நீங்கள் தைரியமாக  படம் எடுத்து அதை வெளியிட முடியுமா கமல்?அந்த சம்பவங்களை பற்றி நீங்கள் படமெடுத்து வெளியிடும்போது எந்த வித எதிர்ப்பும் கிளம்பாமல் இருந்தால் இப்போது நடந்த,நடக்கும்  போராட்டங்கள்  தவறு என தைரியமாக நீங்கள் சொல்லி கொள்ளலாம் கமல்....

நிச்சயம் விஸ்வரூபம் வெளிவர வேண்டும்...ஆனால் அதற்கு முன்னால்  இந்த இரண்டு சம்பவங்களையும் பற்றி படமெடுத்து வெளியிடுங்கள்!!முடியுமா உங்களால் கமல்?உலகத்தில் நடந்ததை ,நடப்பதை தானே படமாக எடுத்தேன் என கூறும் நீங்கள் இந்தியாவில் நடந்த இந்த சம்பவங்களையும் படமாக எடுத்து இருக்கலாமே?இனியாவது எடுக்கலாமே?முடியுமா உங்களால்?

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருஅணை  உடைந்தால் என்ன ஆகும் என்ற கற்பனையில் உருவான டேம் 999 என்ற படத்தை ,அது வெளிவந்தால் பிரச்சினைகள் உருவாகும் என்று தமிழக அரசு தடை செய்தது எப்படி சரியோ,அதுபோல இப்படம்  வெளிவந்தால் நிச்சயம் பிரச்சினைகள் உருவாகும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இப்படத்தை தடை செய்தது முற்றிலும் சரிதான்....

அப்போது பாதிக்கப்படாத கருத்து சுதந்திரம்,படைப்புரிமை இப்போது மட்டும் பாதிக்கப்பட்டு விட்டதா?

இறுதியாக ஒன்று,கமலுக்கும் அவருக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கும் ....

பாபர் மசூதியை இடித்த,குஜராத்தில் படுகொலைகளை அரங்கேற்றிய குற்றவாளிகளுக்காக  எப்படி ஒட்டுமொத்தமாக அந்த குறிப்பிட்ட மதத்தினரை குறை சொல்ல முடியாதோ அப்படிதான் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்காக எந்த ஒரு குறிப்பிட்ட  மதமும்  பொறுப்பாகாது...


தீவிரவாதிகள் அனைவரும் மனிதர்களே அல்ல..மிருகங்கள்......அப்புறம் ஏன் அவர்களை ஒரு மதத்தோடு சம்பந்தப்படுத்துகிறீர்கள்?


முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாக  காட்டும் படம் நிச்சயம் இதுவே கடைசி படமாக இருக்கட்டும் ..அதுவும் உங்கள் படமாகவே இருக்கட்டும் கமல்....இனியாவது திருந்துங்கள்!
50 கருத்துகள்:

 1. ஹாஜா! உங்கள் வாதங்கள் சரி! விஸ்வரூபம் படம் சரியில்லை என்று வாதாடுவது உங்கள் உரிமை; நியாமும் கூட; ஆனால், கமல என்ன படம் எடுக்கணும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

  ஏன், நீங்க கமல் எடுக்க சொன்ன படத்தை அமீரை எடுக்க சொல்லுங்கள், சாருக்கான்...மாதிரி கான்களை எடுக்க சொல்லுங்கள்...

  நம்ம அமீர் அண்ணன் கிட்டயாவது சொல்லுங்கள்...
  என்ன பதில்...கிடைக்கும், எதை படம் எடுப்பது என்பது என் உரிமை....அதில் யாரும் தலியிடமுடியாது....

  அதே பதில் தான் நம்ம உலக்கைநாயகனும் கொடுப்பார்.

  பதிலளிநீக்கு
 2. நான் கமலை மட்டும் சொல்லவில்லை நண்பரே....எல்லா சினிமா காரர்களையும் சேர்த்துதான் சொல்லி இருக்கிறேன்...சினிமாக்காரர்கள் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேன்..

