23 டிசம்பர் 2012

சிறுமி சீரழித்து கொலை....டெல்லியபோல ஏன் தமிழகம் குலுங்கவில்லை ?


கடந்த இரண்டு  நாட்களில் மட்டும் தமிழகத்தில் சிறுமிகள்  2 பேர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்...

தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள தாதன்குளத்தை  சேர்ந்த பள்ளி மாணவி புனிதா என்ற சிறுமி ஒரு காம வெறி கொண்ட நாயினால் சிதைக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டு இருக்கிறாள்...குற்றவாளியை கைது செய்துவிட்டார்கள்..பள்ளி சீருடையோடு அந்த சிறுமி கொலையுண்டு  கிடப்பதை  பார்க்கும்போது மனசு வலிக்கிறது ...அந்த கொடூரனை உடனே நடு ரோட்டில் வைத்து தூக்கில் போடவேண்டும் என மனது அடித்து கொள்கிறது ...

அதே போல  நாகையில் வீட்டில் தனியாக  இருந்த 4 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை இரண்டு நாய்கள் சீரழித்து உள்ளனர்...அந்த நாய்களையும் கைது செய்துவிட்டனர்...
ஆனால் நம் தமிழகம் இந்த சம்பவங்களை  ஒரு செய்தியாக மட்டுமே பார்க்கிறதே ?இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?இறந்து போன அந்த சிறுமியின் ஊர்காரர்களும்,உறவினர்களும் மட்டுமே குற்றவாளியை தண்டிக்க சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ..மற்றவர்கள் எல்லாம் செய்தியை படித்து பரிதாப பட்டதோடு சரி...அட போங்கய்யா ...இதே மாதிரி நாளை நம் வீட்டில் நடக்காது என்பதற்கு என்னய்யா உத்தரவாதம்?

ஒரு பெண் சீரழிக்க  பட்டதற்காக டெல்லி குலுங்கியதை போல ஏன் தமிழகம் குலுங்கவில்லை ?

டெல்லி சம்பவத்திற்காக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடந்து வருவதை போல ஏன் தமிழகத்தில் ஏன் இதுவரை மாணவர்கள் போராட்டம் நடக்கவில்லை..?

டெல்லி சம்பவத்தை  கண்டித்து நாடாளுமன்றத்தில்  கட்சி பாகுபாடு இல்லாமல் எம் பி க்கள் சீறியதை போல ஏன் தமிழகத்தில் இந்த சிறுமிகளுக்கு நடந்த அவலத்தை கண்டித்து சட்ட மன்ற உறுப்பினர்கள்,அரசியல் கட்சி தலைவர்கள் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை?

தொலைகாட்சிகள்,பத்திரிக்கைகள் கூட இந்த சம்வத்தை கண்டிக்காமல் வெறும் செய்தியாகவே ஏன் காட்டி வருகின்றன?

டெல்லி சம்பவத்தில் பாதிக்கபட்ட அந்த பெண்ணாச்சும் உயிரோடு இருக்கிறார்..ஆனால் இங்கு ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டு இருக்கிறாள் ....கற்பழிப்புகளில் கூட தலைநகரம்,சாதாரண கிராமம் என ஏன் இந்த பாகுபாடு?இந்த சம்வம் ஏன் நாடு முழுக்க எடுத்து செல்லப்பட வில்லை...?

நம் மக்கள் இந்த  சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவலத்தை கண்டித்து எப்போது போராட போகிறார்கள்?

அந்த காம கொடூர நாய்களை நடு ரோட்டில் வைத்து தூக்கில் போட சொல்லி இந்நேரம் தமிழகம் ஸ்தம்பித்து இருக்க வேண்டாமா ?

கேள்விகள் மட்டுமே என்னுள் எழுகின்றன ....வேற என்ன சொல்ல?!.....

 அரசாங்கத்திற்கு ஓரே ஒரு கோரிக்கை: ஒரு தடவ இந்த குற்றவாளிகளை மக்கள் முன் தூக்கில் போடுங்கள்..பிறகு பார்ப்போம் இது மாதிரி அவலங்கள் நடக்கிறதா இல்லையா என!.....

அரசியல்வாதிகளே  நீங்கள் பெண்களுக்கு 33%இட ஒதுக்கீடு கூட கொடுக்க வேண்டாம்..முதலில் பெண்களுக்கும்,சிறுமிகளுக்கும் பாதுகாப்பு கொடுங்கள்!

15 கருத்துகள்:

 1. டெல்லி இந்தாவில் இருக்குங்க தமிழ்நாடு என்ன இந்தியாவிலா இருக்கு...

