பொதுவாக நம் பதிவர்களிடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது.....ஒரு பிரபல பதிவர் ஒரு படத்தை நல்லவிதமாக எழுதிவிட்டால் அதை தொடர்ந்து அப்படத்தை பற்றி விமர்சனம் எழுதும் பதிவர்களில் முக்கால்வாசி பேர் அப்படத்தை நல்லவிதமாக எழுதுகிறார்கள்....
அதே நேரத்தில் ஒரு படத்தை பற்றி நெகடிவ்வாக பிரபலமான யாராவது ஒருவர் எழுதிவிட்டால் அந்த படம் நன்றாகவே இருந்தாலும் மற்ற பதிவர்களும் படம் மோசம் என்ற விதத்திலே எழுதி விடுகின்றனர்....சில பேரை தவிர்த்து....
சமிபத்திய உதாரணம்...நீதானே என் பொன்வசந்தம் படம்... சுமாரான இந்த படத்தை பலரும் படு மோசம் என்ற விதத்திலே விமர்சனம் எழுதிவிட்டனர்...
இப்பொது சமர்....
பீட்சா படத்தை விட படு விறுவிறுப்பான ,த்ரில்லான இந்த படத்தை பற்றி இதுவரை வந்த விமர்சனங்கள் எதிர்மறையாகவே உள்ளன...
இந்த படத்தில் உள்ள...சில ஓட்டைகளை தவிர்த்து பார்த்தால் படம் த்ரில் நிறைந்த விறுவிறுப்பான படமே....
விமர்சனத்தை படிக்காமல் ,கதை தெரியாமல் இந்த படத்தை பார்த்தால் யாராலும் அடுத்து வரும் காட்சிகளை யூகிப்பது கஷ்டம்...அந்த அளவுக்கு திரைக்கதையில் அசத்தி இருக்கிறார்கள்...
தனது காதலியை தேடி பேங்காங் வரும் விஷால் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதை....அடுத்தடுத்த காட்சிகளை யாரும் யூகிக்க முடியாமல் திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு சென்று இருகிறார்கள்...
படத்தில் விசாலுக்கு இரட்டை வேடமோ,பழசை எல்லாம் மறந்து இருப்பாரோ என படம் பார்க்கும்போது எழும் எண்ணங்கள் அனைத்தும் தவிடு பொடியாகின்றன உண்மை தெரியும்போது....
ஆனால் இந்த படத்தை பற்றி பதிவுலகில் வந்த விமர்சனங்கள் படம் சரியில்லை என்ற தோற்றத்தையே உருவாக்கி இருக்கின்றது...அதுதான் ஏன் என்று எனக்கு புரியவில்லை..ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதையே விமர்சனம் எழுதும் சக பதிவர்களும் அதே எண்ணத்தை பிரதிபலிப்பதுபோல் இருக்கிறது பதிவுலகின் சினிமா விமர்சனங்கள்...
அவரே நல்லா இல்லைன்னு எழுதி விட்டார்..எனவே நாமும் நல்லா இல்லைன்னு எழுதினால்தான் சரி என்ற மனோபாவம் நம் தனித்தன்மையை கேள்வி குறி ஆக்குகின்றன என்பதே உண்மை...எனவே நம் மனதுக்கு பிடித்ததை நல்ல படம் என்றும் ,பிடிக்காததை சரி இல்லை என்றும் எழுதும் விமர்சனம்தான் சரியாக இருக்கும்....
அந்த வகையில் மாறுபட்ட கதையமைப்பில் ,முந்தய எந்த படத்தின் சாயலும் இல்லாமல் வந்து இருக்கும் சமர் த்ரில் பிரியர்களுக்கு திருப்தி அளிக்கும் நல்ல படம் ...
சமர் = ஜோர்
| Tweet |
.jpg)