  என்ன படம் எடுப்பது என்பது எப்படி அவர்களின் உரிமையோ.அதேபோல ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தவறாக சித்தரித்தால் அதை எதிர்ப்பதும் அந்த உரிமைகளில் அடங்கும்...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 3. // நிச்சயம் விஸ்வரூபம் வெளிவர வேண்டும்...ஆனால் அதற்கு முன்னால் இந்த இரண்டு சம்பவங்களையும் பற்றி படமெடுத்து வெளியிடுங்கள்!!முடியுமா உங்களால் கமல்? //

  ஹா..ஹா... அவரால் முடியாது மச்சான்.. அவர் மட்டும் அல்ல, கருத்து சுதந்திரம் பேசும் எந்த கொம்பன் சினிமாகாரர்களாலும் எடுக்க முடியாது...

  பாரதிராஜா, நீங்க எடுங்களேன் ராசா???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியா சொன்னீங்க மச்சான்...எந்த ராஜாவும் எடுக்க மாட்டார்கள்...எடுத்தால் என்ன ஆகும் என்று அவர்களுக்கு தெரியும் ...

   நீக்கு
 4. உங்களை நான் அறிவேன்; உங்கள் நியாமான கருத்துக்களுக்கு...

  அமீரிடம் இது மாதிரி ஒரு கோரிக்கையை வையுங்களேன்....ஒரு இடுகையாக...

  தயவு செய்து, எதை எழுதுவது யாருக்கு கோரிக்கை வைப்பது என் உரிமை அதில் யாரும் தலையிடமுடியாது என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்....

  சொன்னால்...கமலிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு வெறும் அர்த்தம்....வெறும் அனர்த்தம் தான்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நம்பள்கி....நான் அமீரையும்,கமலையும் பிரித்து பார்க்கவில்லை....இருவரும் சினிமாகாரர்கள்தான்...நான் இந்த பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுபுள்ளியை எதிர்பார்க்கிறேன்...யாருடைய மனமும் புண்படாமல்...

   நீக்கு
 5. ஹா..ஹா...
  கேள்வி-1 : படைப்பு சுதந்திரம்னா என்னா??
  பதில் : எதிர்க்காத ஆட்களை பற்றி படம் எடுப்பது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்களை ஆடைகள் இல்லாமல் சுதந்திரமாக காட்டுவது!இதுவும் அவர்கள் கூறும் படைப்பு சுதந்திரத்தில் வரும்!!

   நீக்கு
 6. திரைப்பட நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சில அறியாத முஸ்லிம்கள் இந்த பிரச்சனைக்கு பிறகாவது உணர்ந்து கொண்டால் நல்லது..இதில் பலரது முகமுடி கிழிந்து கொண்டு உள்ளது..! பணத்திற்காக என்னவெல்லாம் அவர்களின் உள்ளத்தில் உள்ளதோ அதுவெல்லாம் தற்போது வெளிக்கொண்டு உள்ளது..!

  சீமான் இந்த படத்தை கண்டித்து இருக்கிறார்.

  ரஜினி நடுநிலையாக சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார்..

  மற்ற (தறு) தல , கிராமத்து குயிலு போன்ற அதிகமானோர் கமலை கண்டிக்க வக்கில்லாமல் படத்தை வெளியிடவேண்டுமாம்..இவர்களை தூக்கி கொண்டாடும் ரசிக குஞ்சிகள் சிந்திக்கவேண்டும்..!

  இறுதியாக கமலுக்கு சொல்லவிரும்புவது " நல்ல மாட்டுக்கு ஒரு சூடு " உங்களுக்கு ஏற்கனவே பல சூடு போட்டாச்சு..! இப்ப நாங்கள் என்ன செய்ய ("தம்பி" மாதவன் ஸ்டைலில் )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்..இப்போதுதான் புற்றிலிருந்து பாம்புகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன....ரஜினியாவது நடு நிலைமையுடன் கருத்து சொல்லி உள்ளார்...ஆனால் பாரதிராஜா போன்றவர்களிடம் எந்த நடுநிலமையும் இல்லை...

   நீக்கு
 7. சகோ.ஹாஜா மைதீன் !

