18 டிசம்பர் 2012

"மிசா எனும் நெருக்கடி நிலை "ஏன் ?எதற்கு?எப்படி??இந்தியாவில் நெருக்கடி நிலை எனும் மிசா இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் அமுலில் இருந்தது என நமக்கு தெரியும்..ஆனால் நெருக்கடி நிலை எதனால், நடைமுறை படுத்தப்பட்டது என இதுவரை தெரியாதவர்கள் அறிந்து கொள்ள இந்த  பிளாஷ்பேக்கை பார்ப்போம்..

1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அவருடன் போட்டியிட்டு தோற்ற ராஜ்நாராயண் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 1975 ஜுன் 12ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஜெகன்மோகன் சின்கா தீர்ப்புக் கூறினார். "இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது" என்பதே அந்தத் தீர்ப்பு.மத்திய அரசின் கெஜட் பதவி பெற்ற அதிகாரியான யஷ்பால் கபூரை, இந்திரா காந்தி தன் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது.

போலீசாரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திரா காந்தி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. " இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.

தேர்தல் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் இந்திரா காந்தி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று சர்வோதய தலைவர் ஜெயப்பிரகாசர், ஸ்தாபன காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான மொரார்ஜி தேசாய், சோசலிஸ்டு கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பலர் அறிக்கை விடுத்தனர்.

அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திரா காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் "இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராகச் செயல்படலாம். அவர் பிரதமராக நீடிப்பதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் சட்டங்கள் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, ஓட்டுப்போட அவருக்கு உரிமை இல்லை."என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது ...


 எனவே இந்திரா காந்தி  "ராஜினாமா செய்வதில்லை" என்று தீர்மானித்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், "இந்திரா காந்தியை பதவியை விட்டு விரட்டும் வரை ஓயப்போவதில்லை" என்று அறிவித்தனர். அவரை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி ஜுன் 29ந்தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர்.

இந்நிலையில் தனக்கு  எதிராக ராணுவத்தினரும், போலீசாரும் புரட்சி நடத்தவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசியுள்ளார் என்றும், தன்னை  வீட்டை விட்டு வெளியேற விடாதபடி "முற்றுகை போராட்டம்" நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் உளவுத்துறை ரிப்போர்ட் இந்திரா காந்திக்கு கிடைத்தது...


"நீங்கள் பதவி விலகினாலும் உங்கள் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள்.

சும்மா இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்வார்கள். உள்நாட்டுக் கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதுதான் ஒரே வழி"என 
அப்போது மேற்கு வங்காள முதல் மந்திரியும்,சட்ட நிபுணருமான  சித்தார்த்த சங்கர் ரே இந்திரா காந்தியிடம் கூறினார்...(அல்லது அப்படி கூறுமாறு வலியுறுத்தபட்டு இருப்பார்!)


நீண்ட நேரம் இந்திரா காந்தி ஆலோசனை நடத்திய இந்திரா காந்தியும்,அவரது மகன் சஞ்சய் காந்தியும் மிசாவை அமுல்படுத்துவது  என முடிவெடுத்தனர்... 

1975 ஜுலை 25ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது.
 "நெருக்கடி நிலை கொண்டு வந்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே இருந்தால் முன்பைவிட அதிக தீவிரமாக கலவரத்தில் ஈடுபடுவார்கள்.
எனவே இரவோடு இரவாக அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும். நெருக்கடி நிலை'யில் எதிர்க்கட்சி தலைவர்களைக் காரணம் காட்டாமல் கைது செய்யலாம். அத்துடன் பத்திரிகைகளுக்கு தணிக்கை ("சென்சார்") முறையை கொண்டுவரவேண்டும்" என்றார் சஞ்சய் காந்தி ..(என்னா ஒரு வில்லத்தனம்?!)

அதை ஏற்ற இந்திரா காந்தி இந்தியா முழுவதிலும் தனக்கு எதிராக உள்ள கட்சி தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்டார் ....

பத்திரிகைத் தணிக்கையும் அமுலுக்கு வந்துவிட்டதால், தலைவர்கள் கைது பற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் இடம் பெறவில்லை.(இப்ப மாதிரி அப்ப facebook ,twitter ,நம்மை போன்ற பிளாக்கர்கள் இருந்து இருந்தால் ?!என்ன இதையும் தடை செய்திருப்பார்கள்..!)
அதாவது பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பிரசுரிக்க தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. (நானே ராஜா நானே மந்திரி என்பதன் சுருக்கம்தான் மிசா!)

இதுதான் மிசா எனும் நெருக்கடி நிலை அமுலில் இருந்த வரலாறு..(தகவல்களுக்கு நன்றி:காலச்சுவடுகள் )


6 கருத்துகள்:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்,

  ஒ இவ்ளோ விசயம் நடந்திருக்கா :-) வரலாற்றை நினைவுபடுத்தியதற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 2. எமெர்ஜென்சி சமயத்தில் பல நல்ல விசயங்களும் நடந்தன.அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்கள் கைநீட்ட (லஞ்சம்) பயந்தார்கள் லஞ்சம் தர நாம் முயன்றால் கூட மறுத்தார்கள் அரசு துறைகள் வங்கிகள் சரியான நேரத்துக்கு இயங்கினது.பொது மக்கள் கூட போக்குவரத்து விதிகளை பின்பற்றினார்கள்.இன்னும் எவ்வளவோ கருத்து சுதந்திரத்தை தவிர மற்றவை அனைத்தும் நன்றாகவே நடந்தது.காரணம் பயம்.அடியாத மாடு படியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது யதார்த்தமாக இருந்தாலும் நடைமுறையில் எமர்ஜென்சி நம் சுதந்திரத்தை நசுக்குவது போலவே எனக்கு படுகிறது

   நீக்கு
 3. வெள்ளைக்காரன் காலத்தில் எல்லாமே super ஆய் இருந்ததாக பெருசுகள் சொல்லும்,ஆகவே வெள்ளைகாரனை திரும்பவும் வரசொல்லி காயிதம் போடலாமா?

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....