  அங்க இருக்கிறது தான் மானம் இங்க...


  இந்த மானங்க கெட்ட மீடியாக்களும் ஒருதலைப்பட்சமாவே பேசிவருகிறது. இன்னும் இருக்கிறது நகரம் கிராமம் என்ற பாகுபாடு..

  இந்தியாவில் இருக்கும் ஒவ்வொறுவருயை பிரச்சனையையும் ஒரே பிரச்சனையாக கையாளும் வரை இந்தியா வல்லரசை நோக்கி நகராது...


  இதுபோன்ற நபர்களை மரண தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும்

  பதிலளிநீக்கு
 2. சரியான கருத்து ....இந்த சம்பவத்தோடு இதற்கு முற்றுபுள்ளி கிடைக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 3. தயவு செய்து தூக்கில் போடாதீர்கள்...அந்த வலி அவனுக்கு உடனே முடிந்து விடும். அதை விட கொடுமையான தண்டனை என்னவென்று யோசித்து குற்றவாளிக்கு வழங்கப்பட வேண்டும். டெல்லியில் இருப்பது போன்ற பரபரப்பு ஏன் தமிழ்நாட்டில் இல்லை எனில்?? பிணத்தின் மீது அரசியல் செய்யும் ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் ஒரு சில பத்திரிகைகள் இங்கே இருப்பதுதான் காரணம்!! தமிழக மக்களுக்கு இதெல்லாம் சாதாரணமான ஒன்று, மின்வெட்டைப் போல..

  பதிலளிநீக்கு
 4. ஏனென்றால் நான் நாயுடு,அவர் பிள்ளை,வன்னியர்...எல்லாத்துக்கும் மேலே நம்ம ஊரு போலிசு நம்ம மண்டையை பிளந்துவிடும்

  பதிலளிநீக்கு
 5. நாகை, தூத்துக்குடி சம்பவங்களைப்பற்றி அறியாதோர் முதன்முதலாக உங்கள் பதிவைப் படித்தால், என்னவோ வெறிநாய் கடித்து அந்தப்பெண் இறந்துவிட்டதாகவே நினைப்பர்.

  மனித நாய்கள் என்றெழுதினால் குழப்பமில்லை. நாய்கள் வேண்டுமென்றே ஒருவரைத் துன்புறுத்தி இன்புற கடிப்பதில்லை. தற்காப்புக்குத்தான்.

  அடுத்து உங்கள் கேள்வி: "நம் மக்கள் இந்த சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவலத்தை கண்டித்து எப்போது போராட போகிறார்கள்?"

  தமிழ‌க‌த்தில் இத‌ற்கு முன் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்திருக்கின்ற‌ன‌. அவ்வ‌ப்போது பிற‌ மாநில‌ங்க‌ளிலும் ந‌ட‌ப்ப‌துண்டு. இத‌ற்குப் பின்னாலும் ந‌ட‌க்கும். தூக்கில் போட்டாலும் ந‌ட‌க்கும்.

  கார‌ண‌ம்; குடிபோதை. தூத்துக்குடி மாண‌வியைக் கொன்ற‌வ‌ன் வாக்குமூல‌த்தின்ப‌டி, குடிபோதையில் அப்பெண்ணைப்பார்த்துக் கையைப் பிடித்து இழுத்த‌தாக‌வும் அவள் க‌த்திய‌தாக‌வும் பின்ன‌ர் தன்னைப் ப‌ற்றிச் சொல்லிக்கொடுத்துவிடுவாளோயென்று அவ‌ள் துப்ப‌ட்டாவை வைத்து க‌ழுத்தையிறுக்கி கொன்ற‌தாக‌வும் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

  இப்போது உங்க‌ளுக்கொரு கேள்வி: இன்னொரு நாள் இப்ப‌டி ஒரு பெண் த‌னித்து ஒரு கிராம‌ச்சாலையில் செல்ல‌, அப்போது குடிபோதையில் ஒருவ‌ன் பார்க்கிறான். அவ‌ன் என்ன‌ ஏற்க‌ன‌வே ப‌ல பேருக்கு தூக்குத்த‌ண்ட‌னைக‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. இவ‌ளை வ‌ன்புணர்ந்தால் த‌ன‌க்கும் தூக்குதான் என்று நினைக்க‌ முடியுமா? குடிபோதையில் உள்ள‌வ‌ன் எப்ப‌டிச் சிந்திப்பான்? குடிபோதையில் தாய்க்கும் தாரத்துக்கும் வேறுபாடு தெரியாது என்பார்களே?