  நமது போராட்டம் சரியே..! படத்திற்கு தடையும் சரியே..விஜயகாந்த் ,அர்ஜுன் கால படங்களிலாவது வில்லனுக்கு முஸ்லிம் பெயர்தான் இருக்கும் ..அதிகபட்சம் தாடி வச்சிருப்பான் ! ஆனால் இப்போது அதுவே பரிணாம வளர்ச்சி அடைந்து குரான் ஓதுவதும் தொழுகை செய்வதும் பின்பு கழுத்தை அறுப்பதுமாக காட்ட துவங்கி உள்ளனர் ..! கருவறுக்கும் இவர்களை கண்டிப்பாக வேரருக்க வேண்டும்..! தேவையான அளவு கிலியை உண்டாக்கவேண்டும் !

  பதிலளிநீக்கு
 8. அழிக ஜனநாயகம்! வாழ்க மதவாதம்! தமிழ் மணத்தின் உறுதி மொழி!
  கட்டண சேவை என்கிற பெயரில் தமிழ் மணத்தின் தலையில் உட்கார்ந்து இருக்கு.......

  please go to visit http://tamilnaththam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 9. //உலகத்தில் நடந்ததை ,நடப்பதை தானே படமாக எடுத்தேன் என கூறும் நீங்கள் இந்தியாவில் நடந்த இந்த சம்பவங்களையும் படமாக எடுத்து இருக்கலாமே?இனியாவது எடுக்கலாமே?முடியுமா உங்களால்?
  உலகத்தில் நடந்ததை ,நடப்பதை தானே படமாக எடுத்தேன் என கூறும் நீங்கள் இந்தியாவில் நடந்த இந்த சம்பவங்களையும் படமாக எடுத்து இருக்கலாமே?இனியாவது எடுக்கலாமே?முடியுமா உங்களால்?//
  படைப்பு (பிழைப்பு ) சுதந்திரவாதிகளுக்கும் கருத்து (தந்திர ) சுதந்திரவாதிகளுக்கும் செவிட்டில் அறைந்தால் போல் கேட்டிருக்கிறீர்கள்.என்ன சொல்ல போகிறார்கள் ?

  பதிலளிநீக்கு
 10. மீண்டும் மீண்டும் சொத்தை வாதம். அதை ஏன் எடுக்கல இதை எடுத்திருக்கேன்னு.
  நீங்க எடுக்க வேண்டியது தானய்யா குஜராத் கலவரமும், பாபர் மசூதி இடிப்பும் எவன் வேணான்னு சொன்னான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொத்தையான வாதம் என்று சொல்லிவிட்டு அதைவிட சொத்தையான பதிலை சொல்லி இருக்குறீர்கள்...பிள்ளைகளை ஒழுங்காக படிக்க வையுங்கள் என வாத்தியாரிடம் சொன்னால் ஏன் நீங்கள் வந்து படித்து கொடுங்களேன் என வாத்தியார்கள் பெற்றோரிடம் கூறுவதுபோல இருக்கிறது உங்கள் கருத்து ...

   நீக்கு
  2. டேம் 999 ஐ ஏன்பா தமிழ்நாட்டில் தடை செய்தீர்கள்???

   தனது பட வேலைகளுக்காக சென்னை வந்த சிங்கள இயக்குனரை நீங்கள் பட இயக்குனராக ஏனப்பா பார்க்கவில்லை??? ஏன் சிங்களவனாக பார்த்தீர்கள்??

   இதுக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்களோ அதே பதில இந்த பிரச்சனைக்கு நாங்க சொன்னதா எடுத்துக்கங்க... வந்துட்டாங்க பெரிசா நியாயம் பேச?????

   இரட்டை முகங்கள்...

   நீக்கு
 11. /
  சலாம் சகோ..! ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் உழன்று கொண்டு இருக்கும் கேள்விகளை தெள்ள தெளிவாக சொல்லி விட்டீர்கள்..! மாஷா அல்லாஹ்!


  முஸ்லிம்கள் புகார் கொடுத்தால் வாங்காதீர்கள், வேடிக்கை மட்டும் பாருங்கள் என அந்த படுகொலைகளை அரங்கேற்றிய கொடுங்கோலன் மோடியை குற்றவாளியாக்கி ஒரு படமல்ல ஒரு காட்சியாவது இதுவரை நீங்களும்,உங்கள் சினிமாக்காரர்களும் பதிவு செய்யாதது ஏன் கமல்?/// அவங்களுக்கு எதிரா சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்தாலே கைது செய்து உள்ள அனுப்பிடுவாங்க..! நீங்க என்னங்க சினிமா எடுக்க சொல்றீங்க?? :) :)

  பதிலளிநீக்கு
 12. விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தாலும் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பது உண்மை.

  விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்த தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்த ஹசன் முகம்மது ஜின்னா, விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


  >>>>>> விஸ்வரூபம் தணிக்கைக் குழுவின் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்.

  .

  பதிலளிநீக்கு
 13. முஸ்லிம்களால் நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் காட்டுவதற்கு முயலும் முனைப்பை, முஸ்லிம்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் காட்டுவதற்கு ஏன் முதுகெலும்பில்லை? என்று கேட்பதற்கு நாதியில்லை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ஹாஜா @உதயம்
   பம்பாய்,ஹேராம் படத்தில் முஸ்லிம்கள கொல்லப்படுவதை காட்டவில்லையா?
   வானம் திரைப்படத்தில் ஒரு இந்துவால்தான் ஒரு முஸ்லிம் தீவிரவாதியாகவும்,ஒரு முஸ்லிம் தொடர்ந்து நல்லவனாகவும் இருப்பதுபோல் காட்டினார்களே அதை பார்க்கவில்லையா?
   . இசுலாமியர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறீர்கள்.
   பாபர் மசூதி இடிப்பையோ, குஜராத் கலவரத்தையோ தமிழக இந்துக்கள் யாரும் நியாயப்படுத்தவில்லை.
   ஆனால் ஒசாமா பின்லேடனுக்கும், அஜ்மல் க்சாபிர்க்கும்,தாலிபானுக்கும் சிலபல தமிழ்நாட்டு முஸ்லிம்கள் ஏன் ஆதரவு அளிக்கின்றனர் என்று கூறினால் நலம்.

   நீக்கு
  2. அதேபோல்தான் எந்த தீவிரவாத செயல்களையும் தமிழக முஸ்லிம்கள் நியாய படுத்தவில்லை....ஒசாமாவுக்கு இங்கு ஒரு சிலர் தொழுகை நடத்திய போது தமிழக முஸ்லிம்கள் அதை எதிர்த்தார்கள் என்பதையும்,நானும் அதை எதிர்த்து பதிவிட்டு இருந்தேன் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்....

   நீக்கு
  3. //ஒசாமாவுக்கு இங்கு ஒரு சிலர் தொழுகை நடத்திய போது தமிழக முஸ்லிம்கள் அதை எதிர்த்தார்கள் என்பதையும்,நானும் அதை எதிர்த்து பதிவிட்டு இருந்தேன் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்....//
   இப்படி நீங்கள் செய்திருந்தால் அதை வரவேற்கிறேன்......
   ஆனால் ஒசாமாவிற்கு ஆதரவு தெரிவித்தவர்களும்,கசாபிர்க்கு ஆதரவு தெரிவித்தவர்களும்,தாலிபானுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும்
   இந்த விசுவரூபத்தை எதிர்ப்பதால் தான் இதன் பின்னணியில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை.
   நன்றி

   நீக்கு
 14. சலாம்!

  மாஷா அல்லாஹ்! சிறந்த கருத்துக்கள்.

  பதிலளிநீக்கு

 15. தீவிரவாதிகள் அனைவரும் மனிதர்களே அல்ல..மிருகங்கள்......அப்புறம் ஏன் அவர்களை ஒரு மதத்தோடு சம்பந்தப்படுத்துகிறீர்கள்?//// நச்சு நச்சு .............அருமையான பதிவு அண்ணே

  பதிலளிநீக்கு
 16. //தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்காக எந்த ஒரு குறிப்பிட்ட மதமும் பொறுப்பாகாது...
  தீவிரவாதிகள் அனைவரும் மனிதர்களே அல்ல..மிருகங்கள்......அப்புறம் ஏன் அவர்களை ஒரு மதத்தோடு சம்பந்தப்படுத்துகிறீர்கள்?//
  சகோ நீங்கள் மதப்பிரச்சாரம் செய்வதில்லை எனபதால் தான் உங்களிடம் கேட்கிறேன்......
  குர்ஆனில் பிற சமூகத்தவருக்கு எதிராக சில கருத்துக்கள் உள்ளதே அதை பற்றி தாங்கள் அறிவீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குர்ஆனில் உள்ள எல்லாவற்றையும் ஆரோக்கியமாக விவாதிக்க என்னைவிட நன்கு அறிந்த முஸ்லிம் பதிவர்கள் இருகிறார்கள் சகோ....உங்கள் விவாதத்தை அங்கு வைத்து கொள்ளலாம்...தவிர பிற மத கடவுள்களை திட்ட வேண்டாம் என்ற வசனம் குர்ஆனில் உள்ளது என்பதையும் உங்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்....