  தில்லியில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் வேறான‌ பாங்குக‌ளை உடைய‌து. அதையும் இதையும் இணைக்க‌ முடியா. அங்குள்ள‌ பேருந்து ஓட்டுன‌ர்க‌ள்; ந‌ட‌த்துன‌ர்க‌ள்; அவ‌ர்க‌ள் தோழ‌ர்க‌ள் பொதும‌க்க‌ளைத் துச்ச‌மாக‌ எண்ணுப‌வ‌ர்கள்! உங்களால் தில்லியில் வாழ்ந்து அனுபவப்படாமல் இதைப் புரியமுடியாது.

  சுருங்கச் சொன்னால், த‌மிழ‌க‌த்தில் ந‌ட‌ப்பதைத் த‌டுக்க‌ முடியாது. ஏனென்றால், ஒரு ந‌ட‌மாட்ட‌மில்லா கிராம‌ச்சாலையில் த‌னியே செல்லும் பெண்ணுக்கு போலீசு பாதுகாப்பு கொடுக்க‌ முடியாது. கொடுக்க‌ வேண்டுமென்று நீங்க‌ள் சொன்னால், நாட்டில் இருவ‌ருக்கு ஒரு போலீசு வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த அறிவு ஜீவியும் இந்த செய்தியை படித்து அது எந்த நாய் என குழம்ப மாட்டார்கள்...நீங்கள் குழம்பி விட்டீர்களா இல்லையா என எனக்கு தெரியவில்லை..டெல்லியில் பறிபோனதும் கற்புதான் இங்கும் கற்புதான்..இங்கு கூடுதலாக உயிரிழப்பு வேற....கற்பழிப்பை காரணங்கள் சொல்லி வேறுபடுத்த முடியாது....நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு பேசுங்கள்...இன்று அந்த குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தால் நாளை நிச்சயம் கற்பழிப்புகள் குறையும்..அல்லது இருக்காது..இந்த சம்பவத்தை கண்டித்து நீங்கள் பேசாமல் கூட இருங்கள்..இதுமாதிரி குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசி கொண்டு இருக்காதீர்கள்...!

   நீக்கு
  2. # நாய்கள் வேண்டுமென்றே ஒருவரைத் துன்புறுத்தி இன்புற கடிப்பதில்லை. தற்காப்புக்குத்தான்.#

   இப்படி அப்பட்டமாக அந்த கொடூர நாய்க்கு சப்போர்ட் பண்ணி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்தது..குடிகாரன் தவறு செய்தால் அது குற்றமில்லையா?குடிபோதையில் கற்பழித்தால் அவனை விட்டுவிடலாமா?எந்த குடிகாரன் குடி போதையில் தாயையும்,தாரத்தையும் வித்தியாசம் இல்லாமல் பார்த்தான் என சொல்ல முடியுமா?எல்லாம் அவர்களுக்கு தெரியும்...இனி இந்தமாதிரி கருத்துக்களோடு இந்த பதிவில் நீங்கள் பின்னூட்டமிட வேண்டாம்...

   நீக்கு
 6. சரியான கேள்விகள்.
  எனக்கு இதற்க்கான பதில்கள் தெரியும். இருப்பினும் வேண்டாம் என்று விட்டுவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. டில்லியில் இருப்பவர்கள் உப்புப் போட்டு சாப்பிடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 8. இதுதாங்க நாம் முக்கியமாக அலசி ஆராய வேண்டியது. டெல்லியில் நடந்தது போன்று பல வன்புணர்வுகள் இந்தியாவில் நடந்துள்ளது. நடந்துகொண்டும் இருகிறது.. இந்த சிறுமிக்கு நடந்தது போல் கணக்கிலடங்கா வன்புணர்களும் கொலைகளும் தமிழகதில் மட்டுமில்லாது இந்தியா முழுதும் நடந்துள்ளது.. இதற்கெல்லாம் ஏன் நமது மீடியாவும் மக்களும் கொதித்தெலவில்லை என்ற கேள்விக்கு கிடைக்கும் விடை.. நமது சமூகத்தின் அவலத்தை தோலிரித்துக் காட்டும். அதைதான் கமலும் அந்த கயவர்களை 'தனது சகோதரன்' என்று சொல்வதில் உணர்துகிறார் என்று படிகிறது. இந்தத் துணிவு கமல் மாதிரி ஒரு சிலருக்குத்தான் வரும்.

  டிஸ்கி: நான் நிச்சயமாக கமல் ரசிகன் இல்லை

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....