   நீக்கு
  2. நன்றி சகோ, என்னுடைய கேள்வி உங்களை சங்கடப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

   நீக்கு
 17. சலாம் சகோ!

  //உலகத்தில் நடந்ததை ,நடப்பதை தானே படமாக எடுத்தேன் என கூறும் நீங்கள் இந்தியாவில் நடந்த இந்த சம்பவங்களையும் படமாக எடுத்து இருக்கலாமே?இனியாவது எடுக்கலாமே?முடியுமா உங்களால்?//

  'படைப்புரிமை', 'கலை', கருத்து சுதந்திரம்' என்று இரண்டு, மூன்று வார்த்தைகளை வைத்தே ஒண்ணும் தெரியாத மாதிரி கதை அளப்பவர்களுக்கு இதெல்லாம் புரியுமா சகோ?!! கேட்டால் நீங்க எடுக்க வேண்டியது தானே.. என்கிறார்கள். சமயோஜிதமா கேட்பதாக நினைப்பு போல‌! தப்பு செய்பவர்களையும், ஒட்டு மொத்த மக்களையும் ஒரே தட்டில் வைத்து, வேண்டுமென்றே பாமர மக்களிடம் விஷம் பரப்ப, நாம ஒண்ணும் அவங்க இல்லையே..?

  உங்க பதிவையும் என் தொகுப்பில் சேர்த்துள்ளேன் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம் சகோ.அஸ்மா..!

   தொகுப்பில் சேரும் பதிவுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகுது போல..! :-))

   நீக்கு
 18. ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விஸ்வரூபம் கலை அல்ல களை..

  தன்னை கலைஞனை மிஞ்சியும் ஒரு சமூக ஆர்வலனாக காட்டிக்கொள்ளும் கமல் இந்த படத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய தேவையற்ற எதிர்மறையான பிம்பம் உண்டாகும் என்பதை கொஞ்சமும் எண்ணி பார்க்காமல் இதை படம் பண்ண நினைத்தது, காசுக்கு எதையும் தின்னும் கடைந்தெடுத்த வியாபார புத்தி.

  இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தாக்கும் அமெரிக்காவும், அமெரிக்கர்களை தாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுமே இரண்டு கட்சிகள்.

  அப்படி இருக்க முழுக்க முழுக்க அமெரிக்காவின் தாக்குதல்களை மட்டுமே நியாயப்படுத்தும் நிலைப்பாடு கமல்ஹாசன் உடுத்திய நடுநிலை வேடத்தின் நிர்வாணம்.

  கிட்டத்தட்ட படத்தில் வரும் அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக, முட்டாள்களாக காட்டியிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்.

  அதிலும் சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது என்று காட்டுகிறார்.

  இது ரொம்பவே நைச்சியமாக (Subtle ஆக) சில நொடிகளே காட்டப்படுகிறது என்றாலும் இது கடைந்தெடுத்த ஊடக விபச்சாரம் அன்றி வேறு இல்லை.

  ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை..

  தொடக்கம் முதல் கடைசி வரை அமெரிக்காவின் ஜால்ராவாகவே இருக்கும் திரைக்கதை திட்டமிட்டே அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்காவின் அயல்நாட்டு போர்களை வியந்தோதும் படங்களுக்கே ஆஸ்கார் விருதுகள் குவியும் என்பதனை இப்போது தான் கமல் புரிந்து கொண்டார் போலும்.

  வியட்நாமில் அமெரிக்காவின் அட்டூழியங்களை நியாயப்படுத்தி, வியட்நாமிகளை நாகரீகமற்ற மனிததன்மையற்ற கொடூரர்களாக சித்தரித்த The Deer Hunter படம் பெற்ற 5 ஆஸ்கார் விருதுகளும்,

  ரசாயுன ஆயுதம் இருப்பதாக கதை கட்டி ஈராக் என்ற நாட்டின் தலைவனை கொன்று, அதன் பொருளாதார அடித்தளத்தை சீர்குலைத்த அமெரிக்க படைகளின் அத்துமீறல்களை மெய்சிலிர்க்க பாராட்டிய Hurt Locker படம் பெற்ற 6 ஆஸ்கார் விருதுகளும் உதாரணங்கள்.

  இந்தியாவை பிச்சைக்கார நாடு, கொலைகார அயோக்கிய நாடு (இது முற்றிலும் உண்மை என்பது வேறு கதை) என்று காண்பித்ததை தவிர வேறு எதையும் கிழிக்காத Slumdog Millionaire பெற்ற விருதுகளும் இதே வகைதான்.

  ஒருவேளை கமலின் நீண்டகால ஆஸ்கார் கனவு இதனால் நனவாகலாம்.

  இத்தனை அசிங்கங்களையும் ஒரு சேர கண்ட பின் கமலின் ஆஸ்கார் கனவை கேட்டால் வயிற்றை குமட்டி வாந்தியே வந்துவிடும் போலிருக்கிறது.

  , கமல்ஹாசன் புதுமையை புகுத்தவே DTHல் ஒளிபரப்ப முயன்றார் என்று நம்புவது சிறிது கடினமாய் இருக்கிறது.

  ஆனால் DTH ல் வெளியிடுவதன் மூலம் லாபம் குறைந்தாலும், கோடிக்கணக்கான மக்களை அவரின் அமெரிக்க ஆதரவு பரப்புரை எளிதில் சென்று சேர்ந்துவிடும் என்பது திண்ணம்.

  இவ்வகையில் தொலைக்காட்சி மூலம் மக்களை அடைந்து “முஸ்லீம் எல்லாம் பெரும்பாலும் தீவிரவாதிதான்” என்று பாமர மக்களை சொல்ல வைப்பது தமிழ்நாட்டில் ரொம்ப எளிது.

  இதில் கமலுக்கு என்னதான் லாபம்?

  ஒரு வழக்கமான சந்தேக பிராணி இப்படி தான் யோசிப்பான் : “அமெரிக்கா என்கிற பெரியண்ணன் உலகில் பல்வேறு இடங்களில் தனக்கான பரப்புரையை பல வகையிலும் செய்து வருகிறார்.

  இந்தியாவில் அவர்களின் முதல் முயற்சியாகக்கூட இது ஏன் இருக்கக்கூடாது?

  தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான் தீவிரவாதி கதை தமிழ்நாட்டுக்கு எதுக்கு?

  கமலின் இந்த பிரச்சாரம் வெறும் கலை சேவை மற்றும் ஆஸ்கார் ஆசையை தாண்டிய விஷயமாக ஏன் இருக்கக்கூடாது?

  மக்கள் கொடுக்கும் 5 ரூபாய் 10 ரூபாயை வச்சி போராடுரவனை எல்லாம் அமெரிக்க கைகூலிங்குறான்.

  ஆனால் கைல இருந்து 80 கோடிய போட்டு கிட்டத்தட்ட அமெரிக்க ராணுவம் மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு படத்தை, கமல் ஏன் எடுக்கணும்னு தோணுது!”

  இந்த படம் வெளியாக வேண்டும்.

  தமிழ் மக்கள் அதை பார்த்து கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

  கமல்ஹாசன் உட்பட இந்த படத்தின் மூளையாக செயல்பட்ட அத்துணை பேரையும் மக்கள் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும்.

  அநேகமாக தடை நீக்கப்பட்டு வெளியிடப்படும்.

  உடனடியாக தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ள இயக்கங்கள், அமைப்புகள் இந்த படத்தை பொது மக்கள் புறக்கணிக்கும்படி பரப்புரை செய்ய வேண்டும்.

  இத்தகைய படத்தினால் விளையக்கூடிய தீமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

  பொருளாதார ரீதியாக வெற்றியடைய விடாமல் வீழ்த்த வேண்டும்

  இது உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சூர்ய பிரகாஷ் தங்கசாமி அவர்களின் முகநூலில் இருந்து பகுதி இது…….

  >>>>>> முழுதும் படிக்க

  THANKS TO SOURCE: http://manithaabimaani.blogspot.com/2013/01/blog-post_27.html

  பதிலளிநீக்கு
 19. நன்றி ! நன்றி! நன்றி!
  விஸ்வரூபம் படத்தை வெற்றியடைய செய்ய அடித்து கொண்ட , அடித்துக்கொள்ளவுள்ள அனைத்து ஆதரவு மற்றும் எதிர்கருத்துக்கொண்ட அன்பருக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ. எவ்வளவு பெரிய வெற்றியா இருந்தா இணையதளங்கல்லனா வெளிவந்துரிச்சின்னு வாயிலையும் வயித்துலயும் அடிசிகிட்டு ராஜ்கமல் பிலிம் போலீசிடம் புகார் கொடுத்திருக்காங்க..!!

   நீதி : அடுத்தவர் உள்ளங்களை காயப்படுதுவோர் தன் உள்ளங்களையே காயப்படுதிக்கொள்கின்றனர்..(நியூட்டனின் மூன்றாம் விதி )

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 20. இதுதான் நேரடி விவாதத்திற்கும், இணைய விவாதத்திற்கும் உள்ள பிரச்சினையே , ஒருத்தன் கருத்து கூறினான் என்றால் அவன் என்ன மனநிலையில் கருத்து கூறினான் என்பது எளிதில் விவாரிக்க முடியாது. நான் 2006 முதல் தமிழ் வலைபூக்களை படித்து வந்தாலும் ,இதுவரை எந்தவொரு கருத்தையும் கூறவில்லை, நான் ஒரு மௌன பார்வையாளரே , என்னுடைய இந்த id யே இன்றுதான் கருத்து பகிர உருவாக்கப்பட்டது .

  என் இடத்தில் இணைய தொடர்பு சரியில்லாத காரணத்தினால் என் கருத்தை மெதுவாகவே கூற இயலும் .

  ( யாரையும் காயப்படுததாமல் எந்தவொரு கருத்தையும் கூற இயலாது ) மன்னிக்கவும் இதுதான் நீக்கப்பட்டுள்ள கருத்தில் கூறப்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
 21. நான்( நான் மட்டுமல்ல நம்மில் பலரும் ) இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை ஆதனால் எது சரி , சரியில்லை என்று கூற இயலாது. ஆனால் இதுவரை படித்த விமர்சனங்களின் மூலம் நான் அறிந்தது "படம் ஹாலிவூட் தரத்தில் உள்ளது , ஆனால் பாமர மக்களுக்கு புரியாது ".

  எனவே இந்த படத்தை திரையரங்களில் வெளியிட்டு இருந்தால் ' கண்ணா லட்டு திங்க ஆசையா ' போன்ற வெகுசன மக்களுக்கு பிடித்த படங்களின் முன் தாக்குபிடிக்க முடியாமல் சில நாட்களிலே இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும் . ஆனால் இப்போது இந்த படத்திற்கு கிடைத்த இலவச விளம்பரத்தால் பலரும் இந்த படத்தில் என்னதான் உள்ளது என்று பார்க்க விரும்புவதால் கமலை பொறுத்தவரை வெற்றியே .

  பதிலளிநீக்கு
 22. பட்டையை கிளப்பியது பொதுக்கூட்டம் :

  அல்ஹம்துலில்லாஹ் !!! பட்டையை கிளப்பியது ரிசானா , விஸ்வரூபம் சம்பந்தமான மாபெரும் பொதுக்கூட்டம்..! மூன்று மணிநேரம் நடந்த விளக்க உரையில் ஒவ்வொன்றும் எதிர் கருத்து உள்ளவர்களின் முகமுடியை கிழித்து எரியக்கூடியதாக அமைந்தது.!

  பிஜே பேசிய அனைத்தும் பதிவாக இடவேண்டியவை ...! ரிசானா விவகாரம் சம்பந்தமாக அற்புதமான விளக்கம் கோவை ரஹ்மத்துல்லாஹ் அளித்தார்..! அதை மீண்டும் கேட்பதற்கு ஆன்லைன் பிஜே வின் அப்டேட்டுக்காக காத்திருக்கிறேன்..இன்ஷா அல்லாஹ் அனைவரும் பாருங்கள்..!

  விஸ்வரூபம் முடிந்து விட்டதாகவே நினைக்கிறேன்..இன்ஷா அல்லாஹ்.!

  பதிலளிநீக்கு
 23. மேலும் நீங்கள் தங்களது மதம் சார்ந்த கருத்தை என்ன நியாயபடுத்தி கூறினாலும் தற்போது தங்கள் மதம் குறித்து உலகளாவிய மக்களிடையே உருவகபடுத்தபட்ட பிம்பங்களின் முன் நீங்கள் என்ன கூறினாலும் எடுபட போவதில்லை. தற்போது இந்த பிரச்சனையானது யாருக்கு தேசபக்தி அதிகம் என்று வேறு திசையில் செல்வதால் இதனால் எல்லாதரப்பு மக்களும் பாதிக்கபடுவர் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சற்று பொறுத்திருந்துதான் பாருங்களேன்..! தவிர விஸ்வரூபம் குறித்து அறிய கீழ்காணும் தலத்தில் போய் பாருங்கள் சகோ.

   http://manithaabimaani.blogspot.com/2013/01/blog-post_27.html

   நீக்கு
  2. \\ஆனாலும் நல்ல படமா இல்லையா என்று தீர்மானிக்கும் பொறுப்பு பொது மக்களுக்கே விடப்பட வேண்டும்//
   நன்றி: http://manithaabimaani.blogspot.com/2013/01/blog-post_27.html
   இதைத்தான் நானும் கூறுகின்றேன் தற்போது மக்களுக்கு உள்ள பல பிரச்சனைக்கிடையே அவர்கள் விரும்புவது நல்ல பொழுதுபோக்கு படமே தவிர பிரசாரபடம் இல்லை. இந்த படத்தை கண்டுகொள்ளாமல் இருந்தால் நிச்சயம் இது கமலுக்கு தோல்வி படமாகவே இருக்கும் .

   நீக்கு
  3. * டேம் 999 என்ற படம் சென்சார் அனுமதித்த போதும் மக்கள் மத்தியில் வரவில்லை..

   * குற்ற பத்திரிக்கை எனும் படம் சென்சார் அனுமதித்த போதும் மக்கள் மத்தியில் வரவில்லை...

   * தி டாவின்சி கோட் திரைப்படம் சுப்ரீம் கோர்டே திரை இடலாம் என்று சொன்ன பின்பும் இந்திய திரை அரங்குகளில் திரை இடப்படவில்லை..

   * 1987 வருடம் "ஒரே ஒரு கிராமத்திலே " எனும் படம் சென்சார் அனுமதித்து திரை அரங்கு வர அனுமதிக்கவில்லை..!

   இன்னும் உண்டு ..இவை எல்லாத்தையும் முதலில் கொண்டுவந்துவிட்டு பிறகு கூறுங்கள் ..பரிசீலிப்போம்...!

   நீக்கு
 24. பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
  தூய தமிழ் நாட்காட்டி வாங்க
  அணுகும் முகவரி :
  சின்னப்ப தமிழர்
  தமிழம்மா பதிப்பகம் ,
  59, முதல் தெரு விநாயகபுரம்,
  அரும்பாக்கம் , சென்னை- 600106 .
  அலைபேசி - 99411 41894.

  பதிலளிநீக்கு
 25. விஷரூப கருத்தால் தோலுரிக்கப்படும் பாரதிராஜா, ராமதாஸ்,
  தா.பாண்டியண் மற்றும் .....


  விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ்,
  தா.பாண்டியண், கமலஹாசன் பதில்கள் முறைதனா?

  விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா? உங்களுக்கு மட்டும் தான் கருத்து சுதந்திரமா?


  கமலஹாஸன், பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண் இவர்களுக்கு மட்டும் தானா க‌ருத்து சுதந்திரம் ?

  இங்கு சொடுக்கி >>>> தோலுரிக்கப்படும் பாரதிராஜா, ராமதாஸ்,
  தா.பாண்டியண் மற்றும் .....